பொருள் விரிவாக்கம்

Dialog Gaming மூலம் உள்நாட்டு மொபைல் விளையாட்டுக்களை மேம்படுத்தும் நோக்கில் MegaPlay மொபைல் app அறிமுகமாகியுள்ளது!

October 28, 2021         Colombo

 

MegaPlay powered by Dialog

Dialog Gaming, GameRoar Technologies வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் Jwave Technologies ஆகியவற்றின் ஒன்றிணைவில் MegaPlay எனும் பெயரில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பரந்தளவிலான மொபைல் விளையாட்டுக்களை உள்ளடக்கிய MegaPlay எனும் e-Gaming மொபைல் app உள்நாட்டு மொபைல் விளையாட்டு பிரியர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இனால் அனுசரணை வழங்கப்படுகின்ற இந்த MegaPlay ஊடாக இலங்கையின் மொபைல் விளையாட்டுக்களை (mobile games) உருவாக்கி வடிவமைக்கின்ற படைப்பாளர்களினால் சுயமாக வடிவமைக்கப்பட்ட puzzles, cricket, shooting, racing, arcade ஆகிய வகைகளுக்குள் அடங்குகின்ற 50 ற்கும் மேற்பட்ட hyper casual games இந்த app இல் அடங்குகின்றன. MegaPlay ஊடாக இலங்கையில் முதல் தடவையாக மொபைல் விளையாட்டுக்களை வடிவமைக்கின்ற படைப்பாளர்கள் மற்றும் அவற்றை விளையாடுவதில் ஈடுபாடு கொண்டவர்கள் பணம் ஈட்டுவதற்கு, இலவச 'டேட்டா'க்களை வெற்றிக்கொள்வதற்கு மேலும் பல நன்மைகள் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, டயலொக் நிறுவனமானது இந்த புதிய MegaPlay யில் முழுமையாக அனைத்து மொபைல் விளையாட்டுக்களையும் விளையாடக்கூடியவாறு காணப்படுகின்றது. இந்த சிறப்பு சலுகையானது 2021 நவம்பர் 30 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாவதுடன் Google Play Store அல்லது www.megaplay.lk இணையத்தளத்தினூடாக இந்த app ஐ download செய்கின்ற முதல் 10,000 நபர்களுக்கு மாத்திரமே மேற்படி சலுகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த app இனை அறிமுகப்படுத்திய நிகழ்வின் போது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் புத்தாக்கங்கள் மற்றும் திட்டமிடல் அதிகாரி அந்தனி ரொட்ரிகோ அவர்கள் உரையாற்றியபோது, " நமது டயலொக் நிறுவனமானது Game Roar மற்றும் JWave நிறுவனங்களுடன் கூட்டிணைந்து MegaPlay app ஐ அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். மேலும், டயலொக் நாம் எப்போதுமே தேசிய மட்டத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியையிட்டு கூடிய கரிசனையை கொண்டிருக்கின்ற அதேவேளை, இலங்கையில் இலத்திரனியல் விளையாட்டுத்துறையை பிரகாசிக்கச் செய்வதற்கு இது சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இளம் தலைமுறையினரின் e-Sports பிரவேசிப்பை மேம்படுத்துவதில் டயலொக்கின் இந்தப் பயணமானது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதெனலாம். அத்துடன், இலங்கையில் டிஜிட்டல் விளையாட்டுக்களை உருவாக்கி வடிவமைப்பதில் புதியதோர் புரட்சிகரமான மாற்றத்தை இது ஏற்படுத்துவதுடன், இளம் தலைமுறையினர் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இதனூடே ஏற்படுத்திக் கொடுப்பதே நமது நோக்கமாக அமைந்துள்ளது. மேலும், இலங்கையிலுள்ள மொபைல் விளையாட்டுக்களை வடிவமைக்கும் திறமை கொண்டவர்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த MegaPlay app ஒரு களமாக அமையும் என்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். MegaPlay மூலம் உள்நாட்டில் மொபைல் விளையாட்டுக்களில் முன்னேற்றகரமான ஒரு மாற்றத்தை உருவாக்குவதுடன் உள்நாட்டின் e-Sports திறமையாளர்களை உலகளாவிய e-Gaming மேம்படுத்துனர்களுடன் இணைத்து அவர்களது உலகத்தரம் வாய்ந்த gaming படைப்புகளை ஒரே தளத்தில் வெளிப்படுத்துவற்கான வாய்ப்பாகவும் இதனை அமைத்துக் கொடுத்துள்ளோம்" என்றார்.

GameRoar Technologies நிறுவனத்தின் ரவிஹன்ஸ் வெட்டக்கபொத்த அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில் , "GameRoar, Jwave மற்றும் டயலொக் ஆசிஆட்டா ஆகிய மூன்று நிறுவனங்களினதும் ஒரே நோக்காக இருப்பது, மொபைல் விளையாட்டுக்களினூடாக மக்களை பயனுள்ள வகையில் ஒன்றிணைப்பதேயாகும்" என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் "MegaPlay யில் தனித்தனியான அம்சங்கள் இருப்பதுமட்டுமன்றி டிஜிட்டல் விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மற்றும் விளையாட்டு வடிவமைப்பாளர்களுக்கும் புதியதோர் அனுபவம் இதன்மூலம் கிடைக்கப்பெறுகின்றது . ஆசிய வலயத்தினுள் மாத்திரம் 14,000 ற்கும் அதிகமான தரமான டிஜிட்டல் விளையாட்டு வடிவமைப்பாளர்கள் இருப்பது நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். இவர்களினூடே நமது பயனர்களுக்கு அற்புதமான டிஜிட்டல் விளையாட்டுக்களை அணுகுவதற்கான வாய்ப்பும் கிட்டுகின்றது. இவ்வாறு இலங்கையிலுள்ள டிஜிட்டல் விளையாட்டு வடிவமைப்பாளர்களை, புத்தாக்குனர்களை உலக தரத்திற்கு உயர்த்திவிடுவதில் டயலொக் ஆசிஆட்டாவுடன் ஒன்றிணையக் கிடைத்துள்ளமை நமக்கும் பெருமைக்குரியதாக அமைந்துள்ளது" என்றார்.

JWave Technologies யின் பணிப்பாளர் ஷெஹான் கோமஸ் அவர்கள் தெரிவிக்கையில், "கடந்த சில வருடங்களாக e-sports மிக வேகமாக விருத்தியடைந்துள்ள அதேவேளை, கொவிட் -19 பரவல் சூழ்நிலையின் காரணமாக தற்போது e-sports துறையானது புதியதோர் தளத்திற்கு முன்னேறியுள்ளது. அதற்கமைய, மக்கள் அனைவரையும் இலக்காகக் கொண்டதாக 'மொபைல் கேம்ஸ்' துறையானது நாளாந்தம் வளர்ச்சியடைந்து வருகின்றது. MegaPlay ஊடாக e-sports வடிவமைப்பாளர்கள் தமது படைப்புக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அதேவேளை, hyper casual விளையாட்டின்மூலம் அதில் விளையாடுவோர் அதனை பொழுதுபோக்காக கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இதற்காக நமது ஒத்துழைப்பையும் வழங்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகின்ற அதேவேளை e-sports துறையில் நாமும் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதையிட்டு பெருமிதம் கொள்வதுடன் இலங்கையர்கள் மத்தியில் e-sports கழகமொன்றை அமைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.

MegaPlay app ஐ Google Play Store இல் பதிவிறக்கம் (download) செய்யமுடியும். மேலதிக விபரங்களை அறிவதற்கு www.megaplay.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.