பொருள் விரிவாக்கம்

விதுசர Magicbit IoT சவால் போட்டியில் பங்கேற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை பரிசளித்து கௌரவித்தது Dialog

2023 ஜூன் 07         கொழும்பு

 

Innovative IoT Solution to Nurture Local Rubber Plantations

தொழில்நுட்ப மேம்பாடு மிகுந்த எதிர்காலத்திற்கு தேவையான திறன்களை கொண்ட இளம் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் அதன் முயற்சிகளில் ஒன்றாக டயலாக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் இடம்பெற்ற ‘விதுசர Magicbit IoT சவால்’ போட்டியில் பங்குபற்றியோர் மற்றும் வெற்றிபெற்றோருக்கு டயலாக் பரிசளித்து கௌரவித்தது. இந்நிகழ்வு டயலாக் தலைமை காரியலத்திலுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் இலகுவழியில் விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் கணித கற்கை தளமான Magicbit ஆனது விதுசர நாளிதழுடன் இணைந்து 8 முதல் 18 வயதுள்ள சிறுவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒரு போட்டியை நடாத்தியது. இதற்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலாக் அனுசரணை வழங்கியது. இதன்போது பங்கேற்பாளர்களுக்கு ஒரு IoT application ஐ எப்படி என்று அடிப்படையிலிருந்து கற்றுக்கொடுக்கப்பட்டது. போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு Magicbit மற்றும் Kandos Chocolates சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. டயலாக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இப்பரிசளிப்பு வைபவத்தில் வெற்றியாளர்களுக்கு தமது கண்டுபிடிப்புகளை காண்பிப்பதற்கான பிரத்தியேக வாய்ப்பும் வழங்கப்பட்டது.

“Magicbit மற்றும் விதுசர நாளிதழுடன் இணைந்து எதிர்காலத்தை இன்றே வெல்வதற்கான வாய்ப்புகளை Gen Z (அண்ணளவாக 1995 – 2010 இடையில் பிறந்தோர்) மற்றும் Gen Alpha (அண்ணளவாக 2010 அல்லது அதற்குப்பின் பிறந்தோர்) தலைமுறையினருக்கு வழங்குவதையிட்டு பேருவகை அடைகின்றோம். இளம் கண்டுபிடிப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கின்றது. டயலாக் அனுசரணையில் ‘விதுசர Magicbit IoT சவால்’ போன்ற போட்டிகள் இவர்களது கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு ஒரு ஆரம்பப்படியாக அமைவதுடன் அவர்களது பயணத்தில் பல பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு தேவையான உந்துதலையும் வழங்கும்” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை பகுப்பாய்வாளரும் செயற்கை நுண்ணறிவு அதிகாரியுமான டொக்டர் ரொமேஷ் ரணவன அவர்கள் நிகழ்வில் தனது உரையின்போது தெரிவித்திருந்தார்.

“ஒரு தொழில்நுட்ப மறுமலர்ச்சியின் வாயிலில் நாம் இருக்கின்றோம்” என உரையாற்றிய விதுசர விஞ்ஞான சஞ்சிகையின் தலைமை பதிப்பாசிரியர் சுனந்த கருணாரத்ன அவர்கள் “இது நாம் சிந்திக்கும் விதம், தொடர்புகொள்ளும் விதம், எமது வாழ்வியலை மாற்றியமைப்பதுடன் பெரும்பாலும் எமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவுள்ளது. எமது வருங்கால சந்ததியினரை இந்த புரட்சியின் பலாபலன்களை அறுவடை செய்வதற்கு ஏற்ற வகையில் தயார்செய்வது நம் தார்மீக கடமையாகும். Magicbit மற்றும் டயலாக் உடன் இணைந்து இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கென போட்டியை ஒழுங்கமைத்து அவர்களை பரிசளித்து கௌரவிப்பதில் விதுசர விஞ்ஞான பத்திரிக்கை பேருவகை அடைகின்றது. வரும் வருடங்கள் மற்றும் தசாப்தங்களில் எதிர்கால சந்ததியினருக்கு பல்வேறு அனுகூலங்களை வழங்கவிருக்கும் முதலீடு இது” என மேலும் தெரிவித்திருந்தார்.

“Magicbit இல் நாம் எதிர்கால சந்ததியினருக்கான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்போம். அதே நோக்கத்துடன் டயலாக் மற்றும் விதுசர உடன் இணைந்து இந்த போட்டியை ஒழுங்கமைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அதிநவீன தொழில்நுட்பத்தை பிரயோகித்து இவ் இளம் மாணவர்கள் கையளித்த கண்டுபிடிப்புகளை பார்க்கும் போது எமக்கு வியப்பாகவும் களிப்பாகவும் உள்ளது. இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலமாக இலங்கை மாணவர்களை உலகை மாற்றியமைக்கும் எதிர்கால கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்க முடியும் என நம்புகிறோம்” என வரையறுக்கப்பட்ட (தனியார்) Magicbit இன் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் இணை நிறுவுனரான மிகர அமிதோதன தெரிவித்திருந்தார்.

Magicbit STEM kits பற்றி மேலும் அறிந்துகொள்ள https://www.dialog.lk/stemkit-accessories ஐ பார்வையிடவும்.