பொருள் விரிவாக்கம்

‘மனிதநேய ஒன்றிணைவு’ ரூ.200 மில்லியன் பெறுமதியான அவசரகால நிவாரணங்ளை 80,000 க்கும் அதிகளவான குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது.

அனைத்து இலங்கையர்களையும் பெரு நிறுவனங்களையும் நாடளாவிய ரீதியில் இடம்பெரும் அவசரகால நிவாரணப் பணியுடன் இணையுமாறு அழைக்கின்றது.

ஜுலை 25, 2022         கொழும்பு

 

Manudam Mehewara

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சமூகங்களைச் சேர்ந்த 200,000 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்றிட்டமான 'மனிதநேய ஒன்றிணைவு' 2022 ஜூலை 11 வரையில் நாடளாவிய ரீதியில் செயல்பட்டு 80,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசரகால நிவாரணங்களை வழங்கி தனது அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, CBL Group, Citi, Sunshine Holdings PLC மற்றும் Huawei Technologies Lanka Co Pvt Ltd இந்த திட்டத்தின் விநியோக பங்காளரான சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் சுயாதீன கணக்காய்வு பங்காளியான PwC ஸ்ரீலங்கா ஆகியவற்றால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடும் மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சுயாதீன தொலைக்காட்சி சேவை, சியத, ஸ்வர்ணவாஹினி, டிவி தெரண மற்றும் வசந்தம் ஆகிய அலைவரிசைகள் ஊடக பங்காளராக இந்த செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு செய்கின்றன.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நமது சொந்த மக்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கான கூட்டு முயற்சியில் இணையுமாறு ஏனைய அனைத்து பெருநிறுவனங்களுக்கு மனிதநேய ஒன்றிணைவு அழைப்பு விடுக்கின்றது. அனைவரும் தங்களின் கிரெடிட்/டெபிட் கார்ட், வங்கி வைப்பு eZ Cash, Star Points, genie அல்லது 0776 421421 என்ற இலக்கத்திற்கு Top up செய்வதன் மூலம் இணைந்துக்கொள்ள முடியும். நன்கொடை வழங்குதல் தொடர்பாக செயல்முறை பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://dlg.lk/don_Eக்கு செல்லுங்கள்.

தற்போது, நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் அவசரகால நிவாரணங்கள் விநியோகிக்கப்படுகின்றன, மேலும் 'மனிதநேய ஒன்றிணைவு' திட்டமானது, பயனுள்ள பொருளாதார மீட்புத் திட்டத்தின் மூலம் நாட்டில் நிலையான நன்மைகள் நிறுவப்படும் வரை அதன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும். மனிதநேய ஒன்றிணைவு பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://www.dialog.lk/corporate க்கு செல்லுங்கள்.