பொருள் விரிவாக்கம்

Dialog Home Broadband பொழுதுபோக்கு மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்காக பிரத்தியேக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது

மார்ச் 20, 2022         கொழும்பு

 

Dialog Home Broadband

முடிவில்லாத பொழுதுபோக்குடன் டயலொக் ஹோம் புரோட்பாண்ட் வேகமான மற்றும் நம்பகமான இணைய அனுபவத்தினை வாடிக்கையாளருக்கு கொண்டுவருவதுடன் பொழுதுபோக்கு மற்றும் கேமிங்கிற்கான பல தனித்துவமான, அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டணத்தில் பிற்கொடுப்பனவு மற்றும் முற்கொடுப்பனவு டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் இப்போது Apple TV, Amazon Prime மற்றும் Spotify ஆகியவற்றுக்கு 100GB டேட்டாவுடன் Netflix மற்றும் ViU App க்கு வரையறையற்ற டேட்டாவையும் ரூ. 1,299 மற்றும் வரிகளுக்கு (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) பெற்றுக்கொள்ள முடியும். 7-நாள் திட்டமானது ரூ.499 மற்றும் வரிகளுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் Apple TV, Amazon Prime மற்றும் Spotify ஆகியவற்றிற்கு மேலதிகமாக 20GB ஐயும் Netflix மற்றும் ViU App மூலம் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்வையிட வரையறையற்ற டேட்டாவையும் வழங்குகிறது. மேலும், மியூசிக் டேட்டா திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு 10GB Anytime டேட்டாவையும் பிரத்தியேகமாக இசையைக் கேட்டு மகிழ Spotify இனை ரூ.179 மற்றும் வரிகளுக்கும் வழங்குகிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு சொந்தமான துணை நிறுவனமான டயலொக் ஹோம் புரோட்பாண்ட் பிரைவட் லிமிட்டட் கேமிங்கில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்காக ரூ. 499/- இலிருந்து கேமிங் டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், தற்போதைய சூழ்நிலையில், அலுவலகம் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்காக Work & Learn டேட்டா திட்டங்கள் மற்றும் YouTube ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 495/- என்ற மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இந்த டேட்டா திட்டங்களை பற்றிய மேலதிக தகவல்களை https://www.dialog.lk/hbb-data-add-ons ஊடாக பெற்றுக்கொள்ளுங்கள்.