பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா Doc990 உடன் இணைந்து, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை வழங்குகின்றது

இடையூறுகள் இன்றி இதய அறுவை சிகிச்சையை தொடர்வதற்கு உதவும் ஒரு முயற்சி

July 21st, 2022         Colombo

 

Doc990 Donate Critical Medical Consumables

படத்தில் இடமிருந்து வலம்: Digital Health (பிரைவட்) லிமிட்டடின் தயாரிப்பு மற்றும் வர்த்தக முகாமையாளர் அஷீரா சம்சுதீன், Digital Health (பிரைவட்) லிமிட்டடின் தலைமை இயக்க அதிகாரி சோமஸ்ரீ சுப்ரமணியம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையின் பணப்பாளர், பொது மருத்துவ சேவைகள் பிரிவின் துணைப் பணிப்பாளர் டாக்டர். ஜி. விஜேசூரிய, லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையின் திட்டமிடல் மருத்துவ அதிகாரி டாக்டர். சாவித்திரி தர்மரத்ன, Digital Health (பிரைவட்) லிமிட்டடின் அபிவிருத்தித் தலைவர் நவோதா ரத்நாயக்க.

நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Doc990 உடன் இணைந்து, நாட்டின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் (LRH) இதய மார்பு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (CTICU) இரத்த வாயு பகுப்பாய்வுகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் உபகரணங்களை வழங்குகின்றது.

இதய மார்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (CTICU) இன்றியமையாத மருத்துவ உபகரணங்களில் ஒன்றான இரத்த வாயு பகுப்பாய்வுகளுக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி, குழந்தைகளுக்கு அத்தியாவசியமான மற்றும் உயிர்காக்கும் மருத்துவச் சேவையை மருத்துவமனை வழங்குவதற்கும், எவ்விதமான தடைகளும் இன்றி இதய மார்பு அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் உதவும். இந்த அறிவிப்பு, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான டயலொக்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறதுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அவர்களின் சமீபத்திய நிவாரண முயற்சியான மனிதநேய ஒன்றிணைவு, எனும் செயற்றிட்டத்தை, ஒத்த எண்ணம் கொண்ட பெருநிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பித்தது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் இலங்கையின் சேவைத் துறைகள் ஆகிய இரண்டிற்கும் டயலொக்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு மீண்டும் வலியுறுத்துகிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழுமப் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்துத் தெரிவிக்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் தமது இளம் நோயாளிகளைக் கவனிப்பதற்காக 24 மணி நேரமும் அயராது உழைக்கும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுக்கள் வழங்கும் சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த நன்கொடையானது மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சுமையை குறைக்கும் அதே வேளையில் தீவிர சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் ஆதரவளிக்கும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சவாலான காலங்களில் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதை வலுப்படுத்த இந்த முன்முயற்சியானது எங்கள் கடமையில் ஒரு முன்னோடியாகும்.

இந்த நன்கொடை குறித்து கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் விஜேசூரிய, “குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் உள்ள இதய தீவிர சிகிச்சை பிரிவிற்கு இரத்த வாயு பகுப்பாய்விற்கான உபகரணங்களை வழங்க முன்வந்துள்ள டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இத்தருணத்தில், இந்த நன்கொடையானது நிறுவனத்தின் நல்லெண்ணச் செயலாகும். இந்த உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியதன் மூலம், தீவிர நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தை நோயாளிகளுக்கு தேவையான மற்றும் அவசியமான சிகிச்சையை சரியான நேரத்தில் வழங்க முடியும். எப்பொழுதும் எங்களின் தேவையை அறிந்து உதவிக்கரம் நீட்டி வருவதன் காரணமாக லேடி ரிட்ஜ்வே டயலொக் மற்றும் Doc990 உடன் வைத்திருக்கும் நீண்ட கால உறவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். எங்கள் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் இளம் நோயாளிகள் இவர்களின் தாராளமான மற்றும் முக்கிய ஆதரவுகளால் எப்போதும் பயனடைந்துள்ளார்கள்.

Digital Health Services (Pvt) Ltd ஆல் நிர்வகிக்கப்படும் Doc990, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வு வழங்குனராகும், இந்தச் சேவைக்காக தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சுகாதார சேவைகளை வழங்குகிறது. 2016 இல் நிறுவப்பட்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் துணை நிறுவனமான Doc990, 140 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 5000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் வாடிக்கையாளர்களை இணைக்கிறது. இந்த சேவையினை www.doc.lk ஊடாகவும் 990 க்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் அல்லது Doc990 Android மற்றும் iOS App ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். Doc990 ஆனது, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளினூடாக மருத்துவ ஆலோசனைகள் உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களை தகுதிவாய்ந்த மருத்துவர்கள், தரமான மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கிறது.