Governance

மையக் கோட்பாடுகள்


கூட்டு நிறுவன ஆளுகை தொடர்பிலான அத்தியாவசிய எட்டு (8)பிரதான கோட்பாடுகள்.

கோட்பாடு 1 : பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் உரிமை பத்திரத்தின் தாபிப்பு

பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் உரிமை பத்திரத்தின் மூலம் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பொறுப்புகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டியது பற்றிய விபரங்களை கொண்டுள்ளது. குறித்த உரிமைப்பத்திரம் பின்வரும் பிரதான கூறுகளை கொண்டுள்ளது:

1.1 சபையின் சட்டம்

கம்பனியின் தலைமைத்துவத்தின் பொறுப்புகள் பற்றி தெளிவான பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும், இதன் மூலம் பணிப்பாளர் சபையை கொண்டு நடத்துவது மற்றும் கம்பனியின் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் சமமான அதிகாரம் வரையறுக்கப்பட்டிருக்கும். எந்தவொரு தனி நபருக்கும் தடங்கலற்ற தீர்மானமெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்க முடியாது. More (PDF)

1.2 பணிப்பாளர் சபைக்கான நியமனங்கள்.

முதலீட்டாளர்களின் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் வகையில், பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பில் முறையான, கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகள் காணப்படுகின்றன. More (PDF)

1.3 தகவல்களை பெற்றுக்கொள்ளல்

பணிப்பாளர் சபைக்கும் ஏனைய பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கும் முறையான வகையிலும், பொருத்தமான தரத்திலும், பணிகளை பகிர்ந்தளிக்கும் வகையில், காலம் தாழ்த்தாமல் தகவல் வழங்கப்படும். More (PDF)

1.4 செயற்திறன் மதிப்பீடு மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி

தனது சொந்த ஒன்றிணைந்த, மற்றும் தனிநபர் செயற்பாடுகள், நிர்வாகத்தின் மற்றும் அதன் கழகங்களின் பிரதான அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் வருடாந்தம் முறையான மற்றும் கண்டிப்பான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும். More (PDF)

1.5 மீளத்தெரிவாதல்

அனைத்து பணிப்பாளர்களும் மீள்தெரிவுக்காக குறித்த இடைவெளிகளில் அவர்களின் திருப்திகரமான செயற்திறனுக்கு அமைய சமர்ப்பிக்கப்பட வேண்டும். பணிப்பாளர் சபையை புதுப்பிப்பது தொடர்பில் திட்டமிட்டு செயற்படுத்துவது சபையின் பொறுப்பாகும். More (PDF)

கொடுப்பனவின் அளவு மற்றும் உள்ளடக்கம் போன்றன போதியளவில் இருப்பதும், ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அத்துடன், இது கூட்டாண்மை மற்றும் தனிநபர் செயற்திறனுடன் தொடர்புடையதாக அமைந்திருப்பதை உறுதி செய்யவும். எந்தவொரு பணிப்பாளரும் தனது சொந்த கொடுப்பனவு தொடர்பில் தீர்மானிப்பதில் ஈடுபடக்கூடாது. More (PDF)

கம்பனியின் நிதி அறிக்கையிடலை சுயாதீனமாக சரிபார்த்து பாதுகாப்பது தொடர்பில் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கல். நிதி அறிக்கையிடலை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு கோட்பாடுகள் மற்றும் கம்பனியின் கணக்காய்வாளர்களுடன் பொருத்தமான உறவை பேணுவது தொடர்பில் ஏற்றுக் கொள்ளக்கூடிய, வெளிப்படையான ஏற்பாடுகளை சபை முன்னெடுக்க வேண்டும். More (PDF)

கம்பனி பணிப்பாளர்கள் மற்றும் பிரதான அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பில் ஒழுக்க விதிமுறை ஒன்றை கம்பனி தெளிவுபடுத்த வேண்டும். (உதாரணம். ஒருங்கமைவு, கொள்கை மற்றும் வர்த்தக செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் நிதி செயற்திறனில் பங்களிப்பு வழங்குவோர்) இந்த விதிமுறைகளை பின்பற்றுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். கம்பனி பங்குகளில் கையாள்வதில் ஈடுபடும் பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்கள் தொடர்பில் கம்பனியின் நிலைப்பாடு தொடர்பான அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட வேண்டும். More (PDF)

கம்பனியின் இடர் உருவமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்ம் பெறுமதி சேர்ப்பதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பது, இடர் இனங்காணல், மதிப்பிடல் மற்றும் கையாளல் தொடர்பில் உள்ளக கட்டுப்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளக கணக்காய்வு முறைகளை நிறுவுவது. More (PDF)

பங்குதாரர்களின் உரிமைகளுக்கு கம்பனி மதிப்பளிக்க வேண்டும். அத்துடன் பங்குதாரர்களுடன் அடிக்கடி தொடர்புகளை பேணுவதுடன், பொதுக்கூட்டங்களில் பங்குபற்றச் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். More (PDF)

அனைத்து சட்டப்படியான பங்காளர்களின் பங்காளர்கள், பங்குதாரர்கள் அல்லாத பங்காளர்களான ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள் ஆகியோர் மற்றும் சமூகத்தின் ஈடுபாட்டை கௌரவித்தல் மற்றும் கூட்டாண்மை செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்டல். More (PDF)

கம்பனியின் உரிமையாண்மை, நிதிப் பெறுபேறுகள் மற்றும் மேலாண்மை தொடர்பிலான சகல விடயங்களையும் உள்ளடக்கிய விபரங்களை பிரசுரிக்க வேண்டிய நடைமுறை ஒன்றை கம்பனி பின்பற்ற வேண்டும். கொழும்பு பங்குச்சந்தை விதிமுறைகளுக்கமைய பங்குதாரர்கள் தேவையான போது பார்வையிடக்கூடிய வகையில் இவை சமர்ப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். நடுநிலையான என்பது நேர்த்தியான மற்றும் பாதகமான விபரங்கள் சகலதையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். More (PDF)

சம்மேளனங்களின் அறிக்கைகள்

கம்பனியின் சட்டதிட்ட விதிகள் இறுதியாக ஜூன் 10,2010ல் திருத்தி அமைக்கப்பட்டது.

Download PDF
சம்மேளனங்களின் அறிக்கைகள்
Legal Resources

Legal Resources

Learn More

ABAC Policy and Policy Statement

Dialog Axiata is committed to conducting business with zero tolerance to any form of bribery and corruption

Learn More
ABAC Policy and Policy Statement

Whistle-blowing

Upholding our core value of "Uncompromising Integrity", we have provided a channel for our employees,
shareholders, suppliers and customers to voice their concerns in an effective, responsible and secure manner.

Whistle-blower web reporting


Whistle-blower web reporting system

(Available English, Sinhala and Tamil)