பொருள் விரிவாக்கம்

டயலொக் வாடிக்கையாளர்கள் 2021 இல் Star Points மூலமாக 'லிட்டில் ஹார்ட்ஸ்' க்கு 27 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினர்

2016 முதல் டயலொக் Dialog Star Points மூலம் லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கான மொத்த நன்கொடை ரூ.95 மில்லியனுக்கும் அதிகமாகும்.

மார்ச் 11, 2022         கொழும்பு

 

Dialog Customers Donate Over Rs. 27 Million via Star Points to Little Hearts

படத்தில் இடமிருந்து வலமாக: மனுசத் தெரண திட்டத் தலைவர் மகேஷ் ஜயவர்தன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வணிக மேம்பாட்டு முகாமையாளர் Group Loyalty ஷோன் வாண்டர்வோல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் Group Loyalty மற்றும் சாதன வர்த்தக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் அயோமால் குணசேகர, Little Hearts திட்டத்தின் இணைப்பாளர் டாக்டர் துமிந்த சமரசிங்க, மற்றும் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி / TV தெரணவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மாதவ மடவல

இதய நோய்கள் மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 12 மாடிகள் கொண்ட இருதய மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு ஆதரவாக, 300,000 க்கும் மேற்பட்ட Dialog வாடிக்கையாளர்கள் இணைந்து ‘Little Hearts’ திட்டத்திற்கு 2021 இல் 27 மில்லியன் ரூபாவினை Star Points ஊடாக நன்கொடை வழங்கியுள்ளார்கள். 2016 முதல், டயலொக் வாடிக்கையாளர்கள் லிட்டில் ஹார்ட்ஸ் முன்முயற்சிக்கு Star Points ஊடாக ரூ.95 மில்லியனுக்கு அதிகளவான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

17 மில்லியனுக்கும் அதிகமான டயலொக் வாடிக்கையாளர்களை லிட்டில் ஹார்ட்ஸ் திட்டம் உட்பட தாங்கள் விரும்பும் வேறு எந்தவொரு தொண்டு நிறுவனத்திற்கும் தங்களுடைய Star Points ஐ நன்கொடையாக வழங்க ஊக்குவித்தது. இலங்கை குழந்தை மருத்துவர் கல்லூரி தலைமையில் (Sri Lanka College of Paediatricians ) ‘Little Hearts’ திட்டத்தின் கீழ் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டிடத்தில் நான்கு இருதய சத்திரசிகிச்சை ஆய்வகங்கள், 100 க்கும் மேற்பட்ட இருதய, மருத்துவ மற்றும் நியோ-நேட்டல் தீவிர சிகிச்சை படுக்கைகள், மற்றும் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள், எலும்பு மாற்று சிகிச்சை பிரிவு என்பன அமைக்கப்படவுள்ளது. மற்றும் அதிநவீன இருதய பரிசோதனை மற்றும் பயிற்சி வசதிகளும் காணப்படுகின்றது. கட்டுமான செலவு ரூ. 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் செய்தித் தொடர்பாளர், “லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 மாடிகளைக் கொண்ட இருதய மற்றும் பராமரிப்பு வளாகத்தின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் Star Points ஐ நன்கொடையாக வழங்கி தாராள ஆதரவினை வழங்கிய எமது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இதய நோயுடன் போராடும் ஒவ்வொரு குழந்தையும் சிறப்பு மிக்க கவனிப்புக்கு தகுதியானவர் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த காரணத்திற்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைவரையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பிற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.

“லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தின் இணைப்பாளர் டாக்டர் துமிந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், “லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து தங்கள் வாடிக்கையாளர்களின் Star Points ஐ நன்கொடை வழங்குவதற்கான தேசிய திட்டத்தினை முன்னெடுத்த டயலொக் ஆசிஆட்டாவிற்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த தாராள நன்கொடையை வழங்க முன்வந்த அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் குறிப்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம், ஏனெனில் அவர்களின் ஆதரவு இல்லாமல் தேசத்தின் குழந்தைகளின் வாழ்க்கையில் எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய சேவையை செயல்படுத்துவதற்கு Star Points ஊடாக ஒன்றாக இணைந்து நிதியளித்தலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு” என தெரிவித்தார்.

Little Hearts திட்டத்திற்கு மேலதிகமாக, Dialog வாடிக்கையாளர்கள் Trail, SOS Children's Villages Sri Lanka, Helpage Sri Lanka, My Friend, UNICEF, Atlas SipSavi, CCC அறக்கட்டளை மற்றும் Ayati அறக்கட்டளை உட்பட பல குறிப்பிடத்தக்க தொண்டு நிறுவனங்களுக்கும் தங்கள் Star Points ஐ நன்கொடையாக வழங்கியுள்ளனர்.