பொருள் விரிவாக்கம்

‘மனிதநேய ஒன்றிணைவு’ 50,000 குடும்பங்களுக்கு ரூ. 125 மில்லியனுக்கும் அதிகளவான பெறுமதியினை கொண்ட அவசரகால நிவாரணங்களை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த அவசரகால நிவாரண நடவடிக்கையுடன் இணைந்துக்கொள்ளமாறு அனைத்து நிறுவனங்களையும் அழைக்கிறோம்

ஜுன் 20, 2022         கொழும்பு

 

Manudam Mehewara

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘மனிதநேய ஒன்றிணைவு’ அவசரகால நிவாரண முயற்சியானது 2022 ஜூன் 7, நிலவரப்படி நாடளாவிய ரீதியில் உள்ள அவசர நிவாரணம் தேவைப்படும் 50,000 குடும்பங்களுக்கு ரூ.125 மில்லியன் பெறுமதியான பொருட்களை விநியோகித்ததன் மூலம் இரண்டாவது மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த செயற்றிட்டமானது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, CBL Group, Citi மற்றும் Sunshine Holdings PLC ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடும் 200,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ITN, சியத, சுவர்ணவாஹினி, டிவி தெரண மற்றும் வசந்தம் ஆகியவை ஊடக பங்காளராக இந்த முயற்சிக்கு அதரவினை வருகின்றன.

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் அவசரகால நிவாரணங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பொருளாதார மீட்சித் திட்டத்தின் மூலம் நாட்டில் நிலையான நன்மைகள் நிலைநாட்டப்படும் வரை 'மனிதநேய ஒன்றிணைவு' திட்டமானது அதன் நிவாரண நடவடிக்கைகளைத் தொடரும். நாடளாவிய ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 200,000 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான எமது கூட்டு முயற்சியில் எங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

'மனிதநேய ஒன்றிணைவு' பற்றிய மேலதிக விபரங்களுக்கு https://www.dialog.lk/corporate க்கு செல்லுங்கள்.