Body

இலங்கை வங்கி, டயலொக் ஆசிஆட்டா, மற்றும் வெவனெட் ஆகியவை கோவிட் -19 நிவாரண முன்முயற்சியில் பங்காளராக இணைந்துள்ளன

கோவிட் -19- நோயாளிகளை ஆதரிப்பதற்கான தகவல் தொடர்பு மையம் தொடங்கப்பட்டது

ஜுலை 29, 2021         கொழும்பு

 

news-1

படத்தில் இடமிருந்து வலமாக மருத்துவ சேவைகள் பிரதி இயக்குனர் டாக்டர் லால் பனாபிட்டிய, பொது சுகாதார சேவைகளின் மேலதிக செயலாளர் டாக்டர் லட்சுமி சோமதுங்க, GMOA தலைவர், டாக்டர் அனுருத்தா பதேனிய, மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர், டாக்டர் சுனில் டி அல்விஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, சுகாதார அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா தேவி வன்னியாராச்சி, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, இலங்கை வங்கி தலைவர், திரு. காஞ்சன ரத்வத்தே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுபுன் வீரசிங்ஹ, வெவனெட் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுரேன் பிண்டோ

கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தின் தேசிய முயற்சியை ஆதரித்து இலங்கையின் முதற்தர வங்கியான இலங்கை வங்கி மற்றும் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வெவனெட் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிட்டட் ஆகியவை ஒன்றிணைந்து நோய் அறிகுறியற்ற அல்லது குறைந்த அறிகுறியுள்ள கோவிட்-19 நோயாளிகளை பராமரிப்பதற்கு தேசிய 1390 கோவிட் -19 ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்பை நிறுவுவதற்காக கூட்டினைந்துள்ளன. இந்த திட்டத்தை சுகாதார அமைச்சின் (MOH) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணவர்தன அவர்களின் வழிகாட்டுதலில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) இணைந்து, அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ சுகாதார அமைச்சரின் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக, முழுமையான ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு தீர்வானது மருத்துவமனை சுகாதார அமைப்பின் மீதான சுமையை குறைக்க உதவுவதுடன் கோவிட் -19 நோயாளிகளுக்கு லேசான அல்லது அறிகுறிகளைக் காண்பிக்கும் ஒரு நடைமுறை மற்றும் தொந்தரவு இல்லாத மீட்பு செயல்முறையாகவும் இது அமையும். 1390 வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு தீர்வின் நோக்கம் என்னவெனில், அறிகுறியற்ற நோயாளிகளுக்கு அதிகபட்ச ஆறுதலளிப்பதாகும், மேலும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கும், தகுதிவாய்ந்த மருத்துவரால் தொலைவிலிருந்து கண்காணிக்கப்படுவதற்கும் உதவுகிறது.

ஒருங்கிணைந்த அழைப்பு நிலைய தீர்வு, இலங்கை வங்கியினால் நிர்வகிக்கப்படுவதுடன் டயலொக் மூலம் இயக்கப்படுகின்றது. கட்டணமற்ற மும்மொழியிலான 1390 துரித இலக்க சேவையாகும். இது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான இணைப்பை வழங்குகிறது, மேலும் சுகாதார அமைச்சு (MOH) மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) நோயாளி மேலாண்மை அமைப்புடன் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்கிறது. நோயாளி மேலாண்மை அமைப்பை வெவனெட் உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதியுதவியினையும் வழங்குகின்றது. கால் சென்டர் ஆனது, சுகாதார அமைச்சால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட முகவர்களுடன் செயல்படுத்தப்படுவதுடன் அதற்கான நிதியுதவினை இலங்கை வங்கி (BOC) வழங்கும் அதே நேரத்தில் டயலொக் தொலைதொடர்பு சேவையை இலவசமாக வழங்குகின்றது. மாவட்ட அளவில் மருத்துவர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட முழு திட்டத்தின் ஒருங்கிணைப்பும் GMOA ஆல் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. குடும்ப மருத்துவம், பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் உள் மருத்துவம், அவசர மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறியல் போன்ற பல்வேறு மருத்துவ பிரிவுகள் நிபுணர்களின் கூட்டமைப்பால் நிபுணத்துவம் வழங்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் முழு திட்டமும் MOH ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

பிராந்திய MOH திணைக்களங்கள் ஆரம்பத்தில் கோவிட் -19 PCR தொற்று உறுதியாகியுள்ள நோயாளிகளை மதிப்பீடு செய்யும் அதே நேரத்தில் நோயாளிகளை வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டுமா அல்லது மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டுமா என்பதை நோயாளிகளின் தன்மையை வைத்து தீர்மானிக்கும். மதிப்பீட்டின் போது வீட்டில் தனிமைப்படுத்தலுக்காக நியமிக்கப்பட்ட நோயாளியின் தகவல்கள் நோயாளி மற்றும் தொடர்புடைய சுகாதார சேவைகளுடன் ஒருங்கிணைப்பதற்காக BOC- நிர்வகிக்கப்பட்ட அழைப்பு மையத்துடன் பகிரப்படும். நோயாளியின் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நோயாளியைத் தொலைவில் இருந்து கொண்டு கண்காணிப்பதற்கும் அவருடைய முக்கியத் தேவைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் பொறுப்பான வைத்தியர் ஒருவர் நியதமிக்கப்படுவார். இந்த அமைப்பு கையேடு செயல்முறைகளை அகற்ற உதவும், அதே நேரத்தில் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் பொறிமுறையை வழங்குகிறது. ஆரம்ப பைலட் திட்டம் ஜூன் மாத தொடக்கத்தில் களுத்துறை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது, இன்று வரை, 800 க்கும் மேற்பட்ட நோயாளிகளை இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளது. இந்த திட்டம் மேற்கு மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு ஜுலை 10 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடியும்.

1390 மும்மொழி சேவை அனைத்து இலங்கையர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும் எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 1390 க்கு அழைப்பதன் மூலம் இந்த சேவையினை அணுகிடலாம்.

இந்த முன்முயற்சி குறித்து கௌரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கருத்து தெரிவிக்கையில் “கோவிட் -19 இனை ஒழிப்பதில் நாட்டின் முயற்சிகளுக்கு மேலும் துணைபுரிய தேசிய 1390 கோவிட் -19 ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு தீர்வைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அழைப்பு நிலையத்திற்கு வசதியளிப்பதற்காக இலங்கை வங்கிக்கு தேவையான இணைப்பு உள்கட்டமைப்பை வழங்கிய டயலொக் ஆசிஆட்டா, நோயாளி மேலாண்மை முறையை விரிவுபடுத்துவதற்கான வெவனெட் இன்டர்நேஷனல் மற்றும் மருத்துவர்களை நிலைநிறுத்துவதற்கும் இந்த திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கும் GMOA க்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த ஒருங்கிணைப்பும், முயற்சியும் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான நாட்டின் நீண்டகால திட்டங்களின் முன்னேற்றத்திற்கு கணிசமாக உதவும் ”என தெரிவித்தார்.