பொருள் விரிவாக்கம்

கிளப் விஷன் அங்கத்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக நிகழ்ச்சித் தொடரை டயலொக் ஒழுங்கு செய்திருந்தது

August 24, 2021         Colombo

 

தன்னுடைய மதிப்புமிக்க கிளப் விஷன் அங்கத்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையனுபவத்தை வழங்குவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் முதற்தர தொலைத் தொடர்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பிரத்தியேக virtual நிகழ்வுத் தொடரை நடாத்தியது.

நிகழ்ச்சி வரிசையின் ஆரம்ப நிகழ்வாக டயலொக் கிளப் விஷன், SLASSCOM உடன் இணைந்து 'வங்கி மற்றும் நிதித் துறையில் தானியங்கி சேவை' பற்றிய virtual கருத்தரங்கமொன்றை நடாத்தியது. வங்கி துறையில் ரோபோடிக் செயல்முறை தானியங்கலை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு வழக்காய்வுகள், JKIT இன் திலினி டி அல்விஸ், Millenium IT இன் சஞ்சய தயானந்தா மற்றும் Potenza வின் தனுஷா முத்துக்குமாரனா ஆகியோரால் மதிப்பாய்வு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டது. டயலொக் கிளப் விஷன் Platinum மற்றும் Gold அங்கத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச பதிவு மற்றும் நிகழ்வுக்கான இலவச அனுமதி வழங்கப்பட்டது.

COD Mobile Solo Challenge எனும் பிரத்தியேக லைவ் ஆன்லைன் கேமிங் போட்டியில் பங்கேற்க கிளப் விஷன் Red அங்கத்தவர்களுக்கும் டயலொக் அழைப்பு விடுத்திருந்தது. டயலொக் கேமிங்கின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் வெற்றியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடரின் அடுத்த நிகழ்வான ‘TechKids Summer App Hackathon’, SLASSCOM உடன் இணைந்து 10-16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு ideation, coding மற்றும் மொபைல் அப்ளிகேஷன் என்பவற்றை உள்ளடக்கிய ஆறு அமர்வுகளை கொண்ட virtual வழிகாட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத. வெற்றியாளர்கள் TechKids coding திட்டத்தில் பங்கேற்க உதவித்தொகையை பெற்றனர். ‘Kids Can Code 2021’ என்பது SLASSCOM உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நிகழ்நிலை பட்டறை ஆகும். இது பிரத்தியேகமாக டயலொக் வாடிக்கையாளர்களின் 12-16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோடிங் பற்றிய அடிப்படை அறிவை வழங்கும் ஒரு நிகழ்வு மற்றும் அதிவேக virtual கற்றல் அனுபவத்தை வழங்கியது. இரத்தினபுரி, கேகாலை, அனுராதபுரம், பதுளை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆர்வமுள்ள, தொழில்நுட்ப ஈடுபாடுள்ள, எதிர்காலத்திற்கு தயாரான தலைமுறையினரை ஊக்குவிக்கும் மற்றும் வளர்க்கும் தொலைநோக்கு பார்வையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் ஆதரவாளராக இருப்பதில் டயலொக் பெருமை கொள்கிறது.

‘Stay Strong (Suwathi Diviyata Athwalak) திட்டத்தின் மூலம், டயலொக் தங்களின் சிரேஷ்ட பிரஜை வாடிக்கையாளர்களின் ஒரு பகுதியினரை நல்வாழ்வு குறித்த நேரடி ஒளிபரப்பு அமர்வில் பங்கேற்க அழைத்தது, இந்நிகழ்வு YouTube வாயிலாக நாடாத்தபட்டது. தொற்றுநோய் காலத்தின் போது தொற்றா நோய்களை கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனைப் பராமரித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த அமர்வு கருத்தில் கொண்டிருந்தது. இந்த தொற்றுநோய் காலத்தில் மனநிறைவு, நல்வாழ்வு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை முறையை தழுவிக்கொள்ளல் என்பவற்றில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தும் தொடர் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

டயலொக் தன் மதிப்புமிக்க கிளப் விஷன் அங்கத்தவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பிரத்தியேக virtual நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும். டயலொக் கிளப் விஷன் அங்கத்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய அற்புதமான சலுகைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், இலங்கையின் மிக முதன்மையான விசுவாச திட்டத்தில் சேருவதைப் பற்றி மேலும் அறிய, வாடிக்கையாளர்கள் MyDialog App ஐ பார்வையிடவும் அல்லது www.dialog.lk/club-vision எனும் தளத்திற்கு செல்லவும்.