பொருள் விரிவாக்கம்

Dialog OnMobile நிறுவனத்துடன் இணைந்து ONMO எனப்படும் மொபைல் Cloud Gaming Platform ஐ அறிமுகப்படுத்துகிறது

2022 ஜுலை 07         கொமும்பு

 

Dialog Partners OnMobile to Launch Mobile Cloud Gaming Platform ONMO

டயலொக் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான, அதிவேகமான   கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காக ONMO (www.onmo.dgl.lk) ஐ அறிமுகப்படுத்த இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மொபைல் பொழுதுபோக்குகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான OnMobile உடன் இணைந்து கொண்டது.

cloud streaming, social Esports மற்றும் Artificial Intelligence (AI) ஆகியவற்றை கொண்ட மொபைல் கேமிங் தளமான ONMO ஆனது, டயலொக் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு action, arcade, racing, adventure, puzzles மற்றும் பல வகைகளை உள்ளடக்கிய 60க்கும் மேற்பட்ட அற்புதமான மொபைல் கேம்களுக்கான அணுகலை ஒவ்வொரு வாரமும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ONMO மற்றும் அதன் பரந்த அளவிலான கேம்கள் அனைத்தையும் மாதத்திற்கு ரூ. 399 +வரிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும். ONMO இன் Vision AI engine, டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியமின்றி ஒரு சமூக தளத்தில் அனைவரும் அணுகும் வண்ணம் Esports ஐ வழங்குகிறது.  மேலும் பல அற்புதமான அம்சங்களுடன் short, curated game moments மற்றும் virtual rewards உடன், சமூக விளையாட்டு அம்சத்தையும் இந்த தளம் வழங்குகிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு அதிகாரி அந்தோனி ரோட்ரிகோ, இந்த சமீபத்திய மொபைல் கேமிங் அனுபவம் குறித்து பேசியபோது“எங்கள் பங்காளரான OnMobile உடன் இணைந்து இலங்கையில் வர்த்தக கிளவுட் கேமிங் தளத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதில் டயலொக் பெருமைக்கொள்கின்றது. இந்த கிளவுட் கேமிங் தளமானது ஸ்மார்ட்போன்களுக்காகவும், டயலொக்கின் 4G மொபைல் மற்றும் ஹோம் புரோட்பாண்ட் வலையமைப்புகளில் தடையின்றி இயங்குவதற்கும் உகந்ததாக காணப்படுகின்றது. எதிர்காலத்தில் அனைத்து இலங்கையர்களுக்கும் கிளவுட் கேமிங்கிற்கு 5G தொழில்நுட்ப திறனை  வழங்க கூடியதாக இருக்கும் என்பதில்  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ONMO இன் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் சேஷாத்ரி கருத்து தெரிவிக்கையில், "இந்த பிராந்தியத்தில் கிளவுட் கேமிங்கிற்கு செல்லும் இடமாக ONMO உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் முதல் கிளவுட் கேமிங் தளத்தை அறிமுகப்படுத்த டயலொக் உடன் இணைந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ONMO – குறுகிய, நன்கு வடிவமைக்கப்பட்ட கேமிங் தருணங்கள் மற்றும் அனைவரும் விளையாடக்கூடிய virtual rewards போன்ற  அம்சங்கள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்குடன்   கேமிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு டயலொக் வழங்கும்."