பொருள் விரிவாக்கம்

தாமரை கோபுரத்தில் Future Zone ஐ டயலொக் அறிமுகப்படுத்துகின்றது – எதிர்காலத்தினை இன்றே அனுபவிப்பதற்கு இலங்கையர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது

ஜனவரி 11, 2023         கொழும்பு

 

Humanoid Robot greeting visitors

Humanoid Robot greeting visitors

Inauguration of the Dialog Future Zone.

Dialog Future Zone திறப்பு விழா
படத்தில் இடமிருந்து வலமாக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தயாரிப்பு மற்றும் சேவை கண்டுபிடிப்பு, பிரிவு தலைவர் சதுர பீரிஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இயக்குனர் டத்தோ டாக்டர் நிக் ரம்லா நிக் மஹ்மூத், ஆசிஆட்டா குழும பெர்ஹாட் இன் கூட்டு செயல் குழு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி விவேக் சூட், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இயக்குனர் அஸ்வான் கான், கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்ஹ, கொழும்பு தாமரைக் கோபுரத்தின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க, ICTA இன் பணிப்பாளர் மென்பொருள் வடிவமைப்பாளர் தசுன் ஹெகொட

AI powered Digital Twin demonstration

AI powered Digital Twin demonstration

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அண்மையில் தாமரை கோபுரத்தின் முதல் தளத்தில் திறந்துவைத்த அதிநவீன, புத்தாக்கங்களை மையமாகக் கொண்ட - Dialog Future Zone இல் (டயலொக் எதிர்கால வலயம்) அதிநவீன தொழில்நுட்பங்களை கண்டு அனுபவிப்பதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பை விடுத்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 06.30 மணி வரை மேற்படி Dialog Future Zone திறந்திருக்கும். நுழைவு அனுமதி இலவசம்.

மேற்படி Dialog Future Zone பார்வையாளர்களுக்கு 5G, இன்டர்நெட் ஒஃப் திங்ஸ் (IoT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality - VR) போன்ற தளங்களில் சமீபத்திய முன்னேற்றங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. டயலொக்கின் தற்போதைய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் ஆகியனவற்றை உள்ளடக்கூடிய ஸ்மார்ட் நகரங்களின் வளர்ச்சி மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகளை செயல்படுத்துதல் போன்ற முன்முயற்சிகள் பற்றியும் பார்வையாளர்கள் இங்கு அறிந்து கொள்ள முடியும்.

"Dialog Future Zone இனை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு பார்வையும் அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், "டயலொக்கில் சாத்தியமானவற்றின் எல்லைகளை நோக்கியவாறு தொடர்ந்தும் நாம் முன்நோக்கி கொண்டு செல்கின்றோம், மேலும் Dialog Future Zone என்பது புதுமை மற்றும் முன்னேற்றத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். இந்தக் கண்காட்சி அதை பார்வையிடும் அனைவருக்கும் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

மேலும், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற பங்காளர்களுடன் இணைந்து பயிலரங்குகள், விரிவுரைகள் மற்றும் கல்விச் செயல்பாடுகளையும் இந்த Dialog Future Zone வழங்கும். இது மாணவர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் ஏற்றது. இதன் நடவடிக்கைகள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் தகமைகள் மற்றும் புத்தாக்குனர்களை ஊக்குவிக்கும் நோக்கிலானதாக அமைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"Future Zone பொதுமக்களுக்கு உத்வேகம் மற்றும் கல்விக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், தொழில் வல்லுநர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான தளமாகவும் இருக்கும் எனவும் நாங்கள் நம்புகின்றோம்," என வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

Dialog Future Zone ஆனது, சமீபத்திய ஸ்மார்ட் ஹோம் மற்றும் இன்டர்நெட் ஒஃப் திங்ஸ் (IoT) தீர்வுகள், முன்னணி பல்கலைக்கழகங்களின் டயலொக் '5G Innovation Centre' சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நிறுவனத்தின் புத்தாக்கப் பிரிவான 'Innovation Foundry' ஆகியவற்றினால் இயக்கப்படும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியனவற்றை கொண்டிருக்கும்.