பொருள் விரிவாக்கம்

டயலொக் வாடிக்கையாளர்கள் 2023ல் Dialog Star Points மூலமாக ரூ. 18 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ இற்கு நன்கொடையாக அளித்துள்ளனர்;

2016 முதல் இன்றுவரை Dialog Star Points மூலமாக ரூ.140 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ இற்கு நன்கொடையாக அளித்துள்ளனர்

May 08th, 2024         Colombo

 

Dialog Customers Contribute to Little Hearts

டயலொக் வாடிக்கையாளர்கள் அனைவரும் இன்னொரு முறையும் ஒன்றிணைந்து லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு ரூ. 18 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர். இந்த முன்னெடுப்பு இலங்கை குழந்தைநல மருத்துவர் கல்லூரியினால் முன்னெடுக்கப்படுகிறது. 2016 முதல் இன்றுவரை ரூ. 140 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை Dialog Star Points நன்கொடையாக திரட்டியுள்ளது. சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 மாடிகள் கொண்ட இருதய மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு உதவிக்கரம் நீட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2023ஆம் ஆண்டின் நன்கொடை தேவைப்படும் குழந்தைகளுக்கு உயிரைக் காக்கும் சுகாதார வசதிகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும். குறிப்பாக, நான்கு இதய அறுவை சிகிச்சை மையங்கள், ஒரு வடிகுழாய் (catheterisation) பரிசோதனை கூடம், 100க்கும் மேற்பட்ட இதய, மருத்துவ மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை படுக்கைகள், ஒரு என்பு மச்சை மாற்றுப்பிரிவு, மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய பரிசோதனை மற்றும் பயிற்சி வசதிகள் கொண்ட இப்பிரிவுக்கு இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படும். லிட்டில் ஹார்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக மட்டுமல்லாமல், டயலாக் வாடிக்கையாளர்கள் SOS குழந்தைகள் கிராமங்கள் இலங்கை, HelpAge Sri Lanka, சிறுநீரக சங்கம், யுனிசெஃப், மனிதநேய ஒன்றிணைவு போன்ற பல்வேறு தொண்டுப்பணிகளுக்கும் நன்கொடை அளித்துள்ளனர். இதன் மூலம் 2023ஆம் ஆண்டின் மொத்த நன்கொடை தொகை சுமார் இலங்கை ரூபாய் 22 மில்லியனை எட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி சாண்ட்ரா டீ சொய்ஸா அவர்கள் “லிட்டில் ஹார்ட்ஸ் போன்ற தன்னார்வ தொண்டு முன்னெடுப்புகளுக்காக தங்கள் Star Pointsஐ மீண்டும் ஒருமுறை ஒன்று சேர்த்து வழங்கிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்படையச் செய்யவும், சுயமேம்பாடடையச் செய்யவும் டயலொக் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளமைக்கு இது ஒரு சான்றாகும். ஒன்று சேர்ந்து பணியாற்றுகையில் அது உதவி தேவைப்படுவோருக்கு எத்தகைய மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதை கண்கூடாக கண்டுள்ளோம்” என்றார்.

லிட்டில் ஹார்ட்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. துமிந்த சமரசிங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், "Dialog Star Points நன்கொடை அமைப்பை நிறுவுவதற்கு அசாதாரண ஆதரவை வழங்கிய டயலொக் நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். லிட்டில் ஹார்ட்ஸைக் காப்பாற்றுவதற்காக தங்கள் Star Pointsஐ தாராளமாக வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். எங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நாங்கள் உறுதி செய்கிறோம், மேலும் வரும் ஆண்டுக்குள் திட்டத்தை முடிக்க முடியும் என்று நம்புகிறோம். மேம்பட்ட மருத்துவ வசதிகளுடன் சிறாரின் உயிர் காக்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு Dialog Star Points மூலமான உதவி, கூட்டுநிதி திரட்டலின் சக்தியை எம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டுகிறது" என்றார்.

தனிநபர்கள் பிற குறிப்பிடத்தக்க தொண்டு நிறுவனங்களுக்கு தங்கள் ஸ்டார் புள்ளிகளை நன்கொடையாக #141*6# என்ற எண்ணை டயல் செய்து அல்லது எந்த நேரத்திலும் MyDialog App ஐப் பயன்படுத்தி வழங்க முடியும். வாடிக்கையாளர்கள் இலங்கையின் முதலாவது நோக்கம்-சரிபார்க்கப்பட்ட கூட்டு நிதி திரட்டும் தளமான www.karuna.lk மூலமாகவும் நன்கொடை அளிக்க முடியும்.