பொருள் விரிவாக்கம்

CBL குழுமமும் டயலொக், MAS & Hemas வழங்கும் அவசரகால நிவாரண முயற்சியான “மனிதநேய ஒன்றிணைவு” உடன் இணைகிறது

100,000க்கும் மேற்பட்ட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சர்வோதயவுடன் இணைந்து அவசர நிவாரணம் வழங்கப்படுகின்றது

ஏப்ரல் 26th, 2022         கொழும்பு

 

CBL Joins Manudam Mehewara

படத்தில் (இடமிருந்து வலமாக): சிரேஷ்ட ஊக்குவிப்பு மற்றும் செயற்பாடுகள் முகாமையாளர் (CBL உணவுக் குழுமம்) சிசிர குணவர்தன, சிரேஷ்ட முகாமையாளர் குழும தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மை இஷாரா விக்கிரமசிங்க, பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் (CBL உணவுக் குழுமம்) ஜயங்க பெரேரா, CBL குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாமலி விக்கிரமசிங்க, டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, டயலொக் என்டர்பிரைஸ் குழும தலைமை அதிகாரி நவீன் பீரிஸ், சர்வோதய சிரமதான சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சமிந்த ராஜகருண ஆகியோரை காணலாம்.

CBL குழுமத்தினர் நாட்டில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் PwC Sri Lanka ஆகியன கூட்டாக மேற்கொண்டுள்ள “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண திட்டத்திட்டத்தில் தாமும் இணைந்து கொண்டுள்ளனர்.

பாதிப்பிற்குள்ளாகியுள்ள சமூகங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில், “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதன் நிறைவேற்று பங்காளரான சர்வோதய மற்றும் கணக்காய்வு பங்காளரான PwC Sri Lanka உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட பங்காளர்களுடன் டயலொக் கைகோர்த்தவாறு, டயலொக், MAS மற்றும் Hemas ஆகிய நிறுவனங்களின் நிதியுதவி பங்களிப்பில் வழங்குகின்ற மேற்படி “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரணத்தினூடே, 100,000 க்கும் மேற்பட்ட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆழ்ந்த வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்கு வதுடன் ,மேற்படி “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண திட்டத்தின் மூலம் தற்போது 25 மாவட்டங்களில் அவசர நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை மேற்படி “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண வேலைத்திட்டமானது 60-90 நாட்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

CBL குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாமலி விக்கிரமசிங்க அவர்கள் தெரிவிக்கையில், CBL குழுமமானது அக்கறை, தரம், புத்தாக்கம் மற்றும் நேர்மை ஆகிய நான்கு முக்கிய மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது; இந்த கொள்கை மதிப்பானது CBL இல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிவாரண செயற்றிட்ட நடவடிக்கைகளில் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம், மேலும் சரியான தருணத்தில் இந்த முயற்சியில் ஒரு பகுதியாக இருப்பதற்கு எம்மை அழைத்தமைக்காக டயலொக் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். பொறுப்புள்ள பெருநிறுவனங்கள் என்ற ரீதியில், சமூகங்களை பாதிக்கும் விடயங்களில் சமூகத்திற்கு சாதகமான வகையில் ஈடுபட வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதுடன், மேலும் இந்த முக்கிய தருணத்தில் உதவிகள் தேவைப்படும் பல இலங்கையர்களுக்கு எம்மால் உதவ முடியும் என்று நம்புகிறேன். ஒரு நாடு என்ற ரீதியில் எங்களுக்கு ஒரு புதிய நோக்கு இருத்தல் அவசியமாகும். அது அனைவருக்கும் செழிப்பை தோற்றுவிப்பதாக அமைதல் வேண்டும், அத்தகைய இலக்கை அடைவதற்காக மேலும் ஒருபடி முன்னேறுவதற்கு இந்த மனிதாபிமான முயற்சியில் பங்குதாரர்களாக இருப்பதில் CBL மகிழ்ச்சியடைகிறது" என்றார்.

மேற்படி நிவாரண திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள பங்காளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டயலொக் என்டர்பிரைஸ் பிரிவின் தலைமை அதிகாரி நவீன் பீரிஸ் அவர்கள், “டயலொக், MAS, Hemas, Sarvodaya மற்றும் PwC ஆகியவற்றின் அழைப்பினை ஏற்று இந்த நிவாரண பணிகளில், நம்மோடு கைகோர்த்துள்ள CBL குழுமத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். CBL குழுமமானது இந்த “மனிதநேய ஒன்றிணைவு” முன்முயற்சியில் நம்முடன் இணைந்ததன் மூலம், நாட்டில் சமூக-பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலான மேற்படி பெருநிறுவனக் கூட்டணியானது மேலும் பலம் பெற்றுள்ளது என கூறமுடியும்” என்றார்.

இலங்கையின் சர்வோதய சிரமதான சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமிந்த ராஜகருண அவர்கள் உரையாற்றுகையில், "ஒரு உன்னதமான நோக்கத்தில் ஒன்றிணைந்த டயலொக், MAS, Hemas மற்றும் CBL ஆகியவற்றுக்கு சர்வோதய சார்பாக எனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதாபிமான சேவைகளை வழங்குவதில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக, சர்வோதய அமைப்பினர் நாடு முழுவதும் பயணம் செய்து, குழந்தைகளுக்கு தினசரி உணவை வழங்குவதற்கான வழியின்றி அவதிப்படும் குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர குடும்பங்களை இதுவரை நேரடியாகக் கண்டுள்ளனர்; ஆனால், தமது அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று அறியாமல் அவதிப்படும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களை நாம் காண்பது இதுதான் முதல் தடவையாகும். பசி என்பது உலகளாவியதாகும்; அந்தவகையில் , அனைத்து இலங்கையர்களின் முகங்களிலும் புன்னகையை கொண்டுவரும் தேசிய அளவிலான இந்த உன்னத பணியில் பொறுப்புள்ள பெருநிறுவனங்களுடன் கைகோர்ப்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்" என்றார்.

“மனிதநேய ஒன்றிணைவு” அவசர நிவாரண திட்டத்தில் இணைந்து மேற்படி நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் பங்களிப்பு செலுத்த முன்வருமாறு அனைத்து பெருநிறுவனங்களுக்கும் “மனிதநேய ஒன்றிணைவு”அழைப்பு விடுக்கின்றது.