விலைப்பட்டியலுடன் இணைக்கும் வசதியுடனான ஒரே நாளில் மருத்துவ காப்புறுதிகளுக்கான ஆதரவு திட்டம்.


ஒரே நாளில் மருத்துவ காப்பறுதியை பெறுவதற்கான ஆதரவு திட்டமானது பெயார்பெஸ்ட் காப்புறுதி நிறுவனத்தினால் BIMA இலங்கை காப்புறுதி தரகர்கள் தனியார் நிறுவனத்தின் கூட்டிணைவுடன் Dialog வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்த காப்புறுதித்திட்டமானது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து பண உதவியை வழங்கும் என்பதோடு, அரசாங்க வைத்தியசாலை, பதிவுசெய்யப்பட்ட தனியார் வைத்தியசாலை, அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலை அல்லது பதிவுசெய்யப்பட்ட தனியார் ஆயுர்வேத வைத்தியசாலை என மேற்குறிப்பிட்ட எந்த வகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து ஆகக் கூடுதலாக 30 நாட்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட காலத்தினுள் பணம் செலுத்தப்படும்.

மேலே கூறப்பட்டவற்றிற்கு மேலதிகமாக மருத்துவமனை ஆதரவு திட்டத்தை முதல் தடவையாக பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் அறவிடப்படாமல் விசேடமான டெங்கு பாதுகாப்பு வசதியினையும் பெற்றுக்கொள்ள முடியும். டெங்கு பாதுகாப்பு வசதியுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் டெங்கு நோய் அறிகுறியுடையவர்கள் என கண்டறியப்பட்டால் அவர்கள் 12,500/= வரையான பண உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும் அந்த இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நோயுற்றவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

இந்தச் சேவையானது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனால் வருமானமின்றி அவதிப்படும் பாலிசிகாரர்களுக்கு (வாடிக்கையாளர்களுக்கு) பணரீதியான உதவியை வழங்கவேண்டும் என்ற நன்னோக்கில் விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப மருத்துவமனை ஆதரவு திட்டத்தினை DIalog நிறுவனத்தின் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருவருமே பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு இந்த திட்டமானது பாலிசிதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமே அன்றி அவரை சார்ந்தோருக்கு வழங்கப்படாது என்பது குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதொன்றாகும். குடும்ப மருத்துவ ஆதரவு திட்டத்தினூடாக தனது துணை மற்றும் ஆகக் கூடுதலாக 3 பிள்ளைகளுக்கு இந்த வசதியினை பெற்றுக்கொள்ள முடியும். (dialog பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது).


விலை நிர்ணயம்

மருத்துவ ஆதரவு திட்டத்திற்கான சந்தாக் கட்டணம் (வரிகள் தவிர்த்து)

திட்டம்

ஒவ்வொரு நாள் செலவிற்கான நாளாந்த கொடுப்பனவு (ரூபா)

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான நாளாந்த சந்தாக் கட்டணம்(ரூபா)

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான மாதாந்த கட்டணம்(ரூபா)

ஆரம்பம்

1200

6.19

185.74

வெள்ளி

4000

N/A

518.42

தங்கம்

6500

N/A

806.43

*சந்தாக் கட்டணமானது வாடிக்கையாளரின் (பாலிசிதாரரின்) தொலைபேசி கட்டணத்திலிருந்து அறவிடப்படும்.


கொரோனா ( தொற்றுநோய் பரவல் திட்டம் )

கொரோனா நோய் தொற்றில் காரணமாக மருத்துவ உதவியை பெற்றுக் கொண்டதற்கான இழப்பீடு பின்வரும் அட்டவணையில் வரையறுக்கப்பட்ட அளவின்படி வழங்கப்படும்.
குறிப்பு - இழப்பீட்டை பெற வேண்டுமாயின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது கட்டாயமாகும்.

திட்டம்

ஒவ்வொரு நாள் செலவிற்குமான நாளாந்த கொடுப்பனவு( ரூபா)

ஒவ்வொரு ஆண்டிற்குமான அதிகூடிய தொகை( ரூபா )

ஆரம்பம்

1200

10,000

வெள்ளி

4000

12,000

தங்கம்

6500

14,000

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக.

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் அவர்கள் பதிவுசெய்த தினத்திலிருந்து விகிதாசார அடிப்படையில் அவர்களுக்கான கட்டணம் அறவிடப்படும். வாடிக்கையாளர் கட்டணம் அறவிடப்பட்டிருக்கும் நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த திட்டமானது விகிதாசார அடிப்படையில் கணக்கிடப்படும்.

இந்த திட்டத்திலிருந்து முழு தொகையையும் இழப்பீடாக பெற வேண்டுமாயின் மாதாந்த கட்டணம் முழுவதுமாக செலுத்தப்படல்வேண்டும். மாதாந்த கட்டணம் பகுதியளவில் மாத்திரம் செலுத்தப்படுமாயின் ஒரு குறிப்பிட்ட விகித அடிப்படையிலான தொகையையே அந்த மாதத்திற்காக பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைபேசி மீள்நிரப்புதலானது இணையவழி மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் முற்கொடுப்பனவு திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமாயின் நாளாந்த கட்டணமானது அறவிடப்படமாட்டாது. ஏற்றுக்கொள்ளதக்கதான நாளாந்த கட்டணமானது சாதாரண மீள்நிரப்பு அட்டைகள் அல்லது ரீலோட்கள் மூலம் மட்டுமே அறவிடப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு அந்த குறித்த மாதத்தில் பெற்றுக்கொள்ள முடியுமான தொகையை குறிப்பிடும் குறுஞ்செய்தி (sms) ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும்.

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக

வாடிக்கையாளர் இந்த சேவையை பதிவு செய்த நாளிலிருந்து மாதத்தின் மொத்த கட்டணமும் இதற்காக அறவிடப்படும் என்பதோடு முழு காப்பீட்டு தொகையும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டபின் வாடிக்கையாளர் அடுத்த மாதம் முதல் முழு தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு அந்த குறித்த மாதத்தில் பெற்றுக்கொள்ள முடியுமான தொகையை குறிப்பிடும் குறுஞ்செய்தி (sms) ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும்.


பலன்கள் ஆரம்பம்

முதலாவது மாத காப்பீட்டின் முழுத்தொகையும் செலுத்தப்பட்ட பின்னர் நன்மைகள் தொடங்கும். முதல் மாத காப்பீடு முழுவதுமாக செலுத்தப்பட்டால், பாலிசிதாரர் அடுத்துவரும் மாதத்தின் முதல் நாளிலிருந்தே நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். சந்தாதாரர்கள் குறிப்பிட்ட மாதத்திற்கான காப்பீட்டை வெற்றிகரமாக செலுத்தினாராயின் அந்த காப்பரறுதி திட்டமானது தானாகப்புதுப்பிக்கப்படும்.


நான் இந்த சேவையை எப்படி செயல்படுத்துவது?
 

1343 க்கு அழையுங்கள்
Monday – Saturday (Except Sunday, POYA Day & Mercantile Holiday)
9:00AM to 5:00PM


இழப்பீட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள்
 

1343 க்கு அழையுங்கள்.
Monday – Saturday (Except Sunday, POYA Day & Mercantile Holiday)
9:00AM to 5:00PM


தேவையான தகவல்கள்

 
  • பூரணப்படுத்தப்பட்ட இழப்பீட்டு விண்ணப்ப படிவம்

  • முழுவதுமாக நோய் கண்டறியப்பட்ட அட்டையின் பிரதி.

  • ஆளுறுதிப்படுத்தும் ஆவணப்பிரதி (தேசிய அடையாள அட்டை /சாரதி அனுமதிப்பத்திரம்).

  • டெங்கு நோய்க்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பின்வருவன கட்டாயம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

  • பதிவு செய்யப்பட்ட தனியார் வைத்தியசாலையின் NSI அன்டிஜன் பரிசோதனையின் பொசிடிவ் முடிவு வந்த பெறுபேறு கட்டாயமானதாகும். (NSI அன்டிஜன் பரிசோதனை அறிக்கையில் நோயாளியின் பெயர் மற்றும் வயது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்).

  • NSI அன்டிஜன் பரிசோதனை மூலமாக டெங்கு நோய் கண்டறியப்பட்ட திகதியானது நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தினமாகவோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முந்திய தினமாகவோ இருத்தல் கட்டாயமானதாகும்.

  • நோயாளி கட்டாயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டிருக்க வேண்டும்.

  • அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் NSI அறிக்கை கட்டாயமில்லை.

மருத்துவ பண இழப்பீடு விண்ணப்படிவம். - [PDF]

 
குறிப்புக்கள

  • வாழ்க்கை பாதுகாப்பிற்காக காப்புறுதி வழங்குபவர்- பெயார்பெஸ்ட் காப்புறுதி நிறுவனம் .

  • சேவை வழங்குனர்- BIMA லங்கா காப்புறுதி தரகர்கள் தனியார் நிறுவனம்

  • வயதெல்லை-

     
    • உள்ளீர்ப்பதற்கான ஆகக் குறைந்த வயது 18 வருடங்கள்( சரியான வயது)

    • ஆகக் கூடிய வயது-64 வருடங்கள் (அடுத்த பிறந்தநாள் வயது)

    • திட்டம் முடிவுறும் வயது- 65 வருடங்கள் .(சரியான வயது)

  • இழப்பீட்டிற்கான கோரிக்கைகள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி 90 நாட்களுக்குள் முன்வைக்கப்பட வேண்டும். நிறுவனமானது பின்வரும் காரணங்களுக்கான மருத்துவத்திற்கு பணம் வழங்குவதற்கு எந்த விதத்திலும் பொறுப்பாகாது .

  • அழகுபடுத்துவதற்காக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒப்பனை சிகிச்சைகள் / அறுவை சிகிச்சைகள்.

  • கர்ப்பம் ,குழந்தை பிறப்பு அல்லது பிறப்பு கட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக ஏற்படும் சிக்கல்களின் போது இத்திட்டத்திற்கு உள்ளீர்க்கப்பட்டு தொடர்ச்சியாக 9 மாதங்கள் பணம் செலுத்தியபின்னரே சேர்க்கப்படும் .

  • புவியியல் எல்லைகள் :-இந்த கொள்கையின் கீழ் வழங்கப்படும் அனைத்து நன்மைகளும் இலங்கை நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் மருத்துவ தேவைகளுக்கு மாத்திரமே வழங்கப்படும்.

கொள்கை ஆவணங்கள் - [PDF]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Is COVID-19 covered under this Insurance policy?

மருத்துவமனைப்படுத்தல் ஆதரவு திட்டத்தின் நன்மைகள் என்ன?

கொள்கையின் கீழ் உள்ள விலக்குகள் என்ன?

மருத்துவமனைப்படுத்தல் அதரவு திட்டத்திற்கான உரிமை கோரல் நடைமுறைகள் என்ன?