பொருள் விரிவாக்கம்

Doc990 சிறிசந்த சமுப சுவசேவன கூட்டுறவு மருத்துவமனையுடன் பங்குதாரராக இணைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நோயாளிகள் விரல் நுனியில் அணுகக்கூடிய வகையில் சுகாதார சேவையை கொண்டு வருகின்றது.

ஜுன் 10, 2021         கொழும்பு

 

news-1

இடமிருந்து வலம்: டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் வணிக மேம்பாடு பிரிவு நிர்வாக அதிகாரி தமரா ராஜவர்தன, டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் வணிக மேம்பாடு பிரிவு முகமையாளர் நவோதா ரத்நாயக்க, டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் தலைமை இயக்க அதிகாரி சோமஸ்ரீ சுப்பிரமணியம், சிறிசந்த மருத்துவமனை (நிட்டம்புவ), தலைவர் ஹேமந்த நாகோடவிதான, சிறிசந்த மருத்துவமனை (நிட்டம்புவ), இயக்குநர், சுபாஷ் ஈரோஷன், சிறிசந்த மருத்துவமனை (நிட்டம்புவ), இயக்குநர், கல்யாண வனிகசுந்தர

இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இயக்கப்படும் Doc990, சமீபத்தில் சிறிசந்த சமுப சுவசேவன கூட்டுறவு மருத்துவமனையுடன் (பொதுவாக சிறிசந்தா கூட்டுறவு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது) நாடளாவிய ரீதியில் உள்ள 132 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகளை அணுக வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

இலங்கையில் ஒரு முன்னணி கூட்டுறவு மருத்துவமனையான சிரிசந்த கூட்டுறவு மருத்துவமனை நிட்டம்புவையில் அமைந்துள்ளதுடன், 1998 ஆம் ஆண்டில் அதானகல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தால் திறந்து வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, மருத்துவமனை அதன் நோயாளிகளிடமிருந்தும் அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்தும் அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்கப்பட்ட சிறந்த சுகாதார சேவைகளுக்காக பெரும் ஆதரவையும் கருத்துக்களையும் பெற்றுள்ளது. இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரால் இயக்கப்படுகிற Doc990 பாவனையாளர்கள் இப்போது சிறிசந்த கூட்டுறவு மருத்துவமனை வழங்கும் சுகாதார சேவைகளை முன்பதிவுகளை செய்வதன் மூலம் தடையின்றி அணுகிட முடியும்.

கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக, இந்த சேவை இலங்கையர்களுக்கு டிஜிட்டல் தீர்வைக் கொண்டு கிளினிக்குகளுக்கு விஜயம் செய்வதை தவிர்த்து முன்பதிவுகள் மூலம் சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் பயனர் சார்ந்த முறையுடன் மருத்துகளை வழங்குகின்றது. 990 க்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம், www.doc.lk க்கு செல்வதன் மூலம் அல்லது Doc990 மொபைல் App மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளின் விரிவாக்க வலையமைப்பு மூலம், நாட்டில் உள்ள அனைவரும் சுகாதார சேவைகளை வசதியாக அணுகக்கூடியதாக மாற்ற Doc990 முயற்சிக்கிறது.