பொருள் விரிவாக்கம்

டயலொக் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்காக பிற்கொடுப்பனவு வியாபார பக்கேஜினை அறிமுகப்படுத்துகிறது

மே 2, 2021         கொழும்பு

 

news-1

வணிக உரிமையாளர்களின் மாறுபட்ட தகவல்தொடர்பு தேவைகளுக்கு அமைய இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (“டயலொக்”) தனது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செலவு குறைந்த அழைப்பு மற்றும் டேட்டா தீர்வுகளை கொண்ட பிற்கொடுப்பனவு காம்போ பக்கேஜ்களை அறிமுகப்படுத்துகின்றது.

ஒரு மதிப்புமிக்க தொலைத்தொடர்பு தீர்வை நியாயமான விலையில் வழங்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, டயலொக் வியாபார வாடிக்கையாளர்களுக்கு வாடகை அடிப்படையில் அழைப்பு மற்றும் டேட்டா இரண்டையும் கலவையாக வழங்க முன்வந்துள்ளது. வணிகத்தின் தகவல் தொடர்பு செலவுகளை கணிசமாகக் குறைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள வணிக இணைப்புகளுக்கு மேலதிகமாக D2D/D2ND இணைப்புகளுக்கு இடையில் வரையறையற்ற அழைப்புகளையும் வழங்குகின்றது.

டயலொக் வியாபார பக்கேஜ்கள், அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவதுடன், ரூ.277 நிறுவன பக்கேஜ் D2D 1000 நிமிடங்களையும், D2D 1000 SMS களையும் மற்றும் 1.5GB Anytime Data இனையும் கொண்டுள்ளது. மேலும் ரூ.1777 பக்கேஜ் Unlimited D2D அழைப்புகள், D2ND 500 நிமிடங்கள், D2D 1000 SMS மற்றும் 20GB Anytime Data போன்றவற்றை வழங்குகின்றது. அனைத்து பக்கேஜ்களுக்கும் மாதாந்த கட்டணங்கள் அறிவிடப்படும். டயலொக் வியாபார பக்கேஜ் வழங்கும் மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவெனில் எந்தவொரு தனிப்பட்ட டயலொக் இலக்கத்தையும் ரூ.100 ஐ செலுத்தி இந்த வியாபார பக்கேஜ் உடன் இணைத்துக்கொள்ள முடியும். இவ்இரண்டு இணைப்புகளுக்கு இடையில் வரையறையற்ற அழைப்பு நேரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதன் வாடிக்கையாளர்கள் சிறந்த வாடிக்கையாளர் சேவையைப் பெறுவதை உறுதி செய்வதில் டயலொக் உறுதியாக உள்ளது. மொபைல் வியாபார பக்கேஜ்களுக்கு மேலதிகமாக ஒரு வணிகத்தின் அனைத்து தகவல் தொடர்புத் தேவைகளுக்கும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தனிப்பயனாக்கப்பட்ட நிலையான தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சி தீர்வுகளை டயலொக் வழங்குகிறது. இதுவரை, டயலொக்கின் வணிக வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு தேவைகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிப்பட்ட மொன்பொருளை BizCare என்ற பெயரில் வழங்கியுள்ளது. இதனால் அவர்களின் தொலைத்தொடர்பு சேவை தொடர்பான செயல்பாடுகளை எந்த நேரத்திலும் எங்கிருந்தும் நிர்வகிக்க முடியும்.

டயலொக்கின் வியாபார பக்கேஜ்கள் பற்றிய மேலதிக தகவலுக்கு, business.dialog.lk க்கு செல்லுங்கள் அல்லது 0777 887 887 க்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்