பொருள் விரிவாக்கம்

Dialog மற்றும் இலங்கை சுகாதார தகவலியல் சங்கம் ஆகியன இணைந்து நிறுவும் ‘Digital Health Innovation Laboratory’ (டிஜிட்டல் சுகாதார புத்தாக்க ஆய்வகம்)

நவம்பர் 18th, 2019         கொழும்பு

 

news-1

(இ - வ) இலங்கையின் சுகாதார தகவலியல் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரோஹனா பசில் மாரசிங்க, இலங்கையின் சுகாதார தகவல் சங்கத்தின் முன்னையத் தலைவர் பேராசிரியர் வஜிர H.W. திசாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழுமத்தலைமை நிர்வாகி சுபுன் விரசிங்ஹ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழுமத்தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேதா மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் வலையமைப்புச் செயற்பாடுகள் மற்றும் சேவை உத்தரவாதப் பிரிவின் துணைத் தலைவர் இந்திக வல்பிடகே.

இலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு வழங்குனரான ‘Dialog Axiata PLC’ மற்றும் இலங்கை சுகாதார தகவலியல் சங்கம் (HISSL) ஆகியன சுகாதாரத் துறையில் புத்தாக்க ‘Digital’ தீர்வுகளை அடைவதற்கு, இந்நாட்டில் முதன் முறையாக ஒரு ‘Digital Health Innovation Laboratory’ ஐ நிறுவ இணைந்துள்ளன.

முன்மொழியப்பட்ட இவ் ஆய்வகத்தின் முதன்மை குறிக்கோள் யாதெனில் சுகாதாரத்துறையில் புதிய தொழில்நுட்ப “Digital” தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் மக்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக அதன் உற்பத்தி, ஆராய்ச்சி, மற்றும் வணிகமயமாக்கல் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதாகும். இதன் அடுத்த கட்ட திட்டமாவது, புத்தாக்க கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கும் சிறப்பு மையமொன்றை ‘Digital’ சுகாதார தீர்வுகளை மேம்படுத்துவதற்காக நிறுவுதல்; மற்றும் “Digital” ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளின் தொழில்முறைகளை இவை சம்பந்தமான அறிவார்ந்த விடயங்களை மேம்படுத்தி பரிமாறுவதன் மூலம், தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவம்; கல்வித்துறை மற்றும் தனியார்த்துறை ஆகியவற்றிற்கு இடையிலான உடனுழைப்புக்கான தடைகள் என்பனவற்றை அகற்றுதல் மற்றும் சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளை ஒழுங்குபடுத்துதல் என்பனவாகும்.

ஆய்வகத்தால் ஆராயப்படவுள்ள சில விடயங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான “Internet of Medical Things”, “Genomics and Bioinformatics”, “Point of Care Biomarker Systems”, “Artificial Intelligence (AI)”, “Big Data and Blockchain” ஆகியவை இலங்கையின் சுகாதாரத்துறையின் புத்தாக்க தயாரிப்பு வளர்ச்சியின் பின்னணியில் அடங்கும். இலங்கையின் சுகாதார தகவலியல் சங்கம், சுகாதார மற்றும் மருத்துவ தொழிற்பண்பட்டவர் தொழில்முறை அமைப்பு மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தை இவ் ஆய்வுகூடத்திற்கு வழங்கும் அதே வேளையில் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப உதவியாளரான “டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி” நிறுவனம், அதன் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்டு முன்மொழியப்பட்ட இவ் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவி திறம்பட நடாத்த உறுதுணையளிக்கும்.

இவ் கூட்டு முயற்சி குறித்து “டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி” இன் வலையமைப்புச் செயற்பாடுகள் மற்றும் சேவை உத்தரவாதப் பிரிவின் துணைத் தலைவர் ஆன திரு. இந்திக வல்பிடகே கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் சுகாதார தகவலியல் சங்கத்துடன் இணைந்து ‘Digital Health Innovation Laboratory’ இனை நிறுவுவதைக் குறித்தும் மேலும் முதன்முறையாக இலங்கையில் வாழ்க்கை அறிவியலை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்கி, அனைத்து சமூகத்தினரும் அணுகக்கூடிய நியாயமான சுகாதார சேவையை வழங்குவது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் இரு தரப்பினரிடமும் தனிச்சிறப்பாகவுள்ள சக்திவாய்ந்த முக்கிய திறன்களைக் கொண்டு, சுகாதார அமைப்புகளை ‘Digital’ மயமாக்குவதன் மூலம், இலங்கையின் சுகாதாரத் துறையை ஒரு சுகாதார தொழில்நுட்ப புரட்சிக்கு இட்டுச் சென்று, மேலும் அதனூடாக சுகாதர சேவை வழங்குதலில் உள்ள வேறுபாடுகளை நீக்கி, சிறப்பான முன்கணிப்பு, தனித்துவமான சேவை மற்றும் நோய்த்தடுப்பு சுகாதார பராமரிப்பு மூலம் நோயாளியின் அனுபவத்தை மாற்றியமைக்க முடியும்.”

இலங்கை சுகாதார தகவலியல் சங்கம் (HISSL) சார்பாக தனது கருத்துக்களை தெரிவித்த பேராசிரியர் வஜிர H. W. திசாநாயக்க, “கடந்த பத்தாண்டுகளாக ‘Digital’ சுகாதாரத் தளத்தில் நியாயமான கண்டுபிடிப்புகளை இலங்கை சுகாதார தகவல் சங்கம் ஊக்குவித்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புகளால் தேசிய சுகாதார சேவை பயனடைந்துள்ளது. சுகாதார சேவை மையங்களைக் காட்டிலும் பொது இடத்தில் மற்றும் வீட்டில் பல புதுமையான கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தி சிறப்பான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான அவசியத்தை இப்போது நாம் காண்கிறோம். நாங்கள் அமைக்கவுள்ள ‘Digital சுகாதார புத்தாக்க ஆய்வகம்’ அதைச் சிறப்பாக செய்ய எங்களுக்கு உதவும்”