டயலொக் டெலிவிஷன் (பிரைவேட்) லிமிட்டட்
முற்கொடுப்பனவு சந்தாதாரர்; நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் டயலொக் டெலிவிஷன் (பிரைவேட்) லிமிட்டட் (“டயலொக்”) வழங்குகின்ற சேவைகளின் ஏற்பட்டை நிர்வகிக்கின்றன.

விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்வதானது சந்தாதாரர் இந்த நியதிகளையும் நிபந்தனைகளையும் வாசித்து, புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.

1. வரைவிலக்கணங்கள்

  • 1.1. “கணக்கு’ என்பது டயலொக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சந்தாதாரர் பிரத்தியேக கணக்கு எனப் பொருள்படும் என்பதோடு அத்தகைய கணக்கு சந்தாதாரரை சந்தா கட்டணத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கும்.
  • 1.2. ‘கணக்கு நிலுவை’ என்பது சந்தாதாரரின் கணக்கில் இருக்கக் கூடிய இலங்கை ரூபாயில் உள்ள வரவு நிலுவை என்று பொருள்படும்
  • 1.3. ‘உடன்படிக்கை’ என்பது காலத்துக்கு காலம் டயலொக் நிறுவனத்தால் மாற்றப்படக் கூடிய இத்தகைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப டயலொக் நிறுவனத்துக்கும் மற்றும் சந்தாதாரருக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகளுக்கான இந்த உடன்படிக்கை எனப் பொருள்படும்.
  • 1.4. ‘சந்தா’ என்பது சந்தாதாரரர் ஒருவரால் செலுத்த வேண்டிய டயலொக் சேவைகள் தொடர்பான ஏற்புடைய கட்டணங்கள் மற்றும்/அல்லது விதிப்பனவுகள் எனப் பொருள்படும்.
  • 1.5. ‘துண்டிக்கஃதுண்டித்தல்’ என்பது கணக்கை நிரந்தரமாக முடிவுறுத்தல் எனப் பொருள்படும்.
  • 1.6. ‘டயலொக்’ என்றால் டயலொக் டெலிவிஷன் (பிரைவேட்) லிமிட்டட் (PV 128) அல்லது அதன் சாட்டுதல்காரர்கள், பின்னுறுபவர்கள் மற்றும்/அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுபவர்கள் எனப் பொருள்படும்.
  • 1.7. ‘உபகரணங்கள்’ என்பது டயலொக் சேவைகளை அனுபவிக்க தேவையான செட்-டாப்-பாக்ஸ், டிஷ; அண்டெனா, லோ நொய்ஸ் பொக்ஸ், கேபள் மற்றும் ஏனைய பாகங்கள் ((set-top-box, dish antenna, low noise box, cable and other accessories) உள்ளிட்ட டயலொக் நிறுவனத்திலிருந்து சந்தாதாரரால் கொள்வனவு செய்யப்பட்ட டிஜிட்டல் செட்டலைட் சமிக்ஞை பெறுகின்ற கருவி எனப் பொருள்படும். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்கு, சிம் அட்டையை கருவியின் ஒரு பகுதியாகக் கருதப்படமாட்டாது.
  • 1.8. ‘டயலொக் சேவைகள்/சேவைகள்’ என்றால் டயலொக் வழங்கும் டிஜிட்டல் கொடுப்பனவு தொலைக்காட்சி சேவைகள் எனப் பொருள்படும்.
  • 1.9. ‘சிம் அட்டை’ என்பது டயலொக் சேவைகளை அணுகுவதற்கு டயலொக் மூலம் சந்தாதாரருக்கு வழங்கப்படுகின்ற சந்தாதாரர் அடையாள அலகு (Identity Module) ஆகும்.
  • 1.10. ‘சந்தாதாரர்/வாடிக்கையாளர்’ என்றால் அசல் கொள்வனவாளர்; (அதாவது பதினெட்டு (18) வயதுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது டயலொக் சேவைகளுக்காக பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனம் எனப் பொருள்படும்).
  • 1.11. ‘அணுகுதல் காலம்’ என்பது சந்தா செலுத்துவதற்கு போதிய கணக்கு நிலுவை இல்லாத நிலைக்கு வரும் வரை சந்தாதாரர் டயலொக் சேவைகளை அணுகக்கூடிய காலம் ஆகும்.
  • 1.12. ‘மீள்-இணைத்தல்’ என்பது நிலுவையான சந்தாவை செலுத்தும்போது டயலொக் இன் சுய விருப்பத்தின்படி சந்தாதாரரின் ஏற்கனவே இருக்கின்ற கணக்கில் டயலொக் சேவைகளை மீள் செயற்படுத்தல் என்பதாகும்.
  • 1.13. ‘மீள் நிரப்புதல் அட்டை’ என்பது சந்தாதாரர் கொள்வனவு செய்கின்ற மீள் நிரப்புதல் அட்டை என்பதாகும் அத்தோடு அத்தகைய அட்டை கணக்கு நிலுவையை நிரப்பிக் கொள்வதற்கு சந்தாதாரரை அனுமதிக்கிறது
  • 1.14. ‘விண்ணப்ப படிவம்’ என்பது உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்கின்ற தகவல்களை உள்ளடக்குவதன் மூலம் சந்தாதாரரால் முறையாக நிரப்பப்பட வேண்டிய டயலொக் தொலைக்காட்சி சந்தாதாரர் பதிவுப் படிவம் என்பதாகும்.
  • 1.15 “கேவைசீ (KYC) தகவல்கள்” என்பது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்பதாகும், இதில் முழு பெயர், பட்டியல் மற்றும் நிறுவுதல் முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம்;, கையடக்கத் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, தேசிய அடையாள அட்டையின், சாரதி அனுமதிப்பத்திரத்தின் அல்லது கடவுச்சீட்டின் இருபுறமும் உள்ள புகைப்படங்கள், ஒரு வியாபார விடயத்தில் அதன் பதிவு இலக்கம், சந்தாதாரரின் தெளிவான கையொப்பம் போன்றவை ஆகும்.
  • 1.16 “டிகோடர்” (Decoder) என்றால் பெட்டித் தொகுதி (Set of Box) எனப் பொருள்படும்
  • 1.17 “3ஆம் தரப்பு விற்பனையாளர்” என்பது ஏதேனும் டயலொக் சேவை நிலையம், உரிமையாளர் விற்பனை நிலையம், சீஎப்எஸ்எஸ் குழு உறுப்பினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையத்தின் எவரேனும் ஊழியர்கள் அல்லது ஆட்கள் தவிர்ந்த எவரேனும் ஏனைய நபரைக் குறிக்கிறது.

2. டயலொக் சேவைகள்

  • 2.1. டயலொக் பின்வருவனவற்றுக்கான உரிமையை தக்கவைத்துக் கொள்கின்றது:
    • 2.1.1. புதிய பொதிகளை (packages) அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற பொதிகளை காலத்துக்கு காலம் அதன் சொந்த விருப்பப்படி மாற்றுவதற்கும்:
    • 2.1.2. டயலொக் சேவைகளுக்கான திருத்தங்கள் அல்லது மாற்றங்களை அதன் சுய தீர்மானத்தின்படி செய்வதற்கும்:
    • 2.1.3. டயலொக் நிறுவனத்தின் சுய தீர்மானத்தின்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளையும் நிபந்தனைகளையும் ஒருதலைப்பட்சமாக மாற்றலாம், புதிய விடயங்களை சேர்க்கலாம் அல்லது திருத்தலாம்.
    • 2.1.4. டயலொக் நிறுவனத்தின் சந்தாதாரருக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்குவதற்காக எந்த நேரத்திலும் தகைமையுடைய ஒழுங்குறுத்துகை அதிகாரசபைகளுடன், சட்ட நீதிமன்றத்துடன் (வேண்டப்படுகின்றவாறு) அல்லது அதன் துணைக்கம்பனிகளுடன் மற்றும்/அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற கம்பனிகளுடன் அதன் தரவுத் தளத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
    • 2.1.5. எவ்வித காரணத்தை கூறாமல் அல்லது எந்தவொரு பொறுப்பையும் ஏற்காமல் 30 நாட்கள் அறிவித்தலைக் கொடுத்த பின்னர் இந்த உடன்படிக்கையை முடிவுறுத்தவும்; மற்றும்/அல்லது எந்த நேரத்திலும் டயலொக் சேவைகளிலிருந்து சந்தாதாரரைத் துண்டிக்கவும்:
    • 2.1.6. அணுகல் காலத்தின் முடிவில் சந்தாதாரருக்கு அறிவித்தல் வழங்காமல் டயலொக் சேவைகளை உடனடியாக துண்டிக்கவும்,
    • 2.1.7. (அ) சந்தாதாரர் சிம் அட்டையை தவறாக வைத்திருந்தால்;: அல்லது (ஆ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள் மற்றும் கடப்பாடுகளுக்கு சந்தாதாரர் முரணாக செயல்படுகிறார்;: அல்லது (இ) காலத்துக்கு காலம் டயலொக் மூலம் சந்தாதாரருக்கு அறிவித்தல் வழங்கப்படுகின்றவாறு: அல்லது (ஈ) தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு போன்ற ஒரு தகைமையுடைய ஒழுங்குறுத்துகை அதிகார சபையால் அவ்வாறு செய்யுமாறு வேண்டுகின்ற போது: அல்லது (உ) டயலொக் இன் வலையமைப்புக்குள்/உற்கட்டமைப்பிற்குள் தொழில்நுட்ப சிக்கல்களை டயலொக் அனுபவிக்கின்ற போது: அல்லது (ஊ) சந்தாதாரர் இறந்துவிடுகின்ற போது: அல்லது (எ) சந்தாதாரர் ஒரு பங்குடமைஃநிறுவனம் ஒன்றாக இருந்தால் மற்றும் அத்தகைய நிறுவனம் கலைக்கப்பட்டால் அல்லது ஒடுக்கப்பட்டால்: அல்லது (ஏ) சந்தாதாரர் வங்குரோத்தானவர் அல்லது கடனிறுக்க முடியாதவராக இருந்தால்: அல்லது (ஐ) பயங்கரவாத, அங்கீகரிக்கப்படாத, குற்றவியல் அல்லது சட்டவிரோத செயல்கள்ää சட்டவிரோத பரிமாற்றம் அல்லது மறு விநியோகம் செய்ய சந்தாதாரர் டயலொக் சேவைகளைப் பயன்படுத்தியதாக டயலொக் நம்பினால்;, மேற்கூறியவற்றுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உடன்படிக்கையை இடைநிறுத்துவதற்கும் மற்றும்/அல்லது சந்தாதாரரை டயலொக் சேவையிலிருந்து துண்டிப்பதற்கும்,
    • 2.1.8. முன் அறிவித்தலின்றி அல்லது எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் எந்த நேரத்திலும் டயலொக் சேவைகளை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கலாம்:
    • 2.1.9. துண்டித்த பின்னர் சந்தாதாரருக்கு ஒதுக்கப்பட்ட கணக்கு இலக்கத்தை/இலக்கங்களை மீண்டும் பயன்படுத்தவும் / மீள் ஒதுக்கீடு செய்வதற்கும்:
    • 2.1.10. டயலொக் இனால் தேவைப்படுகின்றவாறு காலத்துக்கு காலம் வாஸ் (VAS) கட்டணங்கள் உட்பட ஏற்புடைய இணைப்புக் கட்டணம், விற்பனைக்கு பிந்திய சேவைக் கட்டணங்கள், உபகரணக் கட்டணம், பொதி சந்தா கட்டணம் மற்றும் ஏனைய ஏற்புடைய கட்டணங்களையும் வேறுபடுத்தலாம் அல்லது திருத்தலாம். அத்தகைய ஏதேனும் மாற்றம் https://www.dialog.lk/television இணையத்தளத்தில்; பதிவேற்றப்படும் என்பதோடு சந்தாதாரர் அவற்றைப் பின்பற்றுவதற்கு இத்தால் ஒப்புக்கொள்கிறார்.
    • 2.1.11 தவறான / முறையற்ற உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்கின்ற தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வேண்டப்படுகின்றவாறான ஏதேனும் ஏனைய விவரங்களை சமர்ப்பித்தல்/ பதிவேற்றுதல் காரணமாக சேவையைத் துண்டித்தல்
    • 2.1.12 வழங்கப்பட்ட விளம்பர நேரத்தின் காலத்திற்கு எந்த அலைவரிசையிலும் (Channel) அனைத்து வகையான உள்ளூர் விளம்பரங்களை உட்செலுத்துவதற்கான உரிமையை கம்பனி எப்போதும் வைத்திருக்கிறது.
    • 2.2.13 Https://dlg.dialog.lk/privacy-notice இணையத்தளத்தில் இருக்கின்ற இரகசிய அறிவித்தலுக்கு உட்பட்டு, அநாமதேய பார்வையாளர் தரவை (அதாவது பார்க்கப்பட்ட அலைவரிசை, நேரங்களின் எண்ணிக்கை, காலம் போன்ற சந்தாதாரரின் தொலைக்காட்சி பார்க்கின்ற நடத்தை) என்பவற்றை ஒரு மூன்றாம் தரப்பினருடன் எல்லா நேரங்களிலும், சேமிக்க, பயன்படுத்த மற்றும் பகிர்ந்து கொள்வதற்கான உரிமையை கம்பனி கொண்டுள்ளது.
  • 2.2. பின்வரும் நபர்களுக்கு/விடயங்களுக்கு டயலொக் பொறுப்பாகமாட்டாது:
    • 2.2.1. எவரேனும் சந்தாதாரரால் அல்லது எவரேனும் சந்தாதாரரால் அங்கீகரிக்கப்பட்ட எவரேனும் ஆளினால் நேரடியாக, மறைமுகமாக, விசேட அல்லது விளைவாந்தன்மையுடைய ஏதேனும் வியாபார, வருமான அல்லது இலாபங்களின் இழப்பாக இருந்தாலும், ஏதேனும் இழப்பு அல்லது சேதத்துக்காக ஒரு சந்தாதாரருக்கு அல்லது ஒரு சந்ததாரரார் ஊடாக உரிமைகோருகின்ற அல்லது சந்தாதாரரால் அங்கீகரிக்கப்பட்ட எவரேனும் மூன்றாம் தரப்பினருக்கு,
    • 2.2.2. டயலொக் சேவைகளின் பயன்பாட்டினால் அல்லது பயன்பாட்டிலிருந்து எழுகின்ற ஒரு நபரால் அனுபவிக்கின்ற ஏதேனும் காயத்துக்காக அல்லது ஆதனத்தக்கு ஏற்படுகின்ற சேதத்துக்காக,
    • 2.2.3. உத்தரவாத காலத்தின் போது கூட, உற்பத்தியாளர் குறைபாடுகள் அல்லது உபகரணங்கள் குறைபாடுகள் தவிர, ஏதேனும் காரணத்துக்காக உபகரணத்தில் உள்ள ஏதேனும் செயலிழப்பு அல்லது குறைபாடு அல்லது உபகரணத்தின் அல்லது டயலொக் சேவையின்; இழப்பு மற்றும்/அல்லது இடையூறு மற்றும்/அல்லது உபகரணத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஏனைய சாதனங்களில் உள்ள ஏதேனும் செயலிழப்பு அல்லது குறைபாட்டுக்காக,
    • 2.2.4. டயலொக் சேவைகள் தொடர்பில் முக்கிய ஒலிபரப்பு மற்றும் பெறுகை ஆகியவற்றிலிருந்து எழுகின்ற பதிப்பரிமையின் அவதூறு, அபாண்டம், மீறுகைக்கான ஏதேனும் உரிமைக்கோரிக்கைக்காக,
    • 2.2.5. டயலொக் சேவைகள் தொடர்பாக சந்தாதாரரின் ஏதேனும் செயலில் இருந்து அல்லது ஏதேனும் ஒரு செயலை செய்யாததிலிருந்து எழுகின்ற எவையேனும் உரிமைகோரிக்கைகளுக்காக,
    • 2.2.6 மூன்றாம் தரப்பினர் ஒருவரால் செய்யப்பட்ட ஏதேனும் நிறுவல், இடமாற்றம், மீள்-பொருத்துதல் அல்லது வேறு எந்த மாற்றத்திற்காக,
    • 2.2.7. இந்த உடன்படிக்கையின் இடைநிறுத்தம்/முடிவுறுத்தலின் விளைவாக மற்றும்/அல்லது டயலொக் சேவைகளுக்கான வேறுபாடு/மாற்றத்தின் விளைவாக மற்றும்/அல்லது ஏதேனும் காரணத்தினால் டயலொக் சேவையின் இடையூறுஃஇழப்பின் விளைவாக சந்தாதாரருக்கு ஏற்படுகின்ற ஏதேனும் இழப்பு அல்லது சேதத்துக்காக,
    • 2.2.8 உத்தரவாதக் காலத்தை உள்ளடக்கிய உடன்படிக்கையின் தொடர்ச்சியின் போது ஏதேனும் நேரத்தில் தேவையான பழுதுபார்ப்புக்கள் மற்றும்/அல்லது சிக்கல்களை கட்டணம் இன்றிய அடிப்படையில் மேற்கொள்வதற்கு தொழில்நுட்ப குழுக்களை அனுப்புவதற்காக,
    • 2.2.9. எந்தவொரு சூழ்நிலைகளின் கீழும் இந்த உடன்படிக்கையின் துண்டிப்பு அல்லது முடிவுறுத்தலின் விளைவாக சந்தாதாரருக்கு ஏற்படுகின்ற இழப்பு அல்லது அசௌகரியத்துக்காக கணக்கு நிலுவையை திருப்பிச் செலுத்தவதற்காக,
    • 2.2.10. பிரிவு 3.5 இற்கு அமைவாக, எத்தகைய சூழ்நிலைகளின் கீழும் உபகரணக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தவதற்கு,
    • 2.2.11. தவறான உபகரணங்களின் பழுதுபார்க்கும் பணியின் போது நாளாந்த அல்லது மாதாந்த வாடகையின் தன்னியக்கமாக கழிப்பதைத் திருப்பி வழங்குவதற்கு அல்லது நிறுத்துவதற்கு
    • 2.2.12. இணைப்புக் கட்டணம், பொதிக் கட்டணம், சேவைக் கட்டணம், நிறுவல் கட்டணம், உதிரி பாகங்கள் மற்றும் எவையேனும் உபகரணங்கள் அகற்றல் அல்லது எவையேனும் செயற்பாடுகள் தொடர்பில் ஏவரேனும் 3ஆம் தரப்பு விற்பனையாளருடன் அல்லது சில்லறை விற்பனை நிலையத்துடன் அல்லது எவரேனும் 3ஆம் தரப்பு நிறுவுநருடன் சந்தாதாரர் மேற்கொண்ட அல்லது கைச்சாத்திட்ட ஏதேனும் வாய்மொழி அல்லது முறைசாராத எழுத்துமூல உடன்படிக்கைகளுக்காக,
    • 2.2.13. ஒவ்வொரு உபகரணத்துக்கும் டயலொக் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான அதிகபட்ச சில்லறை விலைக்கு (“அதிகபட்ச சில்லறை விலை”) மேல் 3ஆம் தரப்பு விற்பனையாளர் ஒருவருக்காக சந்தாதாரர் செலுத்திய மேலதிக கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு அல்லது ஈடுசெய்வதற்கு,
  • 2.3
    • 2.3.1 ஒரு சந்தாதாரர் டயலொக் இன் பட்ஜெட் பிளஸ், ஆரம்பம் அல்லது வெலு பெக் (Budget Plus, Aarambam or Value Pack) பொதிகளுக்கு சந்தா செலுத்தியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், சொல்லப்பட்ட பொதியானது இருபத்தி நான்கு (24) மாதங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு காலம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். சொல்லப்பட்ட அர்ப்பணிப்பு காலம் முடிவடைவதற்கு முன்னர் ஏதேனும் முன்கூட்டியே முடிவுறுத்தப்படுதலின் போது, டயலொக் வலைத்தளத்தின் இணைப்பு மற்றும் பொதி விவரங்கள் நிரலில் நன்;கு விபரிக்கப்பட்டவாறு அல்லது காலத்துக்கு காலம் டயலொக் இனால் சந்தாதாரருக்கு அறிவிக்கப்படுகின்றவாறு உரிய உபகரணக் கட்டணத்தை டயலொக் நிறுவனத்துக்கு சந்தாதாரர் செலுத்த வேண்டும்.
    • 2.3.2 பட்ஜெட் பிளஸ் (ரூ. 15+ வரிகள்), ஆராம்பம் (ரூ. 21+ வரிகள்) அல்லது வெலு பெக் (ரூ. 12+ வரிகள்) பொதிகள் போன்ற நளாந்த வாடகை பொதிகளுக்கு சந்தா செலுத்திய சந்தாதாரர் மாத்திரமே டயலொக் இன் தீர்மானித்தபடி உபகரணங்கள் தொடர்பான அலகு விலையின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவை செலுத்தி லைட் பெக்கிற்கு மாறலாம் (ஒரு நாளைக்கு ரூ. 8+ வரிகள்). அத்தகைய லைட் பெக்கிற்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யும் சந்தாதாரர், டயலொக் வலைத்தளத்தின் இணைப்பு மற்றும் பொதி விவரங்கள் நிரலில் நன்;கு விபரிக்கப்பட்டவாறு அல்லது காலத்துக்கு காலம் டயலொக் இனால் சந்தாதாரருக்கு அறிவிக்கப்படுகின்றவாறு அத்தகைய உரிய லைட் பெக் தொடர்பான கொடுப்பனவு மற்றும் ஏனைய கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு வேண்டப்படுவர்.
  • 2.4 டயலொக் நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டஃவழங்கப்பட்ட உபகரணங்களுக்கு பொருந்தக்கூடிய உத்தரவாத காலங்கள் மற்றும் அது தொடர்பான தொடர்புடைய நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இணைப்பு 1 இல் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

3. சந்தாதாரரின் பொறுப்புகள்

  • 3.1. தற்போதைய பொதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதிகளுக்கு மாத்திரமே பொதி தரமிறக்குதல் (Downgrade) அனுமதிக்கப்படுகிறது என்பதை சந்தாதாரர் தனது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது சந்தையில் விற்கப்படாத மட்டுப்படுத்தப்பட்ட பொதிகளுக்கு பொதி தரமிறக்குதல் அனுமதிக்கப்படமாட்டாது. இருப்பினும், தற்போதைய சந்தாதாரர் பொதியில்; பொதி தரமிறக்குதல் அனுமதிக்கப்பட்டால், காலத்துக்கு காலம் டயலொக் பரிந்துரைக்கின்ற தரமிறக்குதல் கட்டணத்தை செலுத்தி சந்தாதாரர் டயலொக் இற்கு அறிவித்தல் வழங்கி பொதி தரமிறக்கலாம்.
  • 3.2. சந்தாதாரர் பின்வருமாறு செயற்பட வேண்டும்;
    • 3.2.1. டயலொக் சேவைகளுக்கான சந்தாதாரர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திடும் நேரத்தில், நிரந்தர அஞ்சல் முகவரி, நிறுவுதல் முகவரி மற்றும் சந்தாதாரரின் தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு /சாரதி அனுமதிப்பத்திரத்தின் உண்மையான பிரதியொன்றையும் செல்லுபடியாகும் கையடக்கத் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி (ஏதேனும் இருந்தால்)) மற்றும் காலத்துக்கு காலம் டயலொக் நிறுவனத்திற்கு தேவையான ஏனைய விவரங்கள் / ஆவணங்கள்; என்பற்றை நிரூபனத்துக்காக சமர்ப்பிக்க வேண்டும்
    • 3.2.2. டயலொக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எந்தவொரு தகவலிலும் எவையேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் எழுத்து மூலமாக டயலொக் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும்.
    • 3.2.3. டயலொக் சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பான சந்தாதாரர் தொடர்பான அனைத்து சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்பவற்றை கடைப்பிடிக்க வேண்டும்:
    • 3.2.4. டயலொக் சேவைகளின் ஏற்பாட்டுடன் தொடர்பாக டயலொக் நிறுவனத்தால் வேண்டப்படக் கூடியவறான அனைத்து தகவல்களையும் ஒத்துழைப்பையும் வழங்குதல்;:
    • 3.2.5. டயலொக் சேவைகளின் சந்தாதாரர் பயன்பாடு தொடர்பான டயலொக் இன் நியாயமான அறிவுறுத்தல்களையும் பின்பற்றுதல்
    • 3.2.6. சட்டபூர்வமாக சொந்தமான/ உடமையுள்ள உபகரணகள் இலங்கையின் எந்தவொரு சட்டங்கள் அல்லது ஒழுங்குவிதிகளுக்கு முரணாக இல்லை என்பதை உறுதிப்படுத்தல்:
    • 3.2.7. டிகோடர்/ சிம் அட்டை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பாக ஏதேனும் மோசடி, களவு, இழப்பு, அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது சட்டவிரோத செயல்களின் ஏதேனும் ஏனைய நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது டிகோடர்/சிம் அட்டை அழிவுற்றால் அல்லது சேதமடைந்தால்;, உடனடியாக டயலொக் நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதோடு கோரிக்கை விடுக்கப்பட்டால் அதுதொடர்பில் பொலிஸ் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்:
    • 3.2.8 உபகரணங்களை பராமரிப்பதற்காக டயலொக் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும், அது டயலொக் நிறுவனத்திற்கு தேவையானவாறு ஏற்புடைய வருகைக் கட்டணங்களை உள்ளடக்கியதாக இருக்கும்;:
    • 3.2.9. ஒரு சிம் அட்டை வழங்கப்பட்டிருக்கின்ற விடத்து, சிம் அட்டையை பாதுகாப்பான மற்றும் சிறந்த நிலையில் வைத்திருத்தல்:
    • 3.2.10. சேவைகள் தொடர்பாக தகுதிவாய்ந்த ஒழுங்குறுத்துகை அதிகாரசபைகளால் விதிக்கப்படக்கூடிய ஏற்புடைய அனைத்து முத்திரை தீர்வை, வரிகள் மற்றும் எவையேனும் ஏனைய அறவீடுகளையும் செலுத்த வேண்டும்.
    • 3.2.11. இந்த உடன்படிக்கையின் பாதுகாப்பான உடைமை மற்றும் தக்கவைப்புக்கு பொறுப்பாக இருத்தல் மற்றும் டயலொக் நிறுவனத்தால் வேண்டப்பட்டால் அதனை சமர்ப்பித்தல்:
  • 3.3. சந்தாதாரர் பின்வருவனவற்றை செய்யக்கூடாது:
    • 3.3.1. சந்தாதாரர் சட்டத்திற்கு இணங்க டயலொக் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட நடைமுறையை பின்பற்றுகின்ற போது தவிர, இந்த உடன்படிக்கையின் காலப்பகுதியில் எந்த நேரத்திலும் இந்த இணைப்பு மற்றும்ஃஅல்லது டிகோடர்ஃசிம் அட்டையை வேறொரு நபருக்கு சாட்டுதல், கையளித்தல் மற்றும்/அல்லது மாற்றுதல்:
    • 3.3.2. சந்தாதாரரின் விசாரணை இலக்கம், தடை இலக்கம் அல்லது தனிப்பட்ட அடையாள இலக்கம் போன்ற டயலொக் சந்தாதாரருக்கு வழங்கும் எவையேனும் இரகசிய தகவல்கள் அல்லது பாதுகாப்பு இலக்கத்தை எவரேனும் நபருக்கு வெளிப்படுத்தல்:
    • 3.3.3. பயங்கரவாத, முறையற்ற, ஒழுக்கக்கேடான அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோத செயல்கள், சட்டவிரோத ஒலிபரப்பு அல்லது மீள் விநியோகம் செய்வதற்கு டயலொக் சேவைகளைப் பயன்படுத்துதல்:
  • 3.4. துண்டிக்கப்பட்டவுடன், சந்தாதாரர் கணக்கில் மீதமுள்ள ஏதேனும் நிலுவையை இழக்கிறார்.
  • 3.5 இது டயலொக் நிறுவனத்திற்கு சொந்தமான தொழில்நுட்பக் குழுவால் (வாடிக்கையாளர் கள ஆதரவு சேவை (“சீஎப்எஸ்எஸ்”) குழு) உறுதிப்படுத்தப்பட்டு செயற்கைக்கோள் சமிக்ஞை இல்லாவிட்டால் மாத்திரமே, சந்தாதாரர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில், சந்தாதாரர் வளாகத்தில் செயற்கைக்கோள் சமிக்ஞை இல்லை என்பதை சீஎப்எஸ்எஸ் குழு உறுதிசெய்தால், உபகரணங்கள் கட்டணம் மற்றும் சேவை வருகை கட்டணம் (அதாவது ரூ. 2150) திருப்பித் தரப்படலாம். எனினும், இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்பக் குழு சமிக்ஞை சிக்கலை சரிசெய்தால் குழு வருகைக்காக செலுத்தப்பட்ட 2150திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது,
  • 3.6 முந்தைய "பிற்கொடுப்பனவு" சந்தாதாரர்களாக இருந்த சந்தாதாரர்கள், பின்னர் "முற்கொடுப்பனவு" சந்தாதாரர்களாக டயலொக் சேவைகளுக்கு மாறியவர்கள் (இந்த பிரிவின் நோக்கத்திற்காக, "இடம்பெயர்ந்த சந்தாதாரர்கள்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்) பின்வரும் மேலதிக நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு ஒப்புக்கொள்கிறார்கள்:

1. சந்தாதாரர் “முற்கொடுப்பனவு” சந்தாதாரராக இடம்பெயர்ந்த விடத்து செட் டொப் பொக்ஸ், செடலைட் டிஷ; அண்டெனா, பவர் பெக், லோ நொய்ஸ் பொக்ஸ், ரிமோட் கன்ட்ரோல் டிவைஸ் மற்றும் அவற்றின் கூறுகள் ((set top box, satellite dish antenna, power pack, low noise box, remote control devise and their components) மற்றும் டயலொக் நிறுவனத்தால் சந்தாதாரருக்கு அனுமதியளிக்கப்பட்ட ஏனைய ஏற்புடைய துணைப்பாகங்கள் உள்ளிட்ட செயற்கைக்கோள் சமிக்ஞை பெறுகின்ற உபகரணங்கள் டயலொக் நிறுவனத்தின் சந்தாதாரருக்கு தொடர்ந்தும் சொந்தமானவையாக இருக்கும், மேலும் சந்தாதாரர் தொடர்ந்து அதே உபகரணங்கள் மூலம் சேவையைப் பெறுவார். முற்கொடுப்பனவு நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அத்தகைய உபகரணங்கள் தொடர்பான சந்தாதாரரின் அனைத்து கடப்பாடுகளும் தொடர்ந்து ஏற்புடையதாக இருக்கும் என்பதை சந்தாதாரர் ஒப்புக்கொள்கிறார்.

2. பிரச்சினை/குறைபாட்டை சரி செய்வதற்காக டயலொக் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு இடம்பெயர்ந்த சந்தாதாரர்/முற்கொடுப்பனவு சந்தாதாரர்களின் வளாகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், அத்தகைய இடம்பெயர்ந்த சந்தாதாரர்/முற்கொடுப்பனவு சந்தாதாரர் வருகை கட்டணம் ரூ. 2150 தொகையை முற்பணமாகச் செலுத்த வேண்டும். மேலும், எந்தவொரு உபகரணம்(கள்) மாற்றப்பட வேண்டும் மற்றும்/அல்லது திருத்தப்பட வேண்டும் என்று தொழில்நுட்பக் குழு கண்டறிந்தால், அப்போது இடம்பெயர்ந்த சந்தாதாரர்/முற்கொடுப்பனவு சந்தாதாரர் அத்தகைய மாற்றீடு மற்றும்/அல்லது பழுதுபார்ப்புகளுக்கு தனித்தனியாக கொடுப்பனவு மேற்கொள்ள வேண்டும். (இதன் இணைப்பு 1 இல் நன்கு விபரிக்கப்பட்ட உத்தரவாத காலத்தின் போது கூட இந்த உட்பிரிவு முற்கொடுப்பனவு செலுத்திய அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஏற்புடையதாகும்).

3. ஒரு சந்தாதாரின் உபகரணங்கள் அகற்றப்பட்டால், திருடப்பட்டால் அல்லது இழப்புக்கு உட்பட்டால் பிற்கொடுப்பனவிலிருந்து முற்கொடுப்பனவுக்கு இடம்பெயர்வதற்கு கோர முடியாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் சந்தாதாரர் புதிய முற்கொடுப்பனவு இணைப்பை கொள்வனவு செய்யுமாறு வேண்டப்படுவார்.

4. இந்த உடன்படிக்கையில் உபகரணங்களுக்காக ஏற்புடைய எவையேனும் நிபந்தனைகள் மற்றும் கடப்பாடுகள்ää டயலொக் இன் சுய தீர்மானத்தின்படி அதன் ஏற்புடைய தன்மையின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட அத்தகைய உபகரணங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்:

5. அத்தகைய இடம்பெயர்ந்த சந்தாதாரர்களுக்கு அவர்களின் “பிற்கொடுப்பனவு” சந்தாவின் போது இருந்த ஏதேனும் ஆயுட்கால உத்தரவாதங்கள் அத்தகைய இடம்பெயர்ந்த சந்தாதாரர்களுக்கு இதன் பின்னர் ஏற்புடையதாக மாட்டாது.

6. மேற்கூறிய உபகரணங்கள் அல்லது அதில் உள்ள எவையேனும் கூறுகள் பதிலீடு செய்யப்பட வேண்டிய சு10ழ்நிலை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில்ää அப்போது அத்தகைய புதிய பதிலீட்டு உபகரணங்களை சந்தாதாரரால் டயலொக் நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பதோடு இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களுக்கு பொருந்தக்கூடிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அத்தகைய கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் அல்லது அதில் உள்ள பாகங்களுக்கும் ஏற்புடையதாகும். தெளிவுபடுத்துகின்ற நோக்கத்திற்காக டயலொக் தனது சுய தீர்மானத்தின்படி தீர்மானிக்கின்றவாறு மற்றும் அத்தகைய சந்தாதாரரை புதிய கணக்கை ஒதுக்கிய பின்னர் ஒரு சந்தாதாரர் "பிற்கொடுப்பனவு" இலிருந்து “முற்கொடுப்பனவு" நிலைக்கு மாற்றுவதன் மூலம் மாத்திரமே இடம்பெயர்ந்த சந்தாதாரராகக் கருதப்படுவார்.

4. இதர விடயங்கள்

  • 4.1. இந்த உடன்படிக்கையின் ஏதேனும் நியதி அல்லது நிபந்தனையை அமுல்படுத்துவதில் டயலொக் நிறுவனத்தால் தாமதம் அல்லது சலுகைக் காலம் வழங்கப்படக் கூடாது அல்லது ஒரு சந்தாதாரருக்கு டயலொக் நிறுவனத்தால் நேரத்தை வழங்குவது டயலொக் இன் உரிமைகள் அல்லது அதிகாரங்களில் பாரபட்சம் காட்டப்படக் கூடாது, அல்லது ஏதேனும் மீறுகையின் டயலொக் இனால் ஏதேனும் விட்டுக்கொடுப்பானது ஏதேனும் அடுத்தடுத்த அல்லது தொடர்ச்சியான மீறல் தொடர்பில் ஏதேனும் ஒரு தொடர் விட்டுக்கொடுப்பை உருவாக்கக் கூடாது.
  • 4.2. கடவுளின் செயல், பயங்கரவாத நடவடிக்கைகள், கிளர்ச்சி அல்லது உள்நாட்டு குழப்பம், இராணுவ நடவடிக்கைகள், அனைத்து அவசரகால செயல்கள் அல்லது அரசாங்கத்தின் அல்லது ஏதேனும் தகுதிவாய்ந்த அதிகார சபையின் தவிர்த்தல், ஏதேனும் வகை தொழில்துறை பிணக்குகள், தீ, மின்னல், வெடிப்பு. வெள்ளம், தொற்றுநோய்கள், பரவுகின்ற நோய்கள் டயலொக் நிறுவனம் பொறுப்பாகாத ஆட்களின் அல்லது குழுக்களின் செயல்கள் அல்லது தவிர்த்தல் அல்லது டயலொக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஏதேனும் காரணத்துக்கு டயலொக் பொறுப்பாக மாட்டாது.
  • 4.3. ஏதேனும் ஏற்புடைய சட்டத்தின் கீழ் இதில் உள்ள எந்தவொரு ஏற்பாடுகளும் செல்லுபடியாகாதவை, சட்டவிரோதமானவை அல்லது செயற்படுத்த முடியாதவையாக இருந்தால், மீதமுள்ள நியதிகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் நடைமுறைப்படுத்துதல் எந்த வகையிலும் பாதிக்கப்படவோ அல்லது செல்லுபடியற்றதாகவோ இருக்க மாட்டாது, என்பதோடு அத்தகைய தவறான அல்லது செயல்படுத்த முடியாத ஏற்பாடுகள் நீக்கப்பட்டதாகக் கருதப்படும்.
  • 4.4. இந்த உடன்படிக்கை இலங்கையின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இலங்கை நீதிமன்றங்களின் பிரத்தியேக நியாயாதிக்கத்துக்கு உட்பட்டது.
  • 4.5. வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால், இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப சந்தாதாரருக்கு ஏதேனும் அறிவித்தல் வழங்க டயலொக் நிறுவனத்துக்கு தேவைப்பட்டால்; கீழ்க் குறிப்பிடப்படுகின்ற முறையில் டயலொக் அவ்வாறு சந்தாதாரருக்கு அறிவித்தலை அனுப்பினால், மேலும் அத்தகைய அறிவித்தல் சந்தாதாரருக்கு முறையாக வழங்கப்பட்டதாகவும் பெறப்பட்டதாகவும் கருதப்படும், (அ) டயலொக் இன் இணையதளத்தில் வெளியிடப்பட்டால், வெளியிடும் நேரத்தில்; (ஆ) சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில செய்தித்தாளில் வெளியிடப்பட்டால், வெளியிடப்பட்ட நாளில் (இ) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டால், அது அனுப்பப்பட்ட நேரத்தில்; (ஈ) முற்கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட கடிதம் மூலம் அனுப்பப்பட்டால், முற்கொடுப்பனவு கடிதத்தின் அனுப்பப்பட்ட அடுத்த நாளில், அல்லது (உ) குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டால், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நேரத்தில்.
  • 4.6. டயலொக் நிறுவனத்தால் வேறுவிதமாக அறிவுறுத்தப்படாவிட்டால்ää சந்தாதாரரால் டயலொக் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்ற எந்த அறிவித்தலும் எழுத்து மூலமாக டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
  • 4.7. குறைந்தபட்சம் மூன்று (03) மாதங்களுக்கு கணக்கு செயலற்ற நிலையில் இருந்தால், அது துண்டிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்பதோடு இந்த உடன்படிக்கை முடிவுறுத்தப்படும். டயலொக் நிறுவனத்தால் சந்தாதாரருக்கு குறிப்பிடப்பட்ட குறைந்தபட்ச வலைப்பின்னல் தங்கியிருப்பு காலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இதுபோன்ற துண்டிப்பு ஏற்பட்டால், சந்தாதாரர் டயலொக் நிறுவத்திற்கு ஒரு ஆரம்ப நிறுத்தக் கட்டணமாக ரூபாய் 2000/- (வரிகளை உள்ளடக்கியது) தொகையையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதியின் அடிப்படையில் ஏற்புடையதாக இருக்கும். (அவ்வாறு ஏற்புடயைதாக இருந்தால்) ஏதேனும் ஏனைய மேலதிக கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
  • 4.8 ஆங்கிலத்தில் உள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் சிங்களம்/தமிழ் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடு/பிணக்கு ஏற்பட்டால், ஆங்கில மொழிபெயர்ப்பு முரண்பாட்டின் அளவிற்கு மேலோங்கும்.
  • 4.9 சந்தாதாரர் வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு, இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட ஆனால் அதற்கு மாத்திரம் வரையறுக்கப்படாத, ஏற்புடைய அதிகார சபைகளுடன் பராமரிக்கப்படுகின்ற சந்தாதாரரின் தேசிய அடையாள அட்டை விபரங்கள் மற்றும் ஏனைய தகவல்களை டயலொக் நிறுவனம் அணுகுவதற்கு சந்தாதாரர் இத்தால் ஒப்புக்கொள்கின்றார்.

இணைப்பு 1
உத்தரவாதத்தின் விடயப்பரப்பு மற்றும் காலம்

விடயம் Warranty period விற்பனை செய்கின்ற முறை
வீஐயு ஹப் குறிவிலக்கி (டிகோர்டர்)/எச்டீ. எச்ஈவீசீ குறிவிலக்கி (டிகோர்டர்) அல்லது வீஐயூ மினி டிவைஸ் (ViU Hub decoder/HD HEVC decoder or ViU Mni device) 1 வருடம் குறைபாடொன்று காரணமாக உத்தரவாதத்துக்கு அப்பால் புதிய செயற்படுத்தல்/ உதிரிப்பாக விற்பனை
  • தொலை இயக்கி
  • மின் இணைப்பு வயர
புதுப்பிக்கப்பட்ட குறிவிலக்கி (டிகோர்டர்) 6 மாதங்கள் குறைபாடொன்று காரணமாக உத்தரவாதத்துக்கு அப்பால் புதிய செயற்படுத்தல்/ உதிரிப்பாக விற்பனை
  • தொலை இயக்கி
  • மின் இணைப்பு வயர
யுனிவர்சல் (Universal) தொலை இயக்கி 6 மாதங்கள் எல்என்பி (குறைந்த ஒலித் தொகுதி) 6 மாதங்கள் குறைபாடொன்று காரணமாக உத்தரவாதத்துக்கு அப்பால் உதிரிப்பாக விற்பனை
யுனிவர்சல் (Universal) மின் இணைப்பு வயர் 6 மாதங்கள் எல்என்பி (குறைந்த ஒலித் தொகுதி) 6 மாதங்கள் குறைபாடொன்று காரணமாக உத்தரவாதத்துக்கு அப்பால் உதிரிப்பாக விற்பனை
எல்என்பி (குறைந்த ஒலித் தொகுதி) 6 மாதங்கள் எல்என்பி (குறைந்த ஒலித் தொகுதி) 6 மாதங்கள் குறைபாடொன்று காரணமாக உத்தரவாதத்துக்கு அப்பால் உதிரிப்பாக விற்பனை
ஸ்மார்ட் அட்டை ஆயுட் காலம் குறைபாடொன்று காரணமாக உத்தரவாதத்துக்கு அப்பால் புதிய செயற்படுத்தல்ஃ உதிரிப்பாக விற்பனை
ஏனைய உதிரப்பாகங்கள் உத்தரவாதமில்லை
But Dialog shall replace the said accessory due to a manufacturer’s fault.
குறைபாடொன்று காரணமாக புதிய செயற்படுத்தல்/உத்தரவாதத்துக்கு அப்பால் உதிரிப்பாக விற்பனை

மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை (“உபகரணங்கள்”) கொள்வனவு செய்த நாளிலிருந்து தொடங்கி (“வரையறுக்கப்பட்ட உத்தரவாதம்”) குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களுடன் தொடர்புடைய காலத்திற்கு (“உத்தரவாத காலம்”) வாடிக்கையாளருக்கு ஏற்புடையதாக இருக்கக் கூடிய (“உபகரணங்கள்”), அதாவது மேலே அட்டவணையில் குறிப்பிடப்பட்ட உபகரணங்கள் அதன் அசல் கொள்வானவாளர்களுக்கு (“வாடிக்கையாளர்”) சாதாரண பயன்பாடு மற்றும் சேவையின் கீழ் பொருளில் மற்றும் பணித்திறனில் ஏற்படுகின்ற குறைபாடுகளிலிருந்து விடுபடும் என டயலொக் டெலிவிஷன் (பிரைவேட்) லிமிடெட் (பி.வி 128) (“டயலொக்”) உத்தரவாதம் அளிக்கிறது. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, உத்தரவாதக் காலத்தின் போது எந்தவொரு டயலொக் தொழில்நுட்ப ஆதரவு மையங்களுக்கும் உபகரணங்கள் திருப்பித் தரப்பட்டால், அவற்றின் இருப்பிட விவரங்கள் குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு டயலொக் அதன் விருப்பப்படிää எந்தவொரு கட்டணமும் இல்லாமல், உபகரணங்களை ஒன்றில் திருத்தம் செய்யும் அல்லது பதிலீடு செய்யும். அத்தகைய குறைபாடு உற்பத்தியாளரின் தவறு/பிழை காரணமாக அல்லாமல் மற்றும்/அல்லது அத்தகைய குறைபாடு உத்தரவாதத்தின் விதிமுறைகளின் கீழ் இல்லாதிருந்தால்ää திருத்தவதற்கான ஏதேனும் பரிசோதனைக்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து அறவிடுவதற்கான உரிமையை டயலொக் கொண்டுள்ளது. பரிசோதனை அல்லது திருத்துதல் கட்டணம் அறவிடப்பட்டால் அத்தகைய கட்டணம் முழுமையாக செலுத்தப்படும் வரை டயலொக் கருவியைத் தன்னகத்தே வைத்துக் கொள்ளலாம்.

2. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் வேறு வகையில் குறிப்பிடப்படாவிட்டால், இந்த உத்தரவாதம் இலங்கையில் மாத்திரம் செல்லுபடியாகும்.

3. உபகரணங்களின் சேவை தொடர்பாக டயலொக் எடுக்கும் சகல தீர்மானங்கள் (திருத்தம், மாற்றீடுகள் அல்லது குறைபாடு அல்லது பணித்திறன் அல்லது பொருட்கள் தொடர்பான சிக்கல்கள் உட்பட) இறுதியானதாக இருக்கும், என்பதோடு வாடிக்கையாளர் அத்தகைய தீர்மானங்களுக்கு கட்டுப்படுவதற்கு உடன்படுகின்றார். ஏதேனும் குறைபாடுள்ள உபகரணம் அல்லது அதன் ஒரு பகுதி மாற்றீடு செய்யப்பட்டால் அது டயலொக் நிறுவனத்தின் சொத்தாக மாறும்.

4. டயலொக் வழங்காத உபகரணங்களுடன் இணைக்கப்பட்டு மற்றும் பயன்படுத்தப்படுகிற அல்லது எந்தவொரு துணை உபகரணங்களுடனும் கருவியின் செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிற எந்தவொரு துணை உபகரணங்களுக்கும் டயலொக் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டாது.

5. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் பின்வருவனவற்றை உட்படுத்தமாட்டாது:

  • 5.1 உபகரணங்கள் டயலாக் நிறுவனத்திலிருந்து அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் / வியாபாரிகளிடமிருந்து வாங்கப்படவில்லை என்றால்:
  • 5.2 தவறாகக் கையாளுதல், அசாதாரண பயன்பாடு, அசாதாரண நிலை, முறையற்ற சேமிப்பு, ஈரப்பதம், திரவ அல்லது ஈரப்பதம், அரிப்பு, துரு கறை, அதிக வெப்பநிலைக்கு வெளிப்பாடு, மணல், தூசி, அழுக்கு, ஏனைய மாசு அல்லது சுற்றுச் சூழல் நிலைமைகளால் ஏற்படும் குறைபாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறுதல் அல்லது முறையற்ற நிறுவல்கள், ஏதேனும் 3 வது தரப்பு பழுதுபார்ப்பு, தவறாகப் பயன்படுத்துதல், புறக்கணித்தல், துஷ்பிரயோகம், விபத்து, மாற்றியமைத்தல், பிரித்தல், கடவுளின் செயல்கள் மற்றும் ஏதேனும் ஒரு சக்தி வாய்ந்த நிகழ்வுகள், உணவு அல்லது திரவங்களின் கசிவு, தவறான சரிசெய்தல் போன்ற அறிவுறுத்தல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான இயக்க வழிமுறைகள் வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் அல்லது டயலொக் நிறுவனத்தின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏனைய செயல்கள், இதில் உருகிகள் மற்றும் உடைப்பு அல்லது என்டனாக்களுக்கு சேதம் போன்ற நுகர்வுப் பகுதிகளின் குறைபாடுகள் உட்படää பொருட்கள் அல்லது பணித்திறன் குறைபாடுகளால் நேரடியாகத் தவிர,மற்றும் இந்த கருவியின் சாதாரண தேய்மானங்கள், பொருத்தமற்ற மின்சாரம், விலங்குகள் அல்லது பூச்சிகளினால் சேதம், தவறான நிறுவல் அல்லது நிரல், தரவு, வைரஸ். ஸ்பைவேர், ட்ரோஜான்கள், மூன்றாம் தரப்பு மென்பொருள் மற்றும்/ அல்லது ஏனைய கோப்புகளால் ஏற்படுகின்ற தவறு:
  • 5.3 இந்த கருவியின் உத்தரவாத முத்திரை / ஸ்டிக்கர் அகற்றப்பட்டால், பழுதடைந்தால் அல்லது மாற்றப்பட்டால் இந்த கருவியை அடையாளம் காண்பது கடினமாக இருத்தல்:
  • 5.4 முறையற்ற சோதனை, இயக்கம், பராமரிப்பு, நிறுவல் அல்லது உபகரணத்தின் எதேனும் மேம்படுத்தல் அல்லது மாற்றம்:
  • 5.5 வாங்கிய ஆண்டு, மாதம் மற்றும் திகதி, வாடிக்கையாளரின் பெயர், வியாபாரி / விநியோகஸ்தரின் பெயர் மற்றும் தொடர் இலக்கம் தொடர்பாக இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால்;
  • 5.6 உத்தரவாதக் காலத்தின் போது இந்த உபகரணத்தின் குறைபாடு, திருட்டு அல்லது செயலிழப்பு குறித்து வாடிக்கையாளரால் டயலொக் நிறுவனத்துக்கு அறிவிக்கப்படாவிட்டால்:
  • 5.7 இந்த உபகரணத்தை டயலொக் நிறுவனத்தால் வழங்கப்படாத ஒரு உதிரிப்பாகத்துடன் பயன்படுத்தப்பட்டிருந்தால் அல்லது அது நியாயமான கருதப்பட்ட நோக்கத்திற்காக தவிர வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால்;
  • 5.8 சாதாரண வாடிக்கையாளர் பயன்பாட்டின் காரணமாக பிளாஸ்டிக் மேற்பரப்புகள் மற்றும் வெளிப்புறமாக வெளிப்படும் அனைத்து பகுதிகளுக்கும் கீறல்கள் அல்லது சேதங்கள்; ஏற்பட்டிருத்தல்:
  • 5.9 உபகரணங்களுடன் வழங்கப்பட்ட மென்பொருள்;
  • 5.10 உபகரணங்களுடன் உத்தரவாத சான்றிதழ் திருப்பித் தரப்படாதிருந்தால்: (அதற்கான அனைத்து தொடர்புடைய மற்றும் தற்செயலான செலவுகள் (சேவை வருகைகள், உதிரிப் பாக செலவுகள், பராமரிப்பு செலவு, விநியோகம் போன்றவற்றுக்கு வரையறையில்லாமல்) என்பவற்றை வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்).
  • 5.11 உத்தரவாத காலத்தின் போது அனைத்து பொதிகளுக்கும் சேவை வருகைகள். சேவை வருகைகளுக்கு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், அத்தகைய சேவை வருகையை மேற்கொள்வதற்கு முன்னர் டயலொக் நிறுவனம் வாடிக்கையாளருக்கு அறிவிக்கும்.

6. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதமானது பின்வரும் சந்தர்ப்பங்களில் செல்லுபடியற்றதாக மாறும்:

  • 6.1 உபகரணத்தில் மற்றும்/அல்லது உதிரிப்பாகங்களில் உள்ள தொடர் இலக்கம் அல்லது எவையேனும் உத்தரவாத முத்திரைகள் / ஸ்டிக்கர்கள் மாற்றப்பட்டு,. சேதப்படுத்தப்பட்டு அல்லது உடைக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுகின்ற போது:
  • 6.2 ஒரு உபகரணம் அல்லது சேவையுடன் குறித்துரைக்கப்பட்ட உபகரணம் தவிர வேறு பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்:
  • 6.3 இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் உள்ள ஏதேனும் சொல் டயலொக் நிறவனத்துக்கு முன் எழுத்து மூல அறிவித்தல் இல்லாமல் எந்த வகையிலும் மாற்றப்பட்டிருத்தல் அல்லது சேர்க்கப்பட்டிருத்தல்:
  • 6.4 இலங்கைக்கு வெளியே உபகரணம் பயன்படுத்தப்படுகிற போது அல்லது இலங்கைக்கு வெளியே இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தின் நன்மை கோரப்படுகின்ற போது:

7. வரையறுக்கப்பட்ட உத்தரவாதமானது டயலொக் வாடிக்கையாளருக்கு மாத்திரமே நீடிக்கப்படுகிறது, மேலும் அடுத்தடுத்த கொள்வனவாளருக்கு / வாடிக்கையாளருக்கு மாற்றுவதற்கு இது சாட்டுதல் செய்யப்படக் கூடாது.

8. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதமானது, உபகரணத்தின் உத்தரவாத விடயத்துடன்; தொடர்பில் டயலொக் நிறுவனத்திள் பொறுப்புக்களை முன்வைக்கிறது.

9. இலங்கை சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் உள்ள பரிகாரங்கள் வாடிக்கையாளரின் தனித்த மற்றும் பிரத்தியேக பரிகாரங்களாகும்;.

10. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உபகரணத்தின்; கொள்வனவு விலையை மீறிய அல்லது நேரத்தைப் பயன்படுத்துதலுக்கான எவையேனும் சேதங்கள், தரவு இழப்பு, அசௌகரியம், வர்த்தக இழப்பு, இலாபங்களின் அல்லது சேமிப்புக்களின் இழப்பு அல்லது ஏனைய இடைநேர், மறைமுக, விசேட அல்லது விளைவாந்தன்மையுடைய சேதங்கள் (எதிர்பார்க்கப்பட்ட அனுகூலங்கள் அல்லது இலாபங்களை இழத்தல் உட்பட) என்பவற்றுக்கு கம்பனி பொறுப்பாக மாட்டாது. கப்பலில் கொண்டு வரப்படுகின்ற போது வெளிப்புற பாகங்கள் மற்றும் ஒப்பனை பாகங்களுக்கு குறைபாடு இல்லாததாக இருக்கும் என்பதோடு எனவே அவை இந்த உத்தரவாத்தின் நியதிகளின் கீழ் உட்படுத்தப்படமாட்டாது.

11. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாத காலத்துக்கான ஓரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக வியாபாரம், தரநியம் அல்லது பொருத்தம் என்பவற்றின் எவையேனும் உட்கிடையான உத்தரவாதங்கள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆனால் அவற்றுக்கு மாத்திரம் வரையறை இல்லாமல் சகல ஏனைய வெளிப்படையான உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளுக்குப் பதிலாக இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. மேலே விவரிக்கப்பட்டுள்ள முறையில் மீறலைச் சரிசெய்வதற்கு அப்பால் உத்தரவாதத்தை மீறுவதற்கான எந்தவொரு பொறுப்பையும் டயலொக் நிறுவனம் ஏற்கமாட்டாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உபகரணத்திலிருந்து எழுகின்ற அல்லது சட்டத்தின் மூலம் உரிமை கோரப்படக் கூடிய உரிமைக்கோரிக்கையின் முழுமையான அளவுக்கு பயன்பாட்டு இழப்பு அல்லது இலாபங்களின் இழப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஏதேனும் விளைவாந்தன்மையுடைய இழப்பு அல்லது சேதங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் டயலொக் நிறுவனம் பொறுப்பாகமாட்டாது.

12. வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் வழங்கப்பட்டதைத் தவிர்த்து, டயலொக் நிறுவனத்தை கட்டுப்படுத்துகின்ற உபகரணங்கள் தொடர்பில் ஏனைய வெளிப்படையான அல்லது உட்கிடையான உத்தரவாதம் அல்லது எவரேனும் ஏனைய தரப்பினரால் வழங்கப்பட்ட வேறு எந்த உத்தரவாதமும் வழங்கப்படமாட்டாது.

13. உபகரணங்கள்/உதிரிப்பாகங்களை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் அனைத்து கட்டணங்களுக்கும் வாடிக்கையாளர் பொறுப்பேற்க வேண்டும்.

14. உத்தரவாதக் காலம் காலாவதியான பின்னர் இந்த உபகரணங்கள் எவையேனும் டயலொக் தொழில்நுட்ப ஆதரவு மையங்களுக்கும் திருப்பி அனுப்பப்பட்டால், (ஏற்புடையதாக இருந்தால்) டயலொக் நிறுவனத்தின் சாதாரண சேவைக் கொள்கைகள் ஏற்புடையதாகும் (காலத்துக்கு காலம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படுகின்றவாறு) அத்தோடு அதற்கேற்ப வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் அறவிடப்படும்.

  • 14.1 இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் வெளிப்படையாக வழங்கப்பட்டதைத் தவிர வேறு ஏதேனும் கடப்பாட்டையோ அல்லது பொறுப்பையோ டயலொக் ஏற்றுக்கொள்வதில்லை:
  • 14.2 அனைத்து உத்தரவாதத் தகவல்களும், உபகரணங்கள் அம்சங்களும், விவரக்குறிப்புகளும் முன்னறிவிப்பின்றி மாற்றப்படுவதற்கு அமைவானது:

15. உபகரணத்தின் ஏதேனும் உள்ளடக்கம் தொடர்பில் வெளிப்படையான அல்லது உட்கிடையான எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ டயலொக் வழங்கமாட்டாது.

16. இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையின் சட்டங்களின்படி நிர்வகிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

டயலொக் ஆசிஆட்டா தொழிநுட்ப ஆதரவு நிலையங்கள்

அம்பாரை வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல.778, கோயில் சந்தி,டி எஸ் சேனநாயக்க வீதி,அம்பாரை

அனுராதபுரம் வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 448, மைத்ரிபால சேனநாயக்க மாவத, புதிய நகரம், அனுராதபுரம்

மட்டக்களப்பு வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 262, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு

காலி வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 121A, வெக்வெல்லா வீதி, காலி

யாழ்ப்பாணம் வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 141, ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம்

கண்டி வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 178, டி எஸ் சேனநாயக்க வீதி, கண்டி

குருனாகல் வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 87, கொழும்பு வீதி குருநாகல்

மொடர்ன் வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 528, அல்ஃபிரட் ஹவுஸ் அவென்யூ, ஆர் எ டி மெல் மாவத, கொழும்பு 03

நீர்கொழும்பு வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 365, பிரதான வீதி, நீர்கொழும்பு

நுகேகொட வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 84, ஸ்டான்லி திலகரத்ன மாவத, நுகேகொட

இரத்தினபுரி வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 410, பிரதான வீதி, குடுகல்வத்த, இரத்தினபுரி

டயலொக் தொழிநுட்ப சேவை நிலையம் (யூபீஎஸ்சீ)

இல: 116, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

வவுனியா வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 60, 1 வது குறுக்குத் தெரு, வவுனியா

பதுளை வாடிக்கையாளர் சேவை நிலையம்

37, 39 மொடர்ன் கம்ப்லெக்ஸ், கோகோவத்த வீதி, பதுளை.

திருகோணமலை வாடிக்கையாளர் சேவை நிலையம்

இல: 345, மத்திய வீதி, திருகோணமலை

வாடிக்கையாளர் சேவை நேரடி இலக்கம்: 1777