பொருள் விரிவாக்கம்

‘நாற்திசையும் டயலொக்’ செயற்திட்டத்தினால் தம்பல்கொடவில் புதிய கோபுரம் நிறுவப்பட்டது.

ஆகஸ்ட் 8, 2022         கொழும்பு

 

New Tower in Dampalgoda
New Tower in Dampalgoda

நாடு முழுவதிலும் உள்ள கிராமங்கள் மற்றும் தொலைதூர கிராமப்புற சமூகங்களுக்கு தொடர்பாடல் இணைப்பை விரிவுபடுத்தும் தனது உறுதிமொழியை நிலைநிறுத்தி, இலங்கையின் மிகப்பெரிய வலையமைப்பான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அதன் ‘நாற்திசையும் டயலொக் ’ செயற்திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் உள்ள தம்பல்கொட கிராமத்தில் ஒரு தொடர்பாடல் கோபுரத்தை அண்மையில் நிறுவியது.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மேம்படுத்தப்பட்ட இணைப்புடன் இலங்கையரின் வாழ்வை வலுவூட்டும் மற்றும் வளப்படுத்தும் பயணத்தில், கேகாலை மாவட்டத்தில் உள்ள மலல்பொல மற்றும் முவாப்பிட்டிய கிராமங்களிலும் மேலதிக தொலைத்தொடர்புக் கோபுரங்களுடன் தம்பல்கொடவில் புதிய கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் தவலம, டொரல மற்றும் பின்கந்த மற்றும் களுத்துறை மாவட்டத்தில் அதிகாரிகுடா ஆகிய இடங்களிலும் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடியான காலங்களில் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்குமான தன்னுடைய தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், 2022 ஏப்ரலில் டயலொக் தன் வலையமைப்பில் 4550 மொபைல் 4G தளங்களை அடைந்துள்ளது, இது இலங்கையிலே பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த கோபுர எண்ணிக்கையாக அமைகிறது. டயலொக் 95% 4G டேட்டா மக்கள் தொகை கவரேஜை பெற்றுள்ளதுடன் அதன் கவரேஜை விரைவாக விரிவடையச் செய்வதில் Green field கோபுரங்களைப் பயன்படுத்தி, தொலைதூர கிராமப்புற சமூகங்களைச் சென்றடைகிறது. மேலும் செறிவான பகுதிகளில் அவசரத் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய Lamp pole தீர்வுமுறையை கையாள்கிறது. தனது கவரேஜ் தடத்தை மேம்படுத்துவதற்கான Dialog இன் அர்ப்பணிப்பு, வலையமைப்பு பரிசோதனையில் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இதன் தொடர்ச்சியாக Open Signal ஆனது 'சிறந்த 4G கவரேஜ் அனுபவம்' மற்றும் 'வேகமான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேக அனுபவம்' ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது.