பொருள் விரிவாக்கம்

தேசிய தொழில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா 2022 க்கு Dialog Enterprise அனுசரணை வழங்கியது

பெப்ரவரி 08, 2022         கொழும்பு

 

Channa Amarasekara Explaining the ICT solutions provided by Dialog Enterprise

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வளர்ந்து வரும் வர்த்தகப் பிரிவின் தலைவர் சன்ன அமரசேகர, இலங்கை பிரதமர் கௌரவ திரு. மஹிந்த ராஜபக்க்ஷ, கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச, மற்றும் பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரசன்ன ரணவீர, டயலொக் எண்டர்பிரைஸ் குழும பிரதம அதிகாரி நவீன் பீரிஸ் ஆகியோருக்கு டயலொக் எண்டர்பிரைஸ் வழங்கும் ICT தீர்வுகள் குறித்து தெளிவுப்படுத்துவதை படத்தில் காணலாம்.

Navin Pieris explaining the ICT solutions provided by Dialog Enterprise

டயலொக் எண்டர்பிரைஸ் வழங்கும் ICT தீர்வுகள் குறித்து டயலொக் எண்டர்பிரைஸ் குழுமத்தின் பிரதம அதிகாரி நவீன் பீரிஸ் அவர்கள் கம்பனி தோட்ட மறுசீரமைப்பு,தேயிலை தோட்டங்கள் தொடர்பான பயிர்கள், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் தொடர்பான பயிர்கள் சாகுபடி மற்றும் தொழிற்சாலைகள் நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. கனக ஹேரத் அவர்களுக்கு தெளிவுபடுத்துகின்றார். மேலும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. உபசேன திஸாநாயக்க அவர்களையும் படத்தில் காணலாம்.

இலங்கையின் கைத்தொழில்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிய இயல்புநிலையில் புத்துயிர் பெறுவதற்காக அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, டயலொக் எண்டர்பிரைஸ் ஆனது 2022 'தேசிய கைத்தொழில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழாவிற்கு அனுசரணை வழங்கியது. இந் நிகழ்வானது பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷ, கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச மற்றும் பிரம்பு, பித்தளை, மட்பாண்டம், மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, டயலொக் எண்டர்பிரைஸ் குழும பிரதான அதிகாரி நவீன் பீரிஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வளர்ந்து வரும் வர்த்தகத்தின் தலைவர் சன்ன அமரசேகர, டயலொக் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நசீம் மொஹமட் மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏனைய முக்கியஸ்தர்கள் முன்னிலையில் 2022 தேசிய தொழில் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. உபசேன திஸாநாயக்க, “நாட்டில் பாரிய தொழிற்துறை மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு வெற்றிகரமான படியாக இந்த நான்கு நாள் தேசிய கைத்தொழில் கண்காட்சியை நடாத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தொழில்துறை மறுமலர்ச்சி முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கான எங்கள் பகிரப்பட்ட பார்வையில் எங்களுடன் இணைந்ததற்காக எங்களின் அனுசரணையாளர் - டயலொக் எண்டர்பிரைஸ் மற்றும் உத்தியோகபூர்வ ஃபின்டெக் பங்காளர் - டயலொக் ஃபைனான்ஸ் மற்றும் கொடுப்பனவு பங்காளர் - டயலொக் genie ஆகியோருக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என மேலும் தெரிவித்தார்.

நாட்டின் 20 தொழில் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 300 க்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்களை கொண்ட இந்த கண்காட்சி, தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கும், தொற்றுநோயின் பாதகமான விளைவுகளிலிருந்து மீள்வதற்கும் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு உதவுவதற்காகவும் நடத்தப்பட்டதுடன் இந்த கண்காட்சியில் 20,000 க்கும் அதிகளவான பார்வையாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. டயலொக் எண்டர்பிரைஸ் உடன், டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி மற்றும் டயலொக் genie உத்தியோகபூர்வ பங்காளராகவும் FinTech கொடுப்பனவு பங்குதாரராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை நிறுவனங்களை புதிய இயல்புநிலையில் சிறந்த டிஜிட்டல் தீர்வுகள் மூலம் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்க உதவும்.