பொருள் விரிவாக்கம்

டயலொக் எண்டர்பிரைஸ் ‘டயலொக் Retail Analytics தீர்வை’அறிமுகப்படுத்துகிறது

இது ஒரு உயர்ந்த கண்காணிப்பு அமைப்பாகும்

ஜுன் 06, 2021         கொழும்பு

 

news-1

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான கார்ப்பரேட் தீர்வுகள் பிரிவான டயலொக் எண்டர்பிரைஸ் சமீபத்தில் Microsoft மற்றும் Zone24x7 (பிரைவேட்) லிமிட்டட் உடன் இணைந்து டயலொக் வீடியோ கண்காணிப்பு அடிப்படையிலான Retail Analytics தீர்வை அறிமுகப்படுத்தியது. இது உயர்ந்த கண்காணிப்பு அமைப்பு என்பதுடன் ஒரு பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் வீடியோ பகுப்பாய்வு தீர்வாகும், இது நிறுவனங்கள் தங்கள் வணிக முடிவுகளை சிறப்பாக மேற்கொள்ள நுண்ணறிவு தரவை வெளிக்கொண்டுவர செய்ய உதவும்.

இந்த டயலொக் Retail Analytics தீர்வு, டயலொக் எண்டர்பிரைஸ் அவர்களின் வாடிக்கையாளர் செயற்பாடுகளை நன்கு புரிந்துகொள்வதற்கான விபரங்களை வழங்குவதுடன் விற்பனைக்கு சாதகமான முடிவுகளை எடுக்கவும், தங்கள் நிறுவனங்களுக்கு அவர்களின் சந்தைப்படுத்தல் முன்முயற்சிகளை அறிவிக்கவும் திட்டமிடவும் உதவுகிறது. மேலும் சிறந்த பணியாளர் திட்டத்தை செயல்படுத்துகிறது, பணியாளர் நல்வாழ்வை மேம்படுத்துகிறது, விற்பனை மற்றும் முதலீட்டு மீதான வருமானத்தை மதிப்பீடு செய்கிறது. இது Occupancy Count, வயது வகைப்பாடு, பாலின அடையாளம் மற்றும் பல அர்த்தமுள்ள நுண்ணறிவு போன்ற நிகழ்நேர பகுப்பாய்வு தரவை வெளியிடுகிறது.

இவை தவிர, பணியிடத்தில் எந்தவொரு நபர் ஊடுருவலையும் கண்காணித்து தானாகவே கண்டறியும் “ஊடுருவல் கண்டறிதல்” அம்சத்துடன் செயல்படுகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை எச்சரிக்க இது ஒரு அலாரத்தை உருவாக்குகிறது. இந்த தீர்வுக்கு மேலதிக special hardware units தேவையில்லை, மேலும் தற்போதுள்ள வாடிக்கையாளர் கேமராக்களுடன் எளிதாக ஒருங்கிணைக்க முடியும், அதே நேரத்தில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு Microsoft உடனான கூட்டு முயற்சிகளின் விளைவாக “Infrastructure As A Service (IAAS)” நிறுவன வாடிக்கையாளர்களுக்கு Pay-As-You-Use மூலம் பணம் செலுத்துவதற்கான தெரிவினை வழங்குகிறது.

உயர்தர கண்காணிப்புடன் பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்துவதோடு, நிறுவனங்கள் இலாபகரமான வணிக முடிவுகளை மேற்கொள்ளவும் அதிநவீன தானியங்கி Artificial Intelligence (AI) மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் டயலொக் Retail Analytics தீர்வு உதவுகின்றது.

மேலும் தகவலுக்கு https://business.dialog.lk/products-services/security-surveillance/dialog-retail-analytics-solution/ க்கு செல்லுங்கள் அல்லது 0777 887 887 க்கு அழையுங்கள்.