பொருள் விரிவாக்கம்

Dialog வெற்றிகரமாக 'Google I/O Extended Sri Lanka 2023' தொழில்நுட்ப நிகழ்வை நடத்தியது

2023 மே 12         கொழும்பு

 

Suwa Seriya 1990

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில், Dialog Axiata PLC மற்றும் Ideamart ஆகியன ஒன்றிணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Google I/O Extended Sri Lanka 2023’ என்ற தொழில்நுட்ப நிகழ்வை கடந்த மே 10 ஆம் திகதியன்று Trace Expert City யில் நடத்தியது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI), கூகுளின் அறிமுகமான BARD AI மற்றும் ஜெனரேட்டிவ் AI ஆகியவற்றுடன், கூகுளின் பெரும்பாலான தயாரிப்பு வழங்கல்களில் கட்டமைக்கப்பட்ட ‘Google I/O Extended Sri Lanka 2023’ நிகழ்வு, நூற்றுக்கணக்கான நேரடி பார்வையாளர்களையும் தாண்டி ஒன்லைனில் 250,000 பார்வையாளர்களை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது Google Device portfolio விலிருந்து பாரிய வெளிப்பாடுகளைக் காட்சிப்படுத்தியது. குறிப்பாக, இதில் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் முதலாவது மடிக்கக்கூடிய பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) மொபைல் ஃபோனும் அடங்கியிருந்தது. ஓர் அற்புதமான 7.6 அங்குல நெகிழ்வுமிகு நவீனமயப்படுத்தப்பட்ட கெமரா அமைப்புடன் கூடிய OLED Display கொண்ட மேற்படி Pixel Fold மொபைல் ஃபோன் 12GB RAM மற்றும் 512GB வரையிலான உள்ளக சேமிப்பு உட்பட Google சேவைகளின் தொகுப்புடன் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவற்றை கொண்டதாக அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்தகைய மடிக்கும் தன்மை கொண்ட Pixel Fold மொபைல் ஃபோனுக்கு மேலதிகமாக இந்த டெவலப்பர் மாநாட்டில் Pixel 7A Android smartphone மற்றும் smart home control இற்காக வடிவமைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Pixel Tablet உள்ளிட்ட பிற புதிய சாதனங்களும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Suwa Seriya 1990

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை பகுப்பாய்வாளரும் செயற்கை நுண்ணறிவு அதிகாரியுமான டொக்டர் ரொமேஷ் ரணவன 'செயற்கை நுண்ணறிவு புரட்சியைத் தழுவுதல்' (Embracing the AI revolution) எனும் தலைப்பிலும், Axiata Digital Labs இன் DTE தலைவர் உடக்க கப்பகொட ‘GSMA திறந்த நுழைவாயிலை ஆய்வு செய்தல்’(Exploring the GSMA Open Gateway ) எனும் தலைப்பிலும் , R-FACTORY இன் தலைமை நிர்வாக அதிகாரி ரக்ஷித கசுன் 'Metaverse: Web3 சகாப்தத்தில் டிஜிட்டல் தொடர்புகளின் எதிர்காலம்' (Metaverse: The Future of the Digital Interaction in the Web3 era) எனும் தலைப்பிலும் ஆற்றிய பலவிதமான தகவல் மற்றும் நுண்ணறிவுமிக்க தொழில்நுட்ப விடயங்களை உள்ளடக்கிய உரையாற்றல்களையும் பார்வையாளர்கள் கேட்டு, ரசித்து அனுபவித்தனர். இந்நிகழ்வு Dialog இன் உத்தியோகபூர்வ Facebook பக்கம் மற்றும் YouTube செனல் மற்றும் Dialog Television இல் அலைவரிசை ஒன்று (செனல் எண். 126) ஆகியவற்றினூடே நேரலையில் ஒளிபரப்பப்பட்டது, இதன் மூலம் அனைத்து இலங்கையர்களும் Google I/O Extended Sri Lanka 2023 ஐ அதன் அனைத்து மகிமைகளுடன் அனுபவிக்க முடிந்தது.

"எதிர்காலம் இன்றே என்பதை வழங்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக அந்த உறுதிப்பாட்டின் வலுவூட்டலாக Google I/O Extended Sri Lanka 2023 ஐ நடத்தியதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் " என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும தலைமை புத்தாக்க அதிகாரியும் தலைமை கட்டிட வரைகலை கலைஞருமான அந்தோனி ரொட்ரிக்கோ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடத்திற்கான நிகழ்வானது, நாம் வாழும் உலகை மாற்றத்தக்க தொழில்நுட்பமிகு செயற்கை நுண்ணறிவில் வலுவான கவனம் செலுத்தி சமீபத்திய தொழில்நுட்ப போக்குகளை காட்சிப்படுத்தியது. தகவலறியும் அமர்வுகள் மற்றும் ஊடாடும் அனுபவங்கள் மூலம், பங்கேற்பாளர்கள் பிரபலமான செயற்கை நுண்ணறிவு இயங்குதளங்களைக் கற்கவும், ஆராயவும், தழுவிக்கொள்ளவும், ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் வலைத்தொடர்பு கொள்ளவும் மற்றும் வரம்பற்ற எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறவும் வழியமைத்துள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

Suwa Seriya 1990