பங்கொன்றின் விலை


டயலொக் பங்குகள் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

குறியீடு : DIAL

Newswire codes :

ப்ளும்பேர்க் : DIAL.SL

டோவ் ஜோன்ஸ் : DIAL.SL

ரொய்ட்டர்ஸ் : DIAL.CM

பங்கின் வரலாறு

டயலொக் ஆஸியாடா பிஎல்சியின் சாதாரண பங்குகள் (முன்பு டயலொக் ரெலிகொம் என அறியப்பட்டது) தற்போது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ளன. ஆரம்ப பொது பங்கு வழங்கல் மூலம் டயலொக் 712,336,293 பங்குகளை விநியோகித்திருந்தது, இது ஆரம்ப நாளின் 1 மணிநேரத்தினுள் மிகையடைந்திருந்ததுடன், 8,548,04 மில்லியன் ரூபாவை திரட்ட முடிந்திருந்தது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆரம்ப பொது வழங்கலாக 8.5 பில்லியன் ரூபா பெறுமதியை கொண்டமைந்திருந்தது. இந்த பங்குகள் 6.5 தடவைகள் மிகையடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.டயலொக் ஆஸியாடா பிஎல்சியின் சாதாரண பங்குகள் (முன்பு டயலொக் ரெலிகொம் என அறியப்பட்டது) தற்போது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ளன. ஆரம்ப பொது பங்கு வழங்கல் மூலம் டயலொக் 712,336,293 பங்குகளை விநியோகித்திருந்தது, இது ஆரம்ப நாளின் 1 மணிநேரத்தினுள் மிகையாக விநியோகமாகி, 8,548,04 மில்லியன் ரூபாவை திரட்ட முடிந்திருந்தது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆரம்ப பொது வழங்கலாக 8.5 பில்லியன் ரூபா பெறுமதி அமைந்திருந்தது. இந்த பங்குகள் 6.5 மடங்குகள் மிகையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரம்ப பொது வழங்கல் மூலம் டயலொக் இலங்கை மூலதனச் சந்தையில் சில மைல்கற்களை எய்தியிருந்ததுடன், செயற்திறன் சார்ந்த சாதனைகளையும் ஏற்படுத்தியிருந்தது. டயலொக் IPO என்பது வழங்கப்பட்டு 14 நாட்களுள் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்ததன் மூலம், வேகமாக வியாபாரத்தை ஆரம்பித்த பங்குகள் எனும் அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது.இந்த ஆரம்ப பொது வழங்கல் மூலம் டயலொக் இலங்கை மூலதனச் சந்தையில் சில மைல்கற்களை எய்தியிருந்ததுடன், செயற்திறன் சார்ந்த சாதனைகளையும் ஏற்படுத்தியிருந்தது. பங்குகள் வழங்கப்பட்டு 14 நாட்களுள் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில்(CSE) கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்ததன் மூலம், வேகமாக வர்த்தகத்தை ஆரம்பித்த அந்தஸ்த்தையும் டயலொக் IPO பெற்றுள்ளது.

சாதனைகளின் மைல்கற்கள்:

 

 

  • 8.5 பில்லியன் ரூபா பெறுமதியான இலங்கையின் மாபெரும் IPO.

  • IPO ஒன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட மிக அதிகமான பங்கு பெறுமதியாக 56.2 பில்லியன் ரூபா பதிவு செய்திருந்தது.

  • IPO ஒன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட மிக அதிகமான வெளிநாட்டு பங்குகோரல்பெறுமதியாக ரூபா 40 பில்லியன்.

  • 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனும் சந்தை மூலதன எய்திய ஒரே பட்டியலிடப்பட்ட கம்பனி.

  • 2005 ஜுலை 28ம் திகதியன்று அதிக எண்ணிக்கையான வர்த்தகமாக 13,254.

ஆரம்ப பொது வழங்கல் ஆவணத்தை தரவிறக்கம் செய்ய இங்கே Click செய்யவும்.

2007 ஜுன் 13ம் திகதி முடிவடைந்த டயலொக்கின் உரிமை வழங்கல்கள் ரூபா15.5 பில்லியனை கம்பனிக்கு பெற்றுக் கொடுத்தத்துடன் 100%க்கும் அதிகமான கோரல்கள் கிடைத்ததன் மூலம் இலங்கை மூலதனச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய பங்கு திரட்டிய நிறுவனமாக பதிவாகியுள்ளது.

இந்த புதிய பங்கு வழங்களின்போது வந்த வெளிநாட்டு பணம் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகமாக பதிவாகியிருந்ததன் மூலம் இந்நாட்டிற்கு வந்த அதிகூடிய வெளிநாட்டு முதலீடுகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.