பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா மற்றும் வெவெநெட் ஆகியவை ஒன்றிணைந்து கோவிட் - 19 நோயாளிகளை பராமரிப்பதற்காக ஒரு தேசிய நோயாளி படுக்கை மேலாண்மை அமைப்பை சுகாதார அமைச்சகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 04, 2021         கொழும்பு

 

news-1

இடமிருந்து வலம்: மருத்துவ சேவைகள் துணை இயக்குனர், டாக்டர் லால் பனாபிட்டிய, மேலதிக செயலாளர், (மருத்துவ சேவைகள்), டாக்டர் சுனில் டி அல்விஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, கௌரவ சுகாதார அமைச்சர், பவித்ரா தேவி வன்னியாராச்சி, இயக்குனர்/மருத்துவ தொழில்நுட்ப சேவைகள், அமைச்சக ஒருங்கிணைப்பாளர் கோவிட் -19 பொறுப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, மாநில, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர், கௌரவ பேராசிரியர் சன்ன ஜயசுமண, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுப்புன் வீரசிங்ஹ, வெவெநெட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுரேன் பிண்டோ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவு தலைவர், திரு. ரெசா அனிஃப், மற்றும் வெவேநெட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சிரேஷ்ட துணை தலைவர், திரு. திலும் குமாரசிங்ஹ

தொற்றுநோயைத் தணிப்பதற்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் அதன் தொழில்நுட்பக் பங்காளனரான வெவெநெட் இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிட்டட் உடன் இணைந்து சுகாதார அமைச்சின் சிகிச்சை மையங்களுக்கு ஒரு தேசிய நோயாளி படுக்கை மேலாண்மை தீர்வை நன்கொடையாக வழங்கியது.

மேலும், மேற்படி தனித்துவமான அத்தியாவசிய தீர்வின் மூலம் சுகாதார அமைச்சினூடாக நிர்வகிக்கப்படுகின்ற அரச மற்றும் தனியார் கொவிட் - 19 சிகிச்சை நிலையங்களில் நடப்புகாலத்திற்கேற்ப நோயாளர் படுக்கை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முகாமைத்துவ கட்டமைப்பொன்று நிறுவப்படும். இவற்றின் பிரதிபலனாக நோயாளர்களுக்கு படுக்கைகளை வழங்குவதில் ஏற்படக்கூடிய கால விரயம் குறித்தான குறைபாடுகள் தீர்க்கப்படுவதுடன் நோயாளர்களை காத்திருக்க வைக்கக்கூடிய வீண் தாமதங்களையும் குறைக்க முடிவதுடன், நோயாளர்களுக்கு உரிய படுக்கை வசதிகள் உள்ளனவா என ஆராய்ந்து கொண்டிருப்பதற்கு பதிலாக அந்நேரத்தை நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் முழுமையாக செலவிடக்கூடியதாகவும் அமையும். மேலும், மேற்படி நோயாளர் படுக்கை முகாமைத்துவ திட்டத்தினால் அவ்வவ் சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களை அனுமதித்தல் தொடர்பான தகவல்களை திரட்டுவதில் ஏற்படக்கூடிய திறனற்ற தன்மையையும் நீக்க முடியும். இதற்கமைய, மருத்துவத்துறை அதிகாரிகள் தற்போது உள்ளூர் மட்டத்திலும் சிகிச்சை முகாம்களிலும் நிலவுகின்ற படுக்கை தேவைப்பாடுகள் குறித்தும், அவற்றை பெறக்கூடிய வழிவகைகள் குறித்தும் பொதுவான ஒரு பார்வையை கொண்டிருப்பர். எனவே , இதன்மூலம் நோயாளிகளை சிகிச்சை முகாம்களுக்கு அனுமதித்தலுக்கென செலவிடும் நேரத்தை முகாமைத்துவப்படுத்த முடிவதுடன் அம்பியூலன்ஸ் சேவை மூலம் நோயாளிகளை விரைவாக கொண்டு செல்வதில் செயல்திறன்மிக்க வழிமுறைகளை கையாளவும் முடிகின்றது. இதனால், தாமதமின்றி அடுத்த நோயாளிமீதான கவனத்தை செலுத்துவதற்கும் இது வாய்ப்பை ஏற்படுத்தும் .

மேற்படி கட்டமைப்பானது, உள்ளூர் சுகாதாரத்துறை மற்றும் சுகாதார அமைச்சின் ஏனைய திட்டங்கள்மூலம் பெறப்படுகின்ற தகவல்களை ஒருங்கிணைப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தலைமை கட்டளை கட்டுப்பாட்டு நிலையம் அல்லது பரவலாக்கப்பட்ட அலகுகளினூடாக நோயாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இந்த வழிமுறைகளானது நோயாளிகளுக்கான படுக்கைகளை ஒதுக்குவதற்கு தற்போது பாவனையிலுள்ள செயல்முறைகளை டிஜிட்டல் மயப்படுத்தி தானியங்கித் தன்மைக்குட்படுத்துவதுடன் தேசிய சுகாதாரத்துறை கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளதுடன் அதன்மூலம் சுகாதாரத்துறை நிர்வாகிகள், தொழில்வல்லுனர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பில் உள்ளவர்களுக்கும் பயன்களை அளிக்கக்கூடியதாகவும் அமையும்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சின் சுகாதார தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளரும் அமைச்சின் கொவிட் -19 ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி அவர்கள் தெரிவித்ததாவது, " இதுவரை கொவிட் - 19 நோயாளர்களின் சிகிச்சைகளுக்கென சுகாதார அமைச்சின்வசம் 32,500 நோயாளர் படுக்கைகள் உள்ளத்துடன், 224 சிகிச்சை நிலையங்களினூடாக மனிதவளம் மற்றும் உழைப்பை பயன்படுத்தி நோயாளர்களை அனுமதித்தல், உரிய சிகிச்சைகளுக்கு அவர்களை உட்படுத்துதல், நோயாளர்களை பார்வையிடுதல் மற்றும் அவர்களை சிகிச்சை நிலையத்திலிருந்து சுகப்படுத்தி அனுப்புதல் போன்ற காரியங்களில் பலவிதங்களிலும் கால நேரம் செலவிடப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் நடப்புச் சூழ்நிலைக்கேற்ப நோயாளர் படுக்கை முகாமைப்படுதலுக்கென தேசிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருப்பதையிட்டு சுகாதாரத்துறை அமைச்சின் சார்பாக டயலொக் நிறுவனத்திற்கும் வெவெநெட் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த மனிதாபிமான முயற்சியானது, மிகச்சிறந்த திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை அமைப்பதற்கும், மிகவும் வெற்றிகரமான ரீதியில் நமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்துகின்றது. நோயாளர்களுக்கான இந்த படுக்கை முகாமைத்துவ திட்டமானது கொவிட் - 19 இற்கு மட்டுமன்றி அதிதீவிர சிகிசிச்சை முகாமைத்துவம் மற்றும் சிறப்பு பராமரிப்பு சேவைகள் ஆகியவற்றிலும் நாட்டிற்கு வழங்கப்பட்ட தனித்துவமான வளமாக அமைந்துள்ளமை போலவே, நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதாரத்துறையினரால் நடப்புக்கால மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் உயர்தரத்திலான சேவையை வழங்குவதற்கு இது ஒத்தாசையாகவும் அமையும்."

குளோபல் வெவெநெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் பின்டோ கருத்து தெரிவிக்கையில் "இந்த சந்தர்ப்பத்தில் டயலொக் உடன் தொழில்நுட்ப பங்காளராக இணைந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது நாட்டில் சுகாதாரப் பாதுகாப்புத் துறையை முன்னேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு சான்றாகும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், “கோவிட் -19 இனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குனர்களை மேலும் ஆதரிக்க இந்த வாய்ப்பினை வழங்கிய சுகாதார அமைச்சகத்திற்கு எமது நன்றிகள். நெருக்கடியான நேரத்தில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் ஆதரிக்க எங்களது முயற்சிகளுக்கு உதவிய எங்கள் தொழில்நுட்ப பங்காளர் வெவெநெட் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.