பொருள் விரிவாக்கம்

டயலொக் எண்டர்பிரைஸ் பாதுகாப்பான தகவல் தொடர்புகளை இயக்க ‘Dialog Sekur’ ஐ செயல்படுத்துகின்றது

May 18, 2021         கொழும்பு

 

news-1

முன்னணி Swiss Secure Data Management மற்றும் Cloud Communications organization GlobeX Data உடன் இணைந்து டயலொக் எண்டர்பிரைசால் ஆரம்பிக்கப்பட்ட Dialog Sekur என்பது ஒரு நிறுவனத்தின் தகவல் தொடர்பு தேவைகளுக்கான பாதுகாப்பான தளமாகும். நிறுவனங்கள் நெகிழ்வான பணிச்சூழல்களுக்கு ஏற்ப தீவிரமாக செயல்படுவதால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவன ஒருமைப்பாட்டை சமரசம் செய்யாமல் மிகவும் சரியான பாதுகாப்பு கருவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான சவாலை எதிர்கொள்கின்றன. எனவே, நிறுவன தகவல்தொடர்புக்கான பாதுகாப்பான, நம்பகமான வழிமுறைகள் கணிசமான சவாலாக மாறிவருகின்ற நிலையில் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களுக்கு (PII) எளிதில் குறிவைக்கப்படுகின்றன.

Dialog Sekur மூலம், நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான தகவல்தொடர்பு பாதுகாப்பு தரவுகளை உறுதிப்படுத்தும் நோக்கில், SekurMessanger, SekurMail மற்றும் SekurSafe ஆகிய பயன்பாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். SekurMessanger, என்பது பாதுகாப்பான chat application ஆகும். Encrypted file transfers, voice messages மற்றும் military-grade encryption உடன் Chat செய்ய உதவுகின்றது. மேலும் metadata சேகரிப்பு இல்லை. பாதுகாப்பான SekurMail anti-phishing தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. உணர்திறன் மிக்க மின்னஞ்சல்களைப் பகிரும்போது ஒரு நிறுவனத்தினை நிம்மதியடையச் செய்ய, இறுதி தனியுரிமை மற்றும் வறையறையற்ற கோப்பு அளவு மின்னஞ்சல்களுக்கான SekurSend தொழில்நுட்பம் ஏராளமான மோசடி மற்றும் அங்கீகாரமற்றவர்களுக்கு தகவல்கள் வெளியிடுவதை தடுக்கும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. SekurSafe ஒரு பாதுகாப்பான தரவு மற்றும் பாதுகாப்பான கோப்பு பகிர்வு கருவியாகும், இது இரகசியத்தன்மையை சமரசம் செய்யாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை கோப்புகளைப் உள்ளேயும் வெளியேயும் பகிர செயற்படும் ஒரு ஆன்லைன் சேமிப்பக தொழில்நுட்பமாகும்.

Sekur தயாரிப்புகள் data-at-rest, data-in-transit மற்றும் data-in-use இன் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருகின்றன. வடிவமைப்பால் தனியுரிமையை இணைத்துக்கொள்வது, Sekur தொகுப்பின் strictest privacy laws உடன் FADP மற்றும் GDPR இன் கடுமையான தனியுரிமைச் சட்டங்களுடன் ஒத்துப்போகிறது, மற்றும் கண்டிப்பாக மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகள் அல்லது metadata சேகரிப்பு இல்லை.

அமெரிக்க தரவு தனியுரிமை சட்டங்களின் கீழ் வரும், Patriot act, Cybersecurity act, அல்லது Cloud act போன்ற ஒரு நிறுவனத்தினை பற்றிய முன் அறிவு இல்லாமல் மூன்றாம் தரப்பினரால் தகவல்களை எளிதாக அணுக முடிவதை போல், இத்தொழில்நுட்பம் செயல்படாது. ஏனெனில் எல்லா தரவும் பாதுகாப்பாக சுவிஸ் அடிப்படையிலான தரவு மையங்களில் இருப்பதால், ஒரு நிறுவனத்தின் தகவல் சுவிஸ் சட்டங்களுக்கு மிக உயர்ந்த தரத்துடன் ஒத்துப்போகிறது. பிரத்தியேக HeliX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து தரவு இடமாற்றங்களும் பாதுகாப்பாக மறைகுறியாக்கப்பட்டு server களுக்கு அனுப்பப்படுகின்றது. VirtualVault தொழில்நுட்பத்தால் server சூழல் பாதுகாக்கப்படுகிறது. இது multiple layers ஐ பயன்படுத்துவதன் மூலமும் GDPR, HIPAA மற்றும் பிற உலகளாவிய தரங்களால் நிர்ணயிக்கப்பட்ட உயர் தரங்களைக் கடைப்பிடிக்கும் virtual இயந்திரங்களுக்கு மாறாக இயல்பியல் server களைப் பயன்படுத்துவதால் NIST-அங்கீகரிக்கப்பட்ட cryptographic தரங்களை விட முன்னோக்கி செல்கின்றது. இத்தொழில்நுட்பம் தானியங்கி backup அமைப்பைக் கொண்டுள்ளதால் எத்தகைய பேரழிவுகளில் இருந்தும் தரவுகளை பாதுகாக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு business.dialog.lk க்கு செல்லுங்கள் அல்லது 0777 887 887 க்கு அழையுங்கள்.