பொருள் விரிவாக்கம்

டயலொக் டெலிவிஷன் குரல் கட்டளைகளை செயல்படுத்த TeDi Alexa தீர்வை ஒருங்கிணைக்கிறது

May 12, 2021         Colombo

 

news-1

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சமீபத்தில் AI ஆற்றல்மிக்க TeDi Alexa தீர்வுகளை அதன் டயலொக் டெலிவிஷன் டிகோடர்களுடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளதுடன் இதனால் குரல் கட்டளைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டிவியைக் கட்டுப்படுத்த மேலதிக வசதிகளை வழங்குகின்றது. குரல் கட்டளைகள் மூலம் அனைத்து Infrared (IR) கட்டுப்படுத்தப்பட்ட வீட்டு சாதனங்களையும் நிர்வகிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Artificial Intelligence (AI) ஆற்றல்மிக்க TeDi Alexa Smart ஸ்பீக்கரையும் டயலொக் வழங்குகிறது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரால் விரிவாக்கப்பட்ட இந்த சமீபத்திய Smart Home Solution வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளை ஸ்மார்ட் இல்லமாக மாற்றுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், டிவி அலைவரிசைகளை மாற்றுவதற்கு இப்போது குரல் கட்டளைகளை வழங்கி மிகவும் எளிதாக அலைவரிசைகளை மாற்றிக்கொள்ள முடியும். மேலும், Alexa செயல்பாடுகளை வழக்கம் போல சாதனத்தில் பயன்படுத்தலாம், மேலும் smart speaker air conditioners, home theatre systems, மற்றும் home security systems போன்றவற்றை குரல் கட்டளைகளின் மூலம் IR-கட்டுப்படுத்தப்பட்ட எந்த சாதனத்தையும் நிர்வகிக்க முடியும். டயலொக்கின் இந்த வசதியான தீர்வை ஒருங்கிணைப்பதன் மூலம் AI இன் தடையற்ற செயல்திறனை, இலங்கை நுகர்வோரின் வீடுகளுக்கு டயலொக்கின் இணைப்பின் ஆற்றலுடன் அன்றாடம் இணைக்கும்.

இலங்கையில் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த சாதனமான TeDi Alexa எதிர்காலத்தில் பொருந்தக்கூடிய வெளிப்பாட்டை நாட்டிற்கு கொண்டு வந்தது. தற்போது, TeDi Alexa அமேசானின் AI சாதனங்களில் முதலாவதாக கருதப்படுகிறது, இது ஸ்மார்ட் இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு குரல் செயற்படுத்தல் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களை ஸ்மார்ட்டாக கட்டுப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் TeDi Alexa ஐ ரூ. 16, 990 நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள கூடியதுடன் ஆன்லைனில் சாதனத்தை கொள்வனவு செய்யும் போது சாதனத்தை வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ளவும் முடியும். டயலொக் வழங்கும் TeDi Alexa தீர்வு குறித்த மேலதிக விபரங்களை https://www.dialog.lk/tedi-alexa ஊடாக பெற்றுக்கொள்ளுங்கள்.