Body

டயலொக் பாடசாலை ‘ரக்பி – 7’ அபிவிருத்தி போட்டித்தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் மார்ச் 12 ஆம் திகதி ஆரம்பம்

மார்ச் 10, 2022         கொழும்பு

 

Dialog Schools Rugby Development 7s

இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியன இணைந்து நடாத்துகின்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான டயலொக் பாடசாலை ‘ரக்பி – 7’ சுற்றுப் போட்டியின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், போட்டியின் இரண்டாம் கட்டம் மார்ச் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, இப்போட்டிகள் கண்டி பல்லேகலே டிரினிட்டி கல்லூரி ரக்பி மைதானத்தில் காலை 8.30 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக ஆரம்பமாகியுள்ள 14 வயதுக்குட்பட்டோருக்கான டயலொக் பாடசாலை அபிவிருத்தி ‘ரக்பி–7’ முதற்கட்ட போட்டியில், இரத்தினபுரி- கொடக்கவெல, குலரத்ன மத்திய கல்லூரி, கேகாலை ஸ்வர்ண ஜயந்தி மகா வித்தியாலயத்தை அதிக புள்ளிகளுடன் தோற்கடித்து செம்பியனாகி யமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் பாடசாலைகள் அபிவிருத்தி 'ரக்பி - 7' சுற்றுப் போட்டிகள் சுகாதாரத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி நடைபெறும் அதேவேளை, போட்டியாளர்கள் தத்தமது பாடசாலைகளின் உயிர்குமிழி பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பில் கீழ் இருப்பர். அத்துடன் அவர்களுக்கு விரைவான அன்டிஜன்ட் சோதனைகள் ஒவ்வொரு இடைவேளைகளின்போதும் நடத்தப்படும்.

இதேவேளை, மார்ச் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டியில் வடமேல் மாகாணத்தின் சார்பான தமது பங்கேற்பை அதுத்கல்புர குமார தேசிய பாடசாலை, அஸ்வெத்தும வித்தியாலயம், ஸ்ரீ சரணங்கர சங்கராஜ ம.வி., பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, ஸ்ரீ நிஷங்க ம.வி., பண்டாரநாயக்க வித்தியாலயம், போயகனே ம.வி. , சஹிரா மாதிரி ம.வி. மற்றும் வயம்ப சி டபிள்யு டபிள்யு கன்னங்கர ம.வி. ஆகிய பாடசாலைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மத்திய மாகாணத்தின் சார்பான தமது பங்கேற்பை நாவலப்பிட்டி மத்திய கல்லூரி, ரங்கிரி தம்புள்ளு தேசிய பாடசாலை, ஹெந்த்கனாவ ம.வி., கலேவெல மத்திய கல்லூரி, அல்-மதீனா தேசிய பாடசாலை, குருந்துவத்த ரோயல் கல்லூரி மற்றும் ஹேவாஹெட்ட மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், ஊவா மாகாணத்தின் சார்பான தமது பங்கேற்பை தம்பரவ ம.வி., கெந்தகொல்ல இரண்டாம் நிலைப் பாடசாலை, கிராந்துருகோட்டே ம.ம.வி., பண்டாரநாயக்க ம.ம.வி., ஹத்தத்தாவ தேசிய பாடசாலை, அந்துஅல்பொத்த தேசிய பாடசாலை மற்றும் குட்டியகொல்ல ம.வி ஆகிய பாடசாலைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

“பாடசாலைகளுக்கிடையே ரக்பி போட்டிகளை விருத்தி செய்யும் நோக்கிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான டயலொக் பாடசாலைகளின் ரக்பி-7 போட்டித்தொடரின் ஆரம்பப் போட்டியானது, இலங்கையின் கிராமப்புறங்களுக்கு இவ் விளையாட்டை கொண்டு சென்ற மாபெரும் வெற்றிகரமான சுற்றுப்பயணமாக அமைந்தது " என இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நிரோதா விஜேராம அவர்கள் தெரிவித்ததுடன், "இதே போட்டித்தொடரின் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் போட்டிகளும் நமது அனுசரணையாளர்களான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் அர்ப்பணிப்பிலான மற்றுமொரு விரிவாக்கமாகும், ஏனெனில், இலங்கையின் ரக்பி விளையாட்டை பாரம்பரியமாக கொண்டிராத பாடசாலைகளிலிருந்து புதிய திறமைகளை அடையாளம் கண்டு இவ்விளையாட்டை பாடசாலைகள் மத்தியில் மேம்படுத்த நாங்கள் எண்ணுகிறோம்." எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரைப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், மற்றும் ஜூனியர் கைப்பந்து மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு - இராணுவ பாரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.