பொருள் விரிவாக்கம்

டயலொக் இலங்கை பரா ஒலிம்பிக் ‘Road to Tokyo’ க்கான அணிக்கு தொடர்ந்து அனுசரணை

ஜுலை 29, 2021         கொழும்பு

 

news-1

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க டோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு உத்தியோகப்பூர்வ அனுசரணையினை அணி தலைவர் தினேஷ் பிரியந்த ஹேரத், மற்றும் NPC தலைவர் கர்னல் தீபால் ஹேரத் ஆகியோரிடம் கையளித்தார் . மேலும் டோக்கியோ விளையாட்டுக்களுக்கான இலங்கையின் அணியின் செஃப் டி மிஷன் மேஜர் ஜெனரல் ஜே.ஆர்.அம்பெமோஹோட்டி மற்றும் NPC இன் நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் படத்தில் காணலாம்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஆகஸ்ட் மாதம் இலங்கையிலிருந்து புறப்படும் ஜாவெலின் நட்சத்திரமான தினேஷ் பிரியந்த ஹெரத் தலைமையிலான 9 வீரர்களை கொண்ட வலுவான அணியை இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வலுவூட்டுகின்றது.

2012 ஆம் ஆண்டு லண்டன் போட்டிகளில் இடம்பெற்ற இ பாரா ஒலிம்பிக் போட்டிகளில்இ பிரதீப் சஞ்சய T 46 பிரிவில் 400 மீட்டரினை 49.28 வினாடிகள் கடந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். 2016 ரியோ போட்டிகளில்இ பரா ஒலிம்பியன் தினேஷ் பிரியந்த ஹெரத் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும் மேலும் 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயில் இடம்பெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.

‘Road to Tokyo’ போட்டிகளில் 09 உறுப்பினர்களை உள்ளடக்கிய அணியில், F46 ஜாவெலின் பிரிவில் போட்டியிடும் தினேஷ் பிரியந்த ஹெரத், சமித துலான் மற்றும் சம்பத் ஹெட்டியாராச்சி ஆகியோர் F44 மற்றும் F64 ஜாவெலின் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்கள். பாலித பண்டாரா F42 Shot Put இலும், மதுரங்க சுபசிங்க T47 400 மீட்டர் போட்டிகளிலும் போட்டியிடவுள்ளார்கள். குமுடு பிரியங்க T45/46 100 மீட்டர் நீளம் பாய்தல் போட்டியிலும் மற்றும் ரஞ்சன் தர்மசேன சக்கர நாற்காலி டென்னிஸில் போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பதக்கம் வெல்வதற்காக போராடவுள்ளார்கள். அதே நேரத்தில் சம்பத் பண்டாரா மற்றும் மகாஷ் ஜெயகோடி ஆகியோர் வில்வித்தை மற்றும் Rowing இல் பதங்களை வெல்வதற்கான இலக்கினை கொண்டுள்ளனர்.

டோக்கியோவிற்கு இலங்கை பாரா ஒலிம்பிக் கன்ஜிஜென்ட் இலங்கையின் பரா விளையாட்டின் நீண்டகால பங்காளியாக இருக்கும் அதே வேலை இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டாவினால் வலுவூட்டப்படுகின்றது.

டயலொக் 2015 முதல் தேசிய பரா ஒலிம்பிக்ஸ் குழு மற்றும் இலங்கை ராணுவ பரா விளையாட்டுக் குழுவின் பெருமைக்குரிய அனுசரணையாளராக இருந்து வருகிறது. மேலும் 2000 ஆம் ஆண்டில் இலங்கை பாராலிம்பிக் குழுவிற்கு முதன்முதலில் நிதியுதவி அளித்தது. அதன்பிறகு 2004, 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தேசிய பாரா விளையாட்டுக்களுக்கும் நிதியுதவி வழங்குகின்றது.

இலங்கையின் Chef de Mission இன் மேஜர் ஜெனரல் ஜே.ஆர்.அம்பெமோஹோட்டி கருத்து தெரிவிக்கையில் “லண்டன் மற்றும் ரியோவில் இடம்பெற்ற கடந்த இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக பதக்கங்களை வென்றதன் மூலம் இலங்கை பரா ஒலிம்பியன்கள் வியக்கத்தக்க வகையில் செயல்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் காரணமாக பயிற்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், போட்டியிட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய குழு கடுமையாக உழைத்துள்ளது, இதன் மூலம் டோக்கியோவில் அதிக பதக்கங்களை வெல்வோம் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ”

இலங்கையில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வலுவான ஆதரவினை வழங்கும் மற்றும் நீண்டகால அனுசரணையாளராக இருந்து அயராத முயற்சிகள் மேற்கொண்ட எங்கள் முதன்மை ஆதரவாளர்களான டயலொக் ஆசிஆட்டாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என மேஜர் ஜெனரல் ஆம்பெமோஹோட்டி மேலும் தெரிவித்தார்.

"இலங்கையின் தேசிய விளையாட்டுகளில் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் என்ற வகையில் NPC (தேசிய பாராலிம்பிக்ஸ் கமிட்டி) உடனான எங்கள் தசாப்த கால கூட்டுறவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு வர்த்தக மற்றும் மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க கூறினார். “நமது பரா ஒலிம்பியன்கள் சமீப காலங்களில் இலங்கை விளையாட்டு வீரர்கள் உலக விளையாட்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்பட முடியும் என்பதைக் காட்டியுள்ளனர். 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன்.

தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளின் உத்தியேகப்பூர்வ ஆதரவாளராகவும் டயலொக் ஆசிஆட்டா செயல்படுகிறது. ஜனாதிபதி தங்கக் கோப்பை கைப்பந்து போட்டியை வலுப்படுத்துவதற்கு மேலதிகமாக, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட நெட்பால் போட்டி, ரக்பி களகங்கள், பிரீமியர் கால்பந்து போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் பாடசாலை ரக்பி போட்டி, இராணுவ பாரா விளையாட்டு போட்டி, தேசிய பாரா விளையாட்டு போட்டி உலக பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ளும் இலங்கை பரா குழுவையும் ஆதரிக்கின்றது.