பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

வாடிக்கையாளர் (“வாடிக்கையாளர்/நீங்கள்”) டயலொக் ஆசியாட்டா பீஎல்சீ (“டயலொக்”) நிறுவனத்தால் வழங்கும் தயாரிப்புக்கள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை அணுகுவதன் மூலம் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் (“அமைப்பு") சார்பாக நீங்கள் தயாரிப்புக்கள் மற்றும்/அல்லது பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் சார்பாக இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதோடு இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நிறுவனத்தை பிணைப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இருப்பதாகப் பிரதிநிதித்துவப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறீர்கள்

வரைவிலக்கணங்கள்

‘ஐவீஆர்’ (IVR) என்பது ஒரு விசைப்பலகை ஒன்றின் மீது (DTMF tones) விசையை அழுத்துவதன் மூலம், கேள்ஒளி உள்ளடக்கம் (Audio Content) மற்றும் அறிவுறுத்தல்களை முன்பே பதிவுசெய்திருக்கின்ற கணினியால் இயக்கப்படும் குரல் முறைமை ஒன்றுடன் மனிதர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கும் தொழில்நுட்பமாகும்.

“இணையப் பக்கம்/கள்” (“Portal/s”) என்பது ஒரு யூஆர்எல் (Uniform Resources Locator) வழியாக அணுகக்கூடிய ஒரு மெய்நிகர் இடத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கும் பல்ஊடக உள்ளடக்கம்/தகவல்களை வழங்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தைக் குறிக்கும்.

"வாஸ் சேவைகள்" (“VAS Services”) என்பது செய்தி விழிப்பூட்டல்கள், ஜாதக விழிப்பூட்டல்கள், விலைமனு சேவைகள், விளையாட்டுக்கள் தொடர்பான விழிப்பூட்டல்கள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு சேவைகள், வினாடி வினாக்கள், இணையத்தளங்கள் மற்றும் ஏனைய விழிப்பூட்டல்கள்; (மதம், சுகாதாரம், ஊக்குவிப்பு போன்றவை) போன்ற சேவைகள் ஆகும், அவை காலத்திற்கு காலம் திருத்தப்படலாம்;

“சேவைக் கட்டணம்" என்பது வாஸ் சேவைகளில் ஏதேனும் அங்கத்துவத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகும்.

“வாடிக்கையாளர்” என்பது டயலொக் நிறுவனத்தால் வாஸ் அங்கத்துவத்திற்கான வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் ஒருவர் அல்லது ஒரு கம்பனி/தனி உரிமையாளர்/பங்குடமை நிறுவனம், மற்றும்/அல்லது அதன் பின்னர் ஒன்று மற்றும்/அல்லது அதற்கு மேற்பட்ட டயலொக் சேவைகளுக்கு வெற்றிகரமாக அங்கத்துவம் செலுத்தியவர் எனப் பொருள்படும்.

“யூஎஸ்எஸ்டீ” ("USSD") என்பது ஜீஎஸ்எம் வலைப்பின்னல்களில் குறுஞ் செய்திகளை உடனடி செய்தியிடல் சேவையாக அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு நெறிமுறை (கட்டமைக்கப்படாத துணை சேவை தரவு) என்று பொருள்படும். அத்தகைய குறுஞ் செய்திகள் கம்பனியின் பக்கத்திலோ அல்லது வாடிக்கையாளரின் கருவியிலோ சேமிக்கப்படமாட்டாது.

“ஓடிடி சேவைகள்” (“OTT Services") என்பது, டயலொக் (இயக்குனர்கள்) வலைப்பின்னல் மீது சாராமல், பகிரங்க இணையத்தில் ஓடியோ, வீடியோ மற்றும் ஏனைய பல்ஊடக உள்ளடக்கத்தை வழங்கும் சேவையாகும், இதில் இயக்குனரின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மாத்திரமே இயக்குனர் கட்டணங்ளை வசூலிக்க உதவுகின்றார்.

“சேவை/உள்ளடக்க வழங்குநர்/கள்” (service/Content/Provider/s) என்பது, டயலொக் கணக்கின் ஊடாக சேகரிக்கப்படக் கூடிய கட்டணம் ஒன்றிற்காக (தனி நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு உடமையுள்ள அறிவு, தகவல், திறன்கள், மென்பொருள் செயலிகள் அல்லது தளங்களைப் பயன்படுத்தி) டயலொக் வாடிக்கையாளர்களுக்கு உள்ளடக்கம் அல்லது சேவையை வழங்குவதற்கு/விநியோகம் செய்வதற்கு, நிர்ணயிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், டயலொக் நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற தளங்கள் மற்றும் வலையமைப்பு அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ள தனிநபர் அல்லது நிறுவனம் என்று பொருள்படும்.

நீங்கள் இத்தால் மேலும் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கின்றீர்கள்:

  • தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அத்தகைய டயலொக் சேவைகளை வழங்குவதற்காக ஏதேனும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநருடன் உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பகிர்தல்; உட்பட ஆனால் அதற்கு மாத்திரம் வரையறுக்கப்படாத டயலொக் சேவைகளை வழங்குவதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துவதற்கு நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • சேவைக் கட்டணம் செலுத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளின் தொடர்புடைய கட்டணங்கள், சேவைக் கட்டண காலம் மற்றும் பட்டியல் நிகழ்வு
  • டயலொக் நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், உங்களுக்கு டயலொக் சேவைகளை வழங்கும்போது, அவர்களின் தனிப்பட்ட இணையதளங்கள்/கையடக்க செயலிகள் அல்லது இயங்குதளங்களுக்கு நீங்கள் திருப்பிவிடப்படும்போது, ஏனைய ஊடகங்கள் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கலாம். அத்தகைய ஒவ்வொரு சேவை வழங்குநர்களின் அந்தரங்கம் தொடர்பான அறிவித்தலை மதிப்பாய்வு செய்யுமாறு டயலொக் உங்களுக்கு கடுமையாக அறிவுறுத்துகிறது.
  • உங்களுக்கு டயலொக் சேவைகளை வழங்கும் போது, டயலொக்/ஐடியாமார்ட்/ஐடியாபிஸ் (IdeaBiz) மற்றும்/அல்லது எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் அவ்வப்போது உங்களைத் தொடர்பு கொள்ளலாம், மேலும் நீங்கள் அத்தகைய நோக்கங்களுக்காகத் தொடர்புகொள்வதற்கு உங்கள் வெளிப்படையான ஒப்புதலை நீங்கள் வழங்குகிறீர்கள்.
  • அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்/களின் உள்ளடக்கம், அந்தரங்க அறிவித்தல்கள் அல்லது நடைமுறைகள் தொடர்பில் டயலொக்/ஐடியாமார்ட்/ஐடியாபிஸ் (IdeaBiz) இற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை மற்றும் அவை தொடர்பில் சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு அளவில் எந்தப் பொறுப்பும் இருக்கமாட்டாது என கருதப்படுகின்றது.
  • https://dlg.dialog.lk/value-added-services-list மற்றும் https://dlg.dialog.lk/other-vas-services. சேவைகளில் உள்ள மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்/உள்ளடக்க வழங்குநர்களின் இந்த பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் வாசித்து முழுமையாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை மேலும் உடன்பட்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • https://dlg.dialog.lk/dialog-terms-and-conditions இல் உள்ள கையடக்க இயக்குநர்/களின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் வாசித்து முழுமையாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

பயன்பாட்டு நியதிகள்

  • (“டயலொக் சேவைகள்") இதனுடன் தளங்களில் தரப்பட்ட வாஸ் இன் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்கு அங்கத்தவராகுவதற்கு அனுமதிக்கக் கூடிய அங்கத்துவ சேவைகளை டயலொக் வழங்குகின்றது.
  • டயலொக் சேவைகள் மூலம் இயக்கப்படுகின்ற வாஸ் சேவைகளின் உங்கள் பயன்பாட்டை இந்த பயன்பாட்டு நியதிகள், நிர்வகிக்கும்.
  • ஒவ்வொரு வாஸ் சேவைக்கும் குறிப்பிட்ட நியதிகள் பின்வரும் அட்டவணையில் இன்னும் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன: உரிய வாஸ் சேவைக்கு வாடிக்கையாளராகிய வாடிக்கையாளருக்கு இதில் குறிப்பிடப்பட்ட பொதுவான நியதிகளுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட நியதிகளையும் குறிப்பீடு செய்வதற்கு உரிமை உண்டு.
    அட்டவணை A - செய்தி சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை B - ஜாதக சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை C - விலைமனு சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை D - விளையாட்டுக்கள் விழிப்பூட்டல்களுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை E - வினாடி வினாக்களுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை F – அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு சேவைக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை G – இணையப் பக்கங்களுக்கான (Portal) குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை H – ஐவீஆர் (IVR) கணனி விளையாட்டுக்களுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை I - ஏனைய விழிப்பூட்டல்களுக்கான குறிப்பிட்ட நியதிகள் (மதம், சுகாதாரம், ஊக்குவித்தல் போன்றவை)
    அட்டவணை J - நன்கொடை சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை K - இருப்பிட கண்காணிப்பு சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;
    அட்டவணை L- கையடக்கத் தொலைபேசி செயலிகள் மற்றும் ஓடிடி சேவைகளுக்கான நியதிகள்;
    அட்டவணை M - ரிங்கிங் டோன்களை இயக்குவதற்கான குறிப்பிட்ட நியதிகள்; ("PRBT")

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 டயலொக் சேவைகளுக்கான உங்கள் கட்டணம் செயலிழக்கச் செய்யப்படும் வரை தொடரும்.

1.2 டயலொக் சேவைகளுக்கான கட்டணங்கள் உங்கள் நிலுவை கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.

1.3 ஒன்றில் வாடிக்கையாளர் தொடங்கப்பட்ட கட்டணம் அல்லது இரட்டை ஒப்புதல் மூலம் டயலொக் சேவைகளுக்கு வாடிக்கையாளராக்கப்படும். வாடிக்கையாளரராகிய பின்னர் நினைவூட்டல்கள் எதுவும் அனுப்பப்படாது. இருப்பினும் நீங்கள் அங்கத்துவம் பெற்ற வாஸ் சேவையை சுயகவனிப்பு செயலி மற்றும் #678*6# இல் பார்வையிடலாம்.

2. டயலொக் நிறுவனத்தின் உரிமைகள்

2.1 டயலொக் நிறுவனம் பின்வரும் உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்கின்றது:

i. எந்தவொரு டயலொக் சேவையையும் அதன் விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் எந்தவித பொறுப்புகளும் இல்லாமல் அறிவித்தலுடன் அகற்றுதல்

ii. இந்த நியதிகளை எந்த நேரத்திலும் மாற்றலாம், புதிய நியதிகளை சேர்க்கலாம், அல்லது திருத்தலாம்.

iii. குறிப்பிட்ட டயலொக் சேவைகள் அல்லது அதன் ஏதேனும் பகுதியை எந்த நேரத்திலும் மாற்றியமைத்தல், இடைநிறுத்துதல் அல்லது துண்டித்தல்:

iv. எந்த நேரத்திலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த சேவையை வழங்குவதற்காக அதன் துணை நிறுவனங்கள் மற்றும்/அல்லது அதன் கீழுள்ள நிறுவனங்களுடனும் மற்றும்/அல்லது ஏதேனும் குற்றவியல் விசாரணை தொடர்பாக அல்லது ஏதேனும் குற்றவியல் நடவடிக்கைகளின் நோக்கத்திற்காக ஏதேனும் அரசாங்க அதிகார சபையுடன் தங்கள் தரவுத்தளம்/குறிப்பிட்ட வாடிக்கையாளர் தகவலைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஆகும்.

2.2 சட்டத்தால் அல்லது சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், வழங்கப்படுகின்ற ஏதேனும் ஒன்று மற்றும்/அல்லது அதற்கு மேற்பட்ட டயலொக் சேவைகளுக்காக ஒரு வாடிக்கையாளரை அணுகுவதை மறுக்க டயலொக் நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

2.3 இந்த நியதிகளைப் புதுப்பிப்பதன் மூலம் ஏதேனும் மாற்றங்கள் குறித்து டயலொக்; உங்களுக்குத் தெரிவிக்கும், மேலும் அத்தகைய ஒவ்வொரு மாற்றத்தின் குறிப்பிட்ட அறிவித்தலைப் பெறுவதற்கான எந்த உரிமையையும் நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள். புதுப்பிப்புக்கள் குறித்து தொடர்ந்து அறிய இந்த நியதிகளை அவ்வப்போது மீளாய்வு செய்வது உங்கள் பொறுப்பாகும். அத்தகைய திருத்தப்பட்ட நியதிகள்; இடுகையிடப்பட்ட திகதிக்குப் பின்னர், டயலொக் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், திருத்தப்பட்ட நியதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீங்கள் உட்பட்டவராகவும், ஏற்றுக்கொண்டதாகவும் கருதப்படுவீர்கள்.

3. வாடிக்கையாளரின் கடப்பாடுகள்

3.1 இங்கு வழங்கப்படும் டயலொக் சேவைகள் உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாத்திரமாகும். இந்த வாஸ் சேவைகளை வழங்கும் ஒவ்வொரு உள்ளடக்கம்/தளம் வழங்குநருக்கும் அவர்களின் சொந்த உள்ளடக்கத்திற்கான உரிமைகள் உள்ளன மற்றும் அவற்றை வாடிக்கையாளர் வணிக நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உள்ளடக்கம் / இயங்குதள வழங்குநரால் ஏதேனும் உள்ளடக்கம் தொடர்பான மீறல்கள் இருந்தால், அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு டயலொக் நிறுவனம் பொறுப்பாக மாட்டாது.

3.2 வாடிக்கையாளர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், செயற்பாட்டில் உள்ள டயலொக் இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் ஒன்று மற்றும்/அல்லது அதற்கு மேற்பட்ட டயலொக் சேவைகளை செயற்படுத்தும் போது நிலுவை இருக்க வேண்டும்.

3.3 டயலொக் சேவைகளின் பயன்பாடு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மற்றும் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக மாத்திரமாகும். எனவே, இந்த நியதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாத்திரமே நீங்கள் டயலொக் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள் என்பதற்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

3.4 உங்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத செயல்களும் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என்பதற்கு நீங்கள் உடன்படுகின்றீர்கள் அத்தோடு அத்தகைய அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு நீங்கள் எல்லா நேரங்களிலும் பொறுப்பாவீர்கள் எனவும் நீங்கள் உடன்படுகின்றீர்கள்.

3.5 உங்களால் கட்டணம் செலுத்தப்பட்ட டயலொக் சேவைகளின் அச்சுறுத்தல் மற்றும்/அல்லது அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு மீறல்களுக்கு உடனடியாக டயலொக் நிறுவனத்திற்கு அறிவிப்பதற்கு நீங்கள் தனியாக பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

3.6 https://www.dialog.lk/privacy-notice இல் அணுகக்கூடிய முழு டயலொக் நிறுவனத்தின் இரகசியம் பேணுதல் கொள்கையை நீங்கள் உடன்பட்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். வாஸ் சேவைகளுக்கு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதன்; மூலம், மேற்கூறிய இரகசியம் பேணுதல் அறிவித்தலுக்கு கட்டுப்படுவதற்கு உங்கள் வெளிப்படையான ஒப்புதலை வழங்குகிறீர்கள்.

3.7 நியதிகளில் வெளிப்படையாக குறிப்பிடப்படாத அனைத்து உரிமைகளும் டயலொக் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4. கட்டண நியதிகள் மற்றும் மீள்கொடுப்பனவுக் கொள்கை

4.1 வாஸ் சேவைகளுக்கான ஏற்புடைய கட்டணச் செலவுகள் அங்கத்தவராகுவதற்கு முன்னர் தெரிவிக்கப்படும் அத்தோடு வாஸ் சேவையைப் பெறுவதற்கு உரிய கட்டணங்களுக்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

4.2 கட்டண செலவுகள் மற்றும் கட்டண நியதிகள் டயலொக் மூலம் அவ்வப்போது மாற்றப்படலாம் மற்றும் அத்தகைய மாறுபாடு அவ்வப்போது டயலொக் நிறுவனத்தால் இற்றைப்படுத்தப்படும். அதில் நீங்கள் டயலொக் சேவையைப் பயன்படுத்துவது, அத்தகைய திருத்தப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட கட்டண செலவுகள் மற்றும் கட்டண நியதிகளுக்கான உங்கள் உறுதிப்படுத்துதலாகவும் மற்றும் உடன்பாடாகவும் கருதப்படும்.

4.3 கட்டண செலவுகள் செலுத்தப்படாத சந்தர்ப்பத்தில், அத்தகைய கட்டணம் முழுமையாக செலுத்தப்படும் வரை, வாஸ் சேவைக்கான அணுகலை இடைநிறுத்துவதற்கு டயலொக் நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

4.4 கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் தொடர்பாக அரசாங்கம், மாகாண சபை, உள்ளுராட்சி அதிகாரசபை அல்லது வேறு ஏதேனும் அரசாங்க முகவர் ஆகியவற்றால் தற்போது அல்லது எதிர்காலத்தில் விதிக்கப்படும் வரிகள் அல்லது ஏனைய அறவீடுகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் வாடிக்கையாளரால் பொறுப்பேற்கப்பட வேண்டும்.

4.5 கட்டணங்கள் நாளாந்த, வாராந்த அல்லது மாதாந்த அடிப்படையில் வசூலிக்கப்படும்.

4.6 சேவையில் ஒரு செயலிழப்பு மற்றும் சேவை வழங்கப்படாவிட்டால் மாத்திரமே கட்டண செலவுகளைத் திரும்பப் பெற முடியும். மன மாற்றம், சேவையைப் பயன்படுத்தாமை அல்லது வாஸ் சேவையை மறந்துவிடுதல் ஆகியவை பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு செல்லுபடியான காரணங்களாகக் கருதப்படாது. வாடிக்கையாளரின் அனுமதியின்றி வாஸ் சேவை எந்த காரணத்திற்காகவும் செயல்படுத்தப்பட்டிருந்தால் மற்றும் அதை நிரூபிப்பதற்கு போதிய சான்று இருந்தால், பணத்தைத் திரும்பப் பெறலாம். பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான இறுதி முடிவு டயலொக் மற்றும் உள்ளடக்க வழங்குனரைச் சார்ந்ததாகும்.

4.7 நீங்கள் ஒப்புதல் அளித்து கட்டணம் செலுத்திய வாஸ் சேவையின் விலை மற்றும் செல்லுபடியாகும் தன்மையின் அடிப்படையில் உங்களிடம் கட்டணம் விதிக்கப்படும். உள்ளடக்க வழங்குனருடன் கடுமையான நியதிகள் மற்றும் ஒப்பந்தங்களுடன், வாடிக்கையாளருக்கு பெறுமதி சேர்த்தல், சேவைக்கான கட்டணம் வசூலிக்கும் இயலுமையை டயலொக் வழங்கியுள்ளது.

5. இழப்பீடு மற்றும் பொறுப்பு வரையறை

5.1 உங்களால் இந்த நியதிகளின் மீறுகையிலிருந்து அல்லது மீறுகைக்கான குற்றச்சாட்டிலிருந்து டயலொக் மற்றம் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிரான (ஏதேனும் அரசாங்க அதிகார சபையின் உரிமைகோரிக்கை உட்பட) எழுகின்ற எவரேனும் மூன்றாம் தரப்பினர் உரிமைக்கோரிக்கைகளுடன் தொடர்பில் ஏற்படுகின்ற (சட்டத்தரணி மற்றும்/அல்லது வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட) நியாயமான கிரயங்கள் மற்றும் வழக்காடல் செலவினங்கள் என்பவற்றுடன் சேர்த்து எவையேனும் மற்றும் சகல உரிமைகோரிக்கைகள், பொறுப்புகள், இழப்புக்கள், சேதங்கள் மற்றும் தீர்ப்புக்கள் தொடர்பிலும் மற்றும் அவற்றிற்கு எதிராகவும் சகல சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளர் டயலொக் மற்றும் அதன் துணை நிறுவனங்களை பாதுகாக்கவும், இழப்பீடு வழங்கவும் மற்றும் அவற்றிலிருந்து தீங்கின்றி வைத்திருக்கவும் வேண்டும்.

5.2 டயலொக் சேவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு கட்டணம் செலுத்துவதன் மூலமும் மற்றும் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், டயலொக் சேவைகளைப் பயன்படுத்துதல் அல்லது அத்தகைய சேவைகளைப் பயன்படுத்த இயலாமை தொடர்பாக எழுகின்ற. நேரடியான, மறைமுகமான, தற்செயலான, தண்டனைக்குரிய, விசேட அல்லது விளைவாந்தன்மையுடைய சேதங்களுக்கு டயலொக் பொறுப்பாகமாட்டாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

5.3 இங்குள்ள நியதிகளுக்கு அமைவாக, இந்த நியதிகளின் கீழ் கட்டணம் செலுத்திய டயலொக் சேவையை செயலிழக்கச் செய்தல்/இரத்து செய்தலுக்கு மாத்திரமே வாடிக்கையாளர்கள் பரிகாரமளிக்கின்றனர்.

5.4 டயலொக் பின்வருவனவற்றுக்கு பொறுப்பாகமாட்டாது:

i. சேவை தொடர்பாக எழும் அவதூறு, அபாண்டம், புலமைச் சொத்துரிமை மீறல் தொடர்பான உரிமைக்கோரிக்கைகள் மற்றும் டயலொக் சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளரின் ஏதேனும் செயலைச் செய்தல் அல்லது செய்யாமை ஆகியவற்றால் எழும் ஏதேனும் கோரிக்கை: மற்றும்

ii. வாடிக்கையாளருக்கு அல்லது வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது வாடிக்கையாளர் மூலம் உரிமைகோருகின்ற மூன்றாம் தரப்பினருக்கு அல்லது வேறுவகையில் இதன் ஏதேனும் டயலொக் சேவையின் ஏற்பாட்டின் ஊடாக வாடிக்கையாளரால் அல்லது எவரேனும் மூன்றாம் தரப்பினரால் அனுபவிக்கின்ற ஏதேனும் இழப்பு அல்லது சேதம், அத்தகைய இழப்பு அல்லது சேதம் வாடிக்கையாளரால் அல்லது எவரேனும் மூன்றாம் தரப்பினரால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, விசேடமானதாகவோ, விளைவாந்தன்மை உடையதாகவோ அல்லது வணிகம்/வருமானம்/இலாபங்களின் இழப்பாகவோ இருக்கலாம்.

5.5 சட்டத்தால் நடைமுறைப்படுத்தக்கூடிய முழு அளவிற்கு, டயலொக் சேவை/களின் பயன்பாட்டிலிருந்து அல்லது அத்தகைய சேவையின் பயன்பாட்டினால் எழுகின்ற அத்தகைய தரப்பினரால் அல்லது அவர்களது சொத்துக்களால் ஏற்படும் அல்லது அனுபவிக்கும் எந்தவொரு காயத்திற்கும் வாடிக்கையாளருக்கு அல்லது எவரேனும் மூன்றாம் தரப்பினருக்கு டயலொக் பொறுப்பாகமாட்டாது.

5.6 உள்ளடக்க வழங்குநரால் வழங்கப்படுகின்ற வாஸ் சேவையில் உள்ள உள்ளடக்கம் உட்பட டயலொக் சேவைகளின் பயன்பாட்டிலிருந்து எழும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் டயலொக் விலக்கப்பட்டுள்ளது.

5.7 சட்டத்தால் அல்லது வேறுவிதமாக இந்த நியதிகள்pல் மறைமுகமாக அல்லது இணைக்கப்படக்கூடிய அனைத்து நிபந்தனைகள் அல்லது உத்தரவாதங்கள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு வெளிப்படையாக விலக்கப்பட்டுள்ளன.

6. இதர விடயங்கள்

6.1 டயலொக் மற்றும் உள்ளடக்க வழங்குனர் அவ்வப்போது ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். இதன்போது ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட பரிசொன்றை வென்றெடுப்பதற்கான தகைமையைப் பெறுவார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு திறன் அல்லது சேவையைப் பயன்படுத்திய விதத்தின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படலாம் அல்லது விருப்பறிவிப்பு நியதிகளைப் பொறுத்து வெற்றியாளர் டயலொக் நிறவனத்தின் ஒப்புதலுடன் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம். டயலொக் ஊழியர்கள், ஊழியர்களின் உறவினர்கள் போன்றோருக்கு அத்தகைய சலுகைகளுக்கு உரிமை இருக்க மாட்டாது.

6.2 வாஸ் இன் கீழ் வழங்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான உரிமங்கள் மற்றும் வாஸ் இன் கீழ் வழங்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான உரிமைகள் தொடர்புடைய உள்ளடக்க வழங்குநருக்கு மாத்திரமே சொந்தமானது என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். வாஸ் இன் கீழ் பகிரப்படுகின்ற உள்ளடக்கங்கள் அரசாங்கத்தால் அவ்வப்போது விதிக்கப்படும் நியதிகள் மற்றும் சட்டங்களின்படி இருப்பதையும் மற்றும் அவை மாற்றப்படாமலோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படாமலோ இருப்பதை உறுதி செய்கின்ற பொறுப்பு தனியே உள்ளடக்கம் வழங்குனர்களின் பொறுப்பாகும். அதன்படி, அத்தகைய உள்ளடக்க வழங்குநர்கள்/மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் வாஸ் சேவைக்கு அல்லது இந்தச் சேவைகளின் அம்சங்களுக்கு ('ஏதேனும் இருந்தால்') டயலொக் எந்த நேரத்திலும் பொறுப்பாகமாட்டாது.

6.3 டயலொக் நிறுவனத்தால் ஏதேனும் நியதிகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் அல்லது ஈடுபாடு, அல்லது வாடிக்கையாளர் ஒருவருக்கு டயலொக் மூலம் நேரத்தை வழங்குதல் ஆகியவை டயலொக் நிறுவனத்தின் உரிமைகள் அல்லது அதிகாரங்களை பாதிக்கமாட்டாது, என்பதோடு ஏதேனும் பின்விளைவான அல்லது தொடரும் மீறல் தொடர்பில் ஒரு தொடர்கின்ற விட்டுவிடுதலை உருவாக்குகின்ற ஏதேனும் மீறலின் டயலொக் நிறுவனத்தால் ஏதேனும் விட்டுதல் இருக்கவோமாட்டாது.

6.4 கடவுளின் செயல், தொற்றுநோய்கள், பரவும்நோய்கள், பயங்கரவாத நடவடிக்கைகள், கிளர்ச்சி அல்லது உள்நாட்டு குழப்பம், இராணுவ நடவடிக்கைகள், அரசாங்கத்தின் அல்லது ஏதேனும் தகைமையுடைய அதிகார சபையின் அனைத்து அவசரகால செயல்கள் அல்லது புறக்கணிப்பு, ஏதேனும் வகை தொழில் பிணக்குகள், தீ, மின்னல், வெடிப்பு, வெள்ளம் அல்லது டயலொக் பொறுப்பேற்காத நபர்கள் அல்லது குழுக்களின் செயல்கள் அல்லது புறக்கனிப்பு அல்லது டயலொக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் காரணம் ஆகியவற்றால் ஏற்படும் நியதிகளை மீறுதலுக்காக டயலொக் பொறுப்பாக மாட்டாது.

6.5 ஏதேனும் ஏற்புடைய சட்டத்தின் கீழ், இதில் உள்ள ஏதேனும் நியதிகள் செல்லுபடியற்றதாகவோ, சட்டவிரோதமாகவோ அல்லது செயல்படுத்த முடியாததாகவோ இருந்தால், மீதமுள்ள நியதிகள்pன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் அமலாக்கத்திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டாது அல்லது மதிப்பிழக்கமாட்டாது, மேலும் அத்தகைய செல்லுபடியற்ற அல்லது செயல்படுத்த முடியாத நியதிகள்; நீக்கப்பட்டதாகக் கருதப்படும்.

6.6 இந்த நியதிகள் இலங்கையின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் இலங்கை நீதிமன்றங்களின் பிரத்தியேக நியாயாதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.

6.7 வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால், இந்த நியதிகளின்படி டயலொக் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ஏதேனும் அறிவித்தலை வழங்க வேண்டியிருந்தால், டயலொக் நிறுவனம் வாடிக்கையாளருக்கு அறிவிப்பை வழங்கலாம், மேலும் அத்தகைய அறிவித்தல் பின்வரும் சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளருக்கு முறையாக வழங்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும், (அ) வெளியிடப்படுகின்ற நேரத்தில்; தளத்தில் பிரசுரிக்கப்பட்டால்;, (ஆ) அவ்வாறு பிரசுரிக்கின்ற திகதியில் சிங்கள, தமிழ் அல்லது ஆங்கில செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுதல், (இ) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டால், அது அனுப்பப்பட்ட நேரத்தில்; (ஈ) அல்லது (இ) குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டால; குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நேரத்தில்.

6.8 டயலொக் மூலம் வேறுவிதமாக அறிவுறுத்தப்படாவிட்டால், வாடிக்கையாளரால் டயலொக் நிறுவனத்திற்கான ஏதேனும் அறிவித்தல் எழுத்து மூலமாக மற்றும் டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

6.9 ஆங்கில நியதிகள் மற்றும் சிங்களம்ஃதமிழ் மொழிபெயர்ப்புக்களுடன் ஏதேனும் முரண்பாடு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளை விட ஆங்கில நியதிகள் எல்லா நேரங்களிலும் மேலோங்கி நிற்கும்.

6.10 சேவை தொடர்பில் ஏதேனும் தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் 678 அல்லது 1777ஐத் தொடர்பு கொள்ளலாம் - தேவைப்பட்டால் மற்றும் சேவை வழங்கலின் நோக்கத்திற்காக, சேவை அல்லது உள்ளடக்க வழங்குநர் சேவை விடயங்கள் மற்றும் ஏதேனும் முறைப்பாடுகள் தொடர்பாக வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

6.11 சந்தாதாரர் வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு, இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட ஆனால் அதற்கு மாத்திரம் வரையறுக்கப்படாத, ஏற்புடைய அதிகார சபைகளுடன் பராமரிக்கப்படுகின்ற சந்தாதாரரின் தேசிய அடையாள அட்டை விபரங்கள் மற்றும் ஏனைய தகவல்களை டயலொக் நிறுவனம் அணுகுவதற்கு சந்தாதாரர் இத்தால் ஒப்புக்கொள்கின்றார்.

அட்டவணை A - செய்தி சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் பின்வரும் முறையில் இந்தச் சேவையைச் கட்டணம்தாதாரராவதற்கும் மற்றும் செயல்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்:

1.1.1 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ் செய்தி மூலமாக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.3 செயற்படுத்தும் ஊடகம் ஐவீஆர் (IVR) ஆக இருந்தால் - ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.2 சேவையானது குறுஞ்செய்தி வழியாக இருந்தால், செயற்படுத்திய பின்னர், சேவையின் அடிப்படையில் நாளாந்த, வாரந்த குறுஞ்செய்தி மூலம் உள்ளடக்கத்தைப் பெறுவீர்கள்,

1.3 சேவையானது ஐவீஆர் வழியாக இருந்தால், உள்ளடக்கத்தை செவிமடுப்பதற்கு நீங்கள் ஐவீஆர் இலக்கத்திற்கு அழைக்க வேண்டும் அல்லது நிலையான நேரத்தில் அல்லது நீங்கள் திட்டமிட்டுள்ள விருப்பமான நேரத்தில் நாளாந்த அல்லது வாராந்த அடிப்படையில் நீங்கள் அழைப்பைப் பெறலாம். இதற்கு மேலதிகமாக ஐவீஆர் சேவை உங்கள் வசதியான பயன்பாட்டிற்காக குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அதே உள்ளடக்கத்தை அனுப்பலாம்.

.
அட்டவணை B – ஜாதக சேவைகளுக்கு குறிப்பிட்ட நியதிகள்;

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் பின்வரும் முறையில் இந்தச் சேவையைச் கட்டணம்தாதாரராவதற்கும் மற்றும் செயல்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்:

1.1.1 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ் செய்தி மூலமாக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் அங்கத்தவராகலாம் மற்றும் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.3 செயற்படுத்தும் ஊடகம் ஐவீஆர் ஆக இருந்தால் - ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.2 சேவையானது குறுஞ்செய்தி வழியாக இருந்தால், செயல்படுத்திய பின்னர், சேவையின் அடிப்படையில் நாளாந்த, வாரந்த குறுஞ்செய்தி மூலம் உள்ளடக்கத்தைப் பெறுவீர்கள்,

1.3 சேவையானது ஐவீஆர் வழியாக இருந்தால், உள்ளடக்கத்தை செவிமடுப்பதற்கு நீங்கள் ஐவீஆர் இலக்கத்திற்கு அழைக்க வேண்டும் அல்லது நிலையான நேரத்தில் அல்லது நீங்கள் திட்டமிட்டுள்ள விருப்பமான நேரத்தில் நாளாந்த அல்லது வாராந்த அடிப்படையில் நீங்கள் அழைப்பைப் பெறலாம். இதற்கு மேலதிகமாக, ஐவீஆர் சேவை உங்கள் வசதியான பயன்பாட்டிற்காக குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அதே உள்ளடக்கத்தை அனுப்பலாம்.

1.4 தொடர்புடைய ஜோதிடரால் வழங்கப்பட்ட உள்ளடக்கம் அவருடைய திறமை, தகைமை மற்றும் அறிவின் அடிப்படையிலானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த ஆலோசனையைப் பெற வேண்டுமென நீங்கள் அறிவுறுத்தப்படுகின்றீர்கள். அத்தகைய ஆலோசனையின் விளைவாக ஏற்படும் சேதங்களுக்கு உள்ளடக்க வழங்குநரோ அல்லது டயலொக் நிறுவனமோ பொறுப்பாக மாட்டாது.

அட்டவணை C– விலைமனு சேவைகளுக்கு குறிப்பிட்ட நியதிகள்;

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் பின்வரும் முறையில் இந்தச் சேவையை வாடிக்கையாளராவதற்கும் மற்றும் செயல்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்:

1.1.1 சேவையின் அடிப்படையில் குறுஞ்செய்தி, யூஎஸ்எஸ்டீ, இணைய Web) உள்ளடக்கம் அல்லது ஐவீஆர் ஊடாக அல்லது இத்தகைய முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் சேவையை செயற்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ்செய்தி ஆக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம். குறுஞ்செய்தி தளத்திற்கு விலைமனுவிற்கான பெறுமதியை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புவதன் மூலமும் விலைமனுக்களை சமர்ப்பிக்கலாம்.

1.1.3 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம். சேவை செயற்படுத்தல் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், யூஎஸ்எஸ்டீ குறியீட்டை டயல் செய்வதன் மூலமும் விலைமனுக்களை சமர்ப்பிக்கலாம்.

1.1.4 செயற்படுத்தும் ஊடகம் ஐவீஆர் ஆக இருந்தால் - ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம். சேவையை செயற்படுத்தியவுடன் ஐவீஆர் குறியீட்டை டயல் செய்வதன் மூலமும் விலை மனுக்களை சமர்ப்பிக்கலாம்.

1.1.5 செற்படுத்தும் ஊடகம் இணையமாக (WEB) ஆக இருந்தால் - இணையப் பக்கம் ஒன்றில் உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம். விலைமனுச் செய்தல் இணையத்திலும் சமர்ப்பிக்கப்படலாம். சில டயலொக் சேவைகள் இணையச் செயலாக்கம் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும், விருப்பறிவிப்பின் கீழ் உள்ள தயாரிப்புகள் மற்றும் ஏனைய சேவை தொடர்பான தகவல்களின் தகவல்தொடர்புக்கான வழிமுறையாக மட்டுமே இணையதளம் கிடைக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

1.2 வாடிக்கையாளர் இந்தச் சேவையைச் செயற்படுத்த விரும்பினால், இரட்டை ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும்.

2. கட்டண நியதிகள் மற்றும் மீள்கொடுப்பனவுக் கொள்கை

2.1 சேவையை செயற்படுத்தும கட்டத்தில் குறிப்பிடப்பட்ட கட்டணம், நாளாந்த அடிப்படையில் வசூலிக்கப்படும் மேலும் ஏதேனும் மேலதிக விலைமனுச் செய்தல் வாய்ப்புக்கள் தேவைப்பட்டால், மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

2.2 வாடிக்கையாளர் மேலதிக விலைமனு வாய்ப்புகளை கோரும் போதெல்லாம் மேலதிக விலைமனுவுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

2.3 மேலதிக விலைமனுச் செய்தல் கட்டணங்கள் மீள் கொடுப்பனவு செய்யப்படமாட்டாது.

3. இதர விடயங்கள்

3.1 வெற்றியாளர் தன்னியக்க முறைமை மூலம் விற்பனையாளரால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

3.2 விலைமனுப் பரிசு கைமாறத்தகாதது, வெற்றியாளர் விவரங்கள் மற்றும் தகுதியை சரிபார்த்த பின்னர் பரிசு/கள் உள்ளடக்க வழங்குநரால் விநியோகிக்கப்படும்.

3.3 ஏதேனும் மோசடி நடவடிக்கை காரணமாகவோ அல்லது அவர்களின் சேவையின் குறிப்பிட்ட நியதிகளைப் பொறுத்து கடந்த காலச் செயல்பாட்டின் அடிப்படையில் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு வெற்றியாளரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான உரிமையைக் உள்ளடக்க வழங்குநர் மற்றும் டயலொக் நிறுவனம் கொண்டுள்ளது.

அட்டவணை D - விளையாட்டுக்கள் தொடர்பான விழிப்பூட்டல் நியதிகள்;

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் பின்வரும் முறையில் இந்தச் சேவையை வாடிக்கையாளராவதற்கும் மற்றும் செயல்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்:

1.1.1 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ் செய்தி மூலமாக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.3 செயற்படுத்தும் ஊடகம் ஐவீஆர் ஆக இருந்தால் - ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.2 சேவையானது குறுஞ்செய்தி வழியாக இருந்தால், செயல்படுத்திய பின்னர், சேவையின் அடிப்படையில் ஒவ்வொரு நாளாந்த, வாராந்த குறுஞ்செய்தி மூலம் உள்ளடக்கத்தைப் பெறுவீர்கள்.

1.3 சேவையானது ஐவீஆர் வழியாக இருந்தால், உள்ளடக்கத்தை செவிமடுப்பதற்கு நீங்கள் ஐவீஆர் இலக்கத்திற்கு அழைக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக, ஐவீஆர் சேவை உங்கள் வசதியான பயன்பாட்டிற்காக குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அதே உள்ளடக்கத்தை அனுப்பலாம்.

1.4 உள்ளடக்கம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை என்று நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருந்தால், நீங்கள் டயலொக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்யலாம். அத்தகைய கோரிக்கையின் செல்லுபடியான தன்மையை தெளிவுபடுத்துவதற்கும், உடனடி தீர்வு நடவடிக்கை எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட உள்ளடக்க வழங்குநரிடம் டயலொக் தொடர்பை மேற்கொள்ளும்.

2. கட்டண நியதிகள் மற்றும் மீள் கொடுப்பனவுக் கொள்கை

2.1 நீங்கள் ஒப்புதல் அளித்து கட்டணம் செலுத்திய வாஸ் சேவையின் விலை மற்றும் செல்லுபடியாகும் தன்மையின் அடிப்படையில் உங்களிடம் கட்டணம் அறவிடப்படும். குறிப்பாக விளையாட்டுக்கள்/போட்டி காலங்களின் போது விலை நிர்ணயத்தில் வித்தியாசம் இருக்கலாம், அது கட்டணம் செலுத்தும் கட்டத்தில் (ஏற்புடையவிடத்து) உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அட்டவணை E - வினாடி வினாக்களுக்கு குறிப்பிட்ட நியதிகள்

1. கட்டணம் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் பின்வரும் முறையில் இந்தச் சேவையை வாடிக்கையாளராவதற்கும், செயல்படுத்தவும் மற்றும் செயலிழக்கச் செய்யவும் முடியும்:

1.1.1 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ் செய்தி மூலமாக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.3 செயற்படுத்தும் ஊடகம் ஐவீஆர் ஆக இருந்தால் - ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.4 செயற்படுத்தும் ஊடகம் இணையமாக (WEB) இருந்தால் - இணையப் பக்கம் ஒன்றில் உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.2 சேவையானது குறுஞ்செய்தி வழியாக இருந்தால், செயல்படுத்தப்பட்ட பின்னர், சேவையின் அடிப்படையில் வாரந்தோறும் குறுஞ்செய்தி மூலம் வினாடி வினாக்களைப் பெறுவீர்கள்.

1.3 சேவை ஐவீஆர் வழியாக இருந்தால், வினாடி வினாவில் பங்கேற்பதற்கு நீங்கள் ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்ய வேண்டும். அதற்கு மேலதிகமாக, ஐவீஆர் சேவை உங்கள் வசதியான பயன்பாட்டிற்காக குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அதே உள்ளடக்கத்தை அனுப்பலாம்.

1.4 இணையப் பக்கம் (Portal) வழியாக சேவை கிடைத்தால், சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் இணையப் பக்கத்திற்கு வர வேண்டும். வாடிக்கையாளர் சேவைக்கு அங்கத்துவம் பெற்றிருந்தால், நினைவூட்டல் செய்திகள் மற்றும் உள்ளடக்கத்தின் சுருக்கங்களை அனுப்பும் உரிமையை உள்ளடக்க வழங்குநருக்கு உள்ளது.

1.5 வாடிக்கையாளர் இந்தச் சேவையைச் செயல்படுத்த விரும்பினால், இரட்டை ஒப்புதல் செயல்படுத்தல் இடம்பெறும்.

1.6 வினாடி வினா உள்ளடக்கத்தில் அல்லது விடைகளில் எவையேனும் குறைபாடுகள் அல்லது உள்ளடக்கம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை என்று நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருந்தால், நீங்கள் டயலொக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்யலாம். அத்தகைய கோரிக்கையின் செல்லுபடியான தன்மையை தெளிவுபடுத்துவதற்கும், உடனடி தீர்வு நடவடிக்கை எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட உள்ளடக்க வழங்குநரோடு டயலொக் நிறுவனம் தொடர்பை மேற்கொள்ளும். அத்தகைய உள்ளடக்கத்தின் செல்லுபடியான தன்மைக்கு டயலொக் நிறுவனம் பொறுப்பாக மாட்டாது.

அட்டவணை F – அதிர்ஷ்ட இலாபச் சீட்டு சேவைக்கான நியதிகள்;

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்புவதன் மூலம் அல்லது யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்தன் மூலம் அல்லது இணையப் பக்கம் ஊடாக சேவையை செயல்படுத்தவும் மற்றும் செயலிழக்கச் செய்யவும் முடியும்:

1.1.1 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ் செய்தி மூலமாக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லையும் செல்லுபடியான அடையாள அட்டை இலக்கத்தையும் அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உரிய தகவல்களை உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயல்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.3 செயற்படுத்தும் ஊடகம் ஐவீஆர் ஆக இருந்தால் - ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்து உரிய தகவல்களை உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.4 செற்படுத்தும் ஊடகம் இணையத்தின் (WEB) ஊடாக இருந்தால் - இணையப் பக்கம் ஒன்றில் உரிய தகவல்களை உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்;. சில டயலொக் சேவைகள் இணையச் செயலாக்கம் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும், விருப்பறிவிப்பின் கீழ் உள்ள தயாரிப்புகள் மற்றும் ஏனைய சேவை தொடர்பான தகவல்களின் தகவல்தொடர்புக்கான வழிமுறையாக மாத்திரமே இணையதளம் கிடைக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

1.2 சேவையானது, குறுஞ்செய்தி, ஐவீஆர் அல்லது யூஎஸ்எஸ்டீ ஊடாக அதிர்ஷ்ட இலாபச்சீட்டை கொள்வனவு செய்வதாக இருந்தால், செயற்படுத்திய பின்னர், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு சேவைக்கு வாடிக்கையாளராகியதன் அடிப்படையில் நாளாந்தம், வாராந்தம் குறுஞ்செய்தி மூலம் சீட்டொன்று உங்களுக்கு கிடைக்கப்பெறும். கோரிக்கையின் பேரில் ஒற்றை சீட்டொன்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

1.3 சேவையானது அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் பெறுபேறுகளை குறுஞ்செய்தி அல்லது ஐவீஆர் ஊடாக வழங்கினால், ஏற்புடையவாறு நாளாந்தம் மற்றும் வாராந்தம் குறுஞ்செய்தி மூலம் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் அல்லது பெறுபேறுகளை செவிமடுப்பதற்கு ஐவீஆர் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு நீங்கள் வேண்டப்படுவீர்கள். அதற்கு மேலதிகமாக ஐவீஆர் சேவை உங்கள் வசதியான பயன்பாட்டிற்காக குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அதே உள்ளடக்கத்தை அனுப்பலாம்.

1.4 இணையப் பக்கம் (Portal) வழியாக சேவை கிடைத்தால், சேவையைப் பெற வாடிக்கையாளர் இணையப் பக்கத்திற்கு வர வேண்டும். வாடிக்கையாளர் சேவைக்கு வாடிக்கையாளராக இருந்தால் நினைவூட்டல் செய்திகள் மற்றும் உள்ளடக்கத்தின் சுருக்கங்களை அனுப்பும் உரிமை உள்ளடக்க வழங்குநருக்கு உள்ளது.

1.5 வாடிக்கையாளர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பதோடு செல்லுபடியான அடையாள அட்டை இலக்கத்தை வைத்திருக்க வேண்டும்.

1.6 கையடக்கத் தொலைபேசி இயக்குனர்கள் மூலம் சீட்டுக்கள் கொள்வனவு செய்யப்படுகின்ற போது, வசதிக் கட்டணம் ஒன்றும் மற்றும் தொடர்புடைய அரசாங்க வரிகளும் அறவிடப்படும்.

1.7 சீட்டிழுப்பு நடைபெற்ற பின்னர் உத்தியோபூர்வ பெபேறுகள் குறுஞ்கெய்தியின் மூலம் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிற்கு ஏற்ப சகல வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்படும்.

1.8 உள்ளடக்க வழங்குநர் டிஜிட்டல் முறைகளில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களை விற்பனை செய்வதற்கு (அபிவிருத்தி லொத்தர் சபை அல்லது தேசிய லொத்தர் சபை அல்லது எதிர்காலத்தில் நிறுவக் கூடிய ஏதேனும் ஏனைய நிறுவனம்) இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து பிரத்தியேக உரிமங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு சீட்டுக்களின் கிரயத்தை சேகரித்தல் மற்றும் (ஏற்புடையவிடத்து) டிஜிட்டல் முறைகளில் சீட்டுக்களை விநியோகித்தல் என்பவற்றிற்கு மாத்திரமே டயலொக் நிறுவனம் வசதியளிக்கின்றது.

2. கட்டண நியதிகள் மற்றும் மீள் கொடுப்பனவுக் கொள்கை

2.1 சீட்டின் விலை மற்றும் வசதிக்கான கட்டணம் சீட்டுக்களைக் கொள்வனவு செய்கின்ற நேரத்தில் வசூலிக்கப்படும். நாளாந்த அல்லது வாராந்த அல்லது பொருந்தக்கூடிய வகையில், ஒரு சீட்டுக்கான கட்டணத் தொகை பயனருக்கு சீட்டு வழங்கும் இடத்தில் வசூலிக்கப்படும். டயலொக் வழங்கும் வசதிக் கட்டணத்துடன் தொடர்புடைய வரிகள் நடைமுறை ஒழுங்குவிதிக்கு ஏற்ப வசூலிக்கப்படும்.

3. இதர விடயங்கள்

3.1 ஒவ்வொரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டிற்கான சீட்டுப் பரிசு கட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட லொத்தர் சபையால் வெளியிடப்பட்ட கட்டமைப்பின் படி இருக்கும்.

3.2 வெற்றியாளர் தேர்வு அல்லது பரிசு விநியோகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட லொத்தர் சபை பொறுப்பாகும்.

அட்டவணை G – இணையப் பக்கங்களுக்கான (Portals) நியதிகள்

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் இணைய இணையப் பக்கம் வழியாக செயல்படுத்துவதற்கு அல்லது துண்டிப்பதற்கு முடியும். இந்தச் சேவை இரட்டை ஒப்புதல் மூலம் செயற்படுத்தப்படும்.

1.2 இணையப் பக்கத்தை பயன்படுத்தும் போது ஏற்புடைய தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படும்.

1.3 சேவையைப் பெற வாடிக்கையாளர் இணையப் பக்கத்திற்கு வர வேண்டும். வாடிக்கையாளர் சேவைக்கு அங்கத்துவம் பெற்றிருந்தால் நினைவூட்டல் செய்திகள் மற்றும் உள்ளடக்கத்தின் சுருக்கங்களை அனுப்பும் உரிமையை உள்ளடக்க வழங்குநர் தக்க வைத்துக் கொள்கிறார்.

2. கட்டண நியதிகள் மற்றும் மீள் கொடுப்பனவுக் கொள்கை

2.1 பொது நியதிகளின் கீழ் கூறப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் நாளாந்த, வாராந்த அல்லது மாதாந்த அடிப்படையில் வசூலிக்கப்படும். இருப்பினும், சில சேவைகளுக்கு ஏற்புடையவாறு இரு வாரத்திற்கு ஒருமுறை, 3 மாதத்திற்கு ஒருமுறை, 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை விலை புள்ளிகள் இருக்கலாம். மேலும் சில சேவைகள் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடியவாறு வழக்கமான கட்டணத்துடன் மேலதிகமாக கோரப்படும் உள்ளடக்கத்திற்கு மேலதிக கட்டணம் விதிக்கப்படலாம்.

அட்டவணை H – ஐவீஆர் கணனி விளையாட்டுக்களுக்கான நியதிகள்

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் ஐவீஆர் இலக்கத்தை டயல் செய்வதன் மூலம் இந்த சேவைக்கு வாடிக்கையாளர் ஆகுவதற்கும் சேவையை செயல்படுத்தவும் அல்லது இந்த சேவையை துண்டிக்கவும் முடியும்.

1.2 உங்கள் நிலுவை கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் கட்டணம் புதுப்பிக்கப்படும்.

1.3 சேவை ஐவீஆர் வழியாக இருப்பதால், வினாடி வினாவில் பங்கேற்பதற்கு நீங்கள் ஐவீஆர் இலக்கத்தை அழைக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக ஐவீஆர் சேவை உங்கள் வசதியான பயன்பாட்டிற்காக குறுஞ்செய்தி மூலம் உள்ளடக்கத்தை அனுப்பலாம்.

2. கட்டண நியதிகள் மற்றும் மீள் கொடுப்பனவுக் கொள்கை

2.1 பொது நியதிகளின் கீழ் கூறப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் நாளாந்த அல்லது மாதாந்த அடிப்படையில் வசூலிக்கப்படும். இருப்பினும், சில சேவைகள் ஒரு நிமிட அடிப்படையில் அல்லது விளையாட்டை விளையாடுவதற்கான முயற்சியின் அடிப்படையில் கட்டணம் விதிக்கலாம்.

2.2 பெற்ற புள்ளிகள், விளையாட்டை விளையாடும் போது ஏற்புடைய வெற்றிகள், சேவையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கப்படும் வெகுமதிகளின் அடிப்படையில் வேறுபடும்.

2.3 சில சேவைகளுக்கு வெற்றியாளர்கள் தன்னியக்கமாகவே முறைமையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அதேசமயம் ஏனைய சில சேவைகளுக்கு வெற்றியாளர்கள் விளையாடுகின்ற காலத்தின் முடிவில் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2.4 வெற்றியாளர்கள் தொடர்பில் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டால், டயலொக் நிறுவனத்தின் தீர்மானம் இறுதியானதாக இருக்கும்.

அட்டவணை I - ஏனைய விழிப்பூட்டல்களுக்கான நியதிகள்; (மதம், ஆரோக்கியம், உக்குவித்தல் போன்றவை)

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 வாடிக்கையாளர் இந்தச் சேவையை குறுஞ்செய்தித் தளத்திற்கு ஒரு முக்கிய சொல்லை அனுப்புவதன் மூலம் அங்கத்துவத்தைப் பெற்று இந்த சேவையை செயற்படுத்த அல்லது துண்டிக்க முடியும்.

1.2 செயற்படுத்திய பின்னர், சேவையின் அடிப்படையில் நாளாந்தம், வாராந்தம் குறுஞ்செய்தி மூலம் உள்ளடக்கத்தைப் பெறுவீர்கள்.

1.3 உள்ளடக்கத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக நீங்கள் நம்புவதற்குக் காரணம் இருந்தால், அல்லது அத்தகைய உள்ளடக்கம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை என்று நீங்கள் நம்பினால், நீங்கள் அதனை டயலொக் மூலம் தொடர்புடைய உள்ளடக்க வழங்குநரிடம் தெரிவிக்கலாம், அப்போது உள்ளடக்க வழங்குநர் உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்க முடியும். அத்தகைய உள்ளடக்கத்தின் செல்லுபடியான தன்மை தொடர்பில் டயலொக் பொறுப்பாக மாட்டாது.

அட்டவணை J - நன்கொடை சேவைகளுக்கான நியதிகள்

2. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

2.1 வாடிக்கையாளர் குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்புவதன் மூலம் நன்கொடை சேவைக்கு அங்கத்தவராகலாம் அல்லது அத்தகைய சேவையிலிருந்து விழகிக்கொள்ள முடியும்.

2.2 வாடிக்கையாளராகிய பின்னர், நீங்கள் ஒரு ஒப்புதல் குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள்.

2.3 உங்கள் நிலுவை கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் நன்கொடை கட்டணம் புதுப்பிக்கப்படும். சில நன்கொடை சேவைகளில் புதுப்பித்தலுக்கான உறுதிப்படுத்தல் கோரப்பட வேண்டியிருக்கும்.

3. கட்டண நியதிகள் மற்றும் மீள்கொடுப்பனவுக் கொள்கை

3.1; நீங்கள் ஒப்புதல் அளித்து கட்டணம் செலுத்தியமைக்கான நன்கொடைத் தொகை மற்றும் செல்லுபடியாகும் தன்மையின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும். வாடிக்கையாளரிடமிருந்து கழிக்கப்படும் நன்கொடைத் தொகையானது ஏற்புடைய ஒழுங்குவிதிகளுக்கு ஏற்ப வரிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

3.2 பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் உடன்பட்ட நியதிகள்; மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, வாடிக்கையாளருக்கு பெறுமதி சேர்க்கையாக நன்கொடைச் கட்டணம்விற்கு கட்டணம் வசூலிக்கும் இயலுமையை டயலொக் வழங்கியுள்ளது.

3.3 பொது நியதிகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் நாளாந்த அல்லது மாதாந்த அடிப்படையில் வசூலிக்கப்படும். இருப்பினும், நன்கொடை சேவையின் அடிப்படையில் வாடிக்கையாளரிடம் ஒருமுறை மாத்திரம் கட்டணம் விதிக்கப்படும் சில நன்கொடைகள் இருக்கலாம்.

அட்டவணை K - இருப்பிட கண்காணிப்பு சேவைகளுக்கான குறிப்பிட்ட நியதிகள்;

1.1 வாடிக்கையாளர் பின்வரும் முறையில் இந்தச் சேவையில் கட்டணம்தாராவதற்கும் மற்றும்; செயல்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்:

1.1.1 செயற்படுத்தும் ஊடகம் குறுஞ் செய்தி மூலமாக இருந்தால் - குறுஞ்செய்தி தளத்திற்கு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.1.2 செயற்படுத்தும் ஊடகம் யூஎஸ்எஸ்டீ மூலமாக இருந்தால் - யூஎஸ்எஸ்டீ குறியீடொன்றை டயல் செய்து (இலக்கக் குறியீடு #) உறுதிப்படுத்துவதன் மூலம் சேவையை செயற்படுத்தலாம் அல்லது துண்டிக்கலாம்.

1.2 வாடிக்கையாளர் இந்தச் சேவையைச் செயற்படுத்த விரும்பினால், இரட்டை ஒப்புதல் செயல்படுத்தல் இடம்பெறும்.

1.3 சேவையை செயல்படுத்திய பின்னர், உங்களுடன் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை (PIN) பகிர்வதன் மூலம், அதே சேவையில் கட்டணம்தாரராகியுள்ள ஒப்புதல் வழங்கிய மற்றொரு நபரின் இருப்பிடத்தை நீங்கள் கண்காணிக்க முடியும்.

1.4 இதேபோல், சேவையில் வாடிக்கையாளராகியுள்ள மற்றொரு தரப்பினருக்கு கட்டணத்துடன் உங்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான அடையாள இலக்கத்தை (PIN) பகிர்ந்து கொண்டால், அவர்களால் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.

1.5 இருப்பிடக் கோரிக்கையின் போது வாடிக்கையாளர் இணைக்கப்பட்டுள்ள கோபுர (Tower) இருப்பிடத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்படும் இடம் தோராயமான இடமாக இருக்கும்.

1.6 உங்கள் நிலுவை கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் கட்டணம் புதுப்பிக்கப்படும். இருப்பினும், சேவையைப் பொறுத்து கோரப்பட்ட இடத்திற்கான கட்டணங்களும் விதிக்கப்படலாம்.

1.7 வாடிக்கையாளர் கோரிக்கையின் பேரில் இருப்பிட கண்காணிப்பு கோரிக்கைகளை டயலொக் அல்லது சேவை வழங்குநரால் வழங்க முடியாது.

அட்டவணை L – கையடக்க செயலிகள் மற்றும் ஓடிடி சேவைகளுக்கான நியதிகள்;

1.1 வாடிக்கையாளர் ஒரு கையடக்கத் தொலைபேசி செயலி அல்லது இணையதளம் ஒன்றின் மூலம் சேவையை செயல்படுத்த அல்லது துண்டிக்க முடியும்.

1.2 இந்தச் சேவை இரட்டை ஒப்புதல் மூலம் செயல்படுத்தப்படும்.

1.3 செயற்படுத்தும் ஊடகம்; இணையம் மூலமாக இருந்தால் - இணையதளத்தில் வழங்கப்படும் இரட்டை ஒப்புதல் மூலம் இந்தச் சேவை செயல்படுத்தப்படும்.

1.4 கையட்டக்கத் தொலைபேசி செயலி மூலம் செயல்படுத்தப்பட்டால் - வாடிக்கையாளரால் தொடங்கப்பட்ட அங்கத்துவத்தின் ஊடாக இந்த சேவை செயற்படுத்தப்படும், இங்கு வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் ஒரு செயலியை நிறுவுகின்றார் அல்லது முற்போக்கான இணைய செயலிக்கு பிரவேசிக்கின்றார், என்பதோடு கட்டணம் கிரயத்தைச் செலுத்துவதற்கு இரட்டை சம்மதத்தை தெரிவிக்கின்றார், அல்லது அவரின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஒரு முறை கிரயங்களைச் செலுத்துகின்றார்.

1.5 குறுஞ்செய்தி தளத்திற்கு ஒரு முக்கிய சொல்லை அனுப்புவதன் மூலம் அல்லது கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக அல்லது முற்போக்கு இணையச் செயலி (Progressive Web App) மூலம் சேவையை செயலிழக்கச் செய்யலாம்.

1.6 இணையப் பக்கத்தை (Portal) பயன்படுத்தும் போது ஏற்புடைய தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படும்.

1.7 வாடிக்கையாளர் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த இணையப் பக்கம், செயலி அல்லது முற்போக்கு இணைய செயலி என்பவற்றிற்கு வர வேண்டும். வாடிக்கையாளர் சேவைக்கு வாடிக்கையாளராக இருந்தால், நினைவூட்டல் செய்திகள் மற்றும் உள்ளடக்கத்தின் சுருக்கங்களை அனுப்பும் உரிமை உள்ளடக்க வழங்குநருக்கு உள்ளது.

1.8 கட்டணங்கள் நாளாந்த, வாராந்த அல்லது மாதாந்த அடிப்படையில் வசூலிக்கப்படும். சில சேவைகளுக்கு இரு வாரத்திற்கு ஒருமுறை, 3 மாதத்திற்கு ஒருமுறை, 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை விலை புள்ளிகள் இருக்கலாம். மேலும் சில சேவைகள் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படும் வழக்கமான கட்டணத்துடன் மேலதிகமாகத் தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு மேலதிக கட்டணம் விதிக்கலாம். இயக்குனரின் சேவைக் கட்டணம் தொடர்பான வரிகள் நடைமுறை ஒழுங்குவிதியின்படி வசூலிக்கப்படும்.

அட்டவணை M - ரிங்கிங் டோன்களை இயக்குவதற்கான குறிப்பிட்ட நியதிகள் (“PRBT")

1. கட்டணங்கள் மற்றும் கட்டணங்ளை இரத்து செய்தல்

1.1 குறுஞ்செய்தி தளத்திற்கு ஒரு முக்கிய சொல்லை அனுப்பி உறுதிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் இந்தச் சேவையில் வாடிக்கையாளராவதற்கும் மற்றும் அதனை செயல்படுத்தவும் மற்றும் துண்டிக்கவும் முடியும்.

1.2 சேவையை செயற்படுத்திய பின்னர், சேவையின் அடிப்படையில் நாளாந்த, வாராந்த குறுஞ்செய்தி மூலம் உள்ளடக்கத்தைப் பெறுவீர்கள்,

1.3 உள்ளடக்கத்தை செயற்படுத்திய பின்னர், பாடலுக்கான (உள்ளடக்கம்) குறுஞ்செய்தி ஒன்றைப் பெறுவீர்கள், மேலும் தானாகப் புதுப்பிப்பதற்கு முன்பு வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் மீண்டும் அறிவிக்கப்படும்.