பொருள் விரிவாக்கம்

DIALOG-SLESA ஒன்றிணைந்து அகில இலங்கை ரீதியிலான Free Fire ஈஸ்போர்ட்ஸ் (Esports) செம்பியன்ஷிப் 2021 விளையாட்டு போட்டிகளை புதிய தளத்திற்கு கொண்டு செல்கின்றன!

ரூ. 1 மில்லியன் வரையிலான பரிசுத்தொகை அறிவிப்பு!

மே 26th, 2022         கொழும்பு

 

DIALOG-SLESA All-Island Free Fire Esports Championship 2021

இலங்கையில் Esports இன் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில், இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரும், இலங்கை தேசிய ஈஸ்போர்ட்ஸ் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் SLESA (Sri Lanka Esports Association - SLESA) உடன் கைகோர்த்தவாறு அகில இலங்கை ரீதியிலான ‘Free Fire’ ஸ்போர்ட்ஸ் செம்பியன்ஷிப் 2021 விளையாட்டு போட்டிகளை நடத்தவுள்ளது. அதற்கமைய இப்போட்டிகள் 2022 ஜூன் 7 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தம்மை பதிவு செய்வதற்கான திகதி ஜூன் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் https://dlg.lk/3vZdkd9 மூலம் தம்மை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு, Dialog Facebook பக்கம் அல்லது Sri Lanka Esports Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.

கொவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக, மக்களின் நடமாட்டம் மற்றும் பொதுக் கூட்டங்கள் ஆகியன கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், பங்கேற்பாளர்கள் தொலைதூரங்களில் இருத்தவாறோ அல்லது வசதியாக தங்கள் வீடுகளில் இருந்தவாறோ இப்போட்டிகளில் பங்கு கொள்ள முடிகின்றமையால், Dialog - SLESA இன் அகில இலங்கை ரீதியிலான மேற்படி ‘Free Fire’ (Free Fire Championship) ஈ ஸ்போர்ட்ஸ் செம்பியன்ஷிப் போட்டியானது அதிக ஈர்ப்பைப் பெற்றுள்ளது எனலாம் .

ரூபா 1 மில்லியன் மதிப்புள்ள கவர்ச்சிகரமான பரிசுப் பொதியை கொண்டுள்ள இப்போட்டியானது, மாவட்ட அளவிலான, ஈஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக செயல்படுவதுடன், மேலும் அவர்கள் சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் வழி வகுக்கும். பல்வகைமை கொண்ட மேற்படி Free Fire உயர்ரக போட்டியானது கைபேசியில் விளையாடப்படும் போட்டி என்பதுடன், ஈஸ்போர்ட்ஸ் வெளியீட்டாளரான Garena வால் இது வடிவமைக்கப்பட்டு மல்டிபிளேயர் ஃபோர் ரோயல் மொபைல் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா ஈ ஸ்போர்ட்ஸ் எசோஷியேஷன் (LESA) தலைவர் ரவீன் விஜயதிலக அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், "அகில இலங்கை ரீதியிலான DIALOG-SLESA Free Fire செம்பியன்ஷிப் 2021 போட்டியானது, தற்போது நிலவி வருகின்ற உலகளாவிய ஈஸ்போர்ட்ஸ் புரட்சிக்கு இலங்கையின் Esports போட்டியாளர்களை தயார்படுத்துவதில் ஒரு படிக்கல்லாக அமைந்துள்ளது எனலாம். பிராந்திய மட்டத்திலான ஈஸ்போர்ட்ஸ் போட்டியாளர்களை நாட்டுக்கு இணையாக வைத்திருக்க நாம் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் Dialog எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் " என்றார்.

இப்போட்டிகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாகிய டயலொக் ஆசிஆட்டா அனைத்து ஈஸ்போர்ட் (Esport) பிரியர்களின் நலன் கருதி Thepapare.com, SLESA & Gamer.lk சமூக ஊடகங்கள் ஊடாக போட்டிகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி , பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.