பொருள் விரிவாக்கம்

டயலொக் கடற்கரை கால்பந்து ஏப்ரல் மாதத்தில் அம்பாந்தோட்டையில் ஆரம்பமாகின்றது.

ஏப்ரல் 01, 2021         Colombo

 

news-1

இலங்கை கால்பந்து கூட்டமைப்பு, தலைவர், அனுர டி சில்வா மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், வர்த்தக மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க

இலங்கை கால்பந்து கூட்டமைப்பு (FFSL) ஏற்பாட்டில் டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரனையுடன் நடைபெறும் டயலொக் கடற்கறை கால்பந்து சாம்பியன்ஷிப் 2021 ஏப்ரல் 03 ஆம் தேதி அம்பாந்தோட்டையில் உள்ள இலங்கையின் அழகான கடற்கரையில் ஆரம்பமாகிறது.

டயலொக் கடற்கறை கால்பந்து போட்டிகள் முதலில் 2020 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பினும் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சாம்பியன்ஷிப்பின் முக்கிய நோக்கம் கடற்றை கால்பந்தை நாட்டில் ஊக்குவிப்பதும், இலங்கை கடற்றை கால்பந்து தேசிய அணியில் புதிய திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதும் ஆகும். நான்கு போட்டிதொடர்களில் இதுவே ஆரம்ப போட்டி தொடராகும். ஏனைய போட்டி தொடர்கள் கல்முனை, வல்வெட்டித்துரை, மற்றும் நீர்கொழும்பில் நடைபெறும்.

அம்பாந்தோட்டையில் நடைபெறவிருக்கும் டயலொக் கடற்கறை கால்பந்து போட்டி தொடரில் அம்பாந்தோட்டை கிங்ஸ், அம்பாந்தோட்டை ஹார்னெட்ஸ், மாத்தறை மெரைன்ஸ், மாத்தறை ஈகள்ஸ், காலி ஸ்டாலியன்ஸ், காலி ஜயன்ட்ஸ், அம்பலங்கொட டைடன்ஸ், அம்பலங்கொட எவென்ஜர்ஸ், பேருவல ப்ளூஸ், பேருவல லயன்ஸ், களுத்தரை ரோயல்ஸ், மற்றும் களுத்தரை நைட்ஸ் ஆகிய அணிகள் முதல் 12 அணிகளாக கலந்துக்கொள்ளும்.

பல ஆண்டுகளாக இலங்கையில் கால்பந்தின் வெற்றி மற்றும் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்த டயலொக், “கடற்றை கால்பந்து சாம்பியன்ஷிப் 2021” இன் முதன்மை அனுசரனையாளராக மீண்டும் FFSL உடன் கைகோர்த்து இலங்கை கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

கடற்கறை கால்பந்து என்பது நாங்கள் உண்மையுடன் பணியாற்றி பல வெற்றிகளை உருவாக்கக்கூடிய ஒரு விளையாட்டு என FFSL தலைவர் திரு. அனுர டி சில்வா, கூறினார். நாட்டில் நடத்தப்படும் சர்வதேச நிகழ்வுகளுடன் நாட்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச மட்டத்திற்கு செல்வதற்கான நிகழ்வுகளுடன் ஒரு மூலோபாயத்தை நாங்கள் உருவாக்கும் பட்சத்தில் விளையாட்டு வெற்றிகரமானதாக இருக்கும். சுற்றுலாத்தளத்திற்கான மிக அழகான கடற்கரைகள் பல எங்களிடம் உள்ளதுடன், அவை கடற்கரை கால்பந்தாட்டத்திற்கும் பயன்படுத்தப்படலாம். தொழில்நுட்ப ரீதியாக, ஒரு சிறிய சுற்றளவுக்குள்ளும், களத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடனும் விளையாடுவதால், சிறந்த செயல்திறனை நாங்கள் காணலாம். இது இலங்கைக்கு சாதகமான புள்ளியாக மதிப்பிடப்படலாம். “FFSL இன் ஃபுட்சல் & பீச் சொக்கர் குழு மற்றும் அனைத்து அணிகளும் சாம்பியன்ஷிப்பில் காட்டிய மிகச் சிறந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டில் விளையாட்டுகளை வளர்ப்பதற்கான அவர்களின் ஆதரவிற்காகவும், குறிப்பாக நீண்ட காலமாக கால்பந்து மீதான அவர்களின் அர்ப்பணிப்புக்கான அனைத்து பாராட்டுகளும் டயலொக்கினையே சாரும் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் கால்பந்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த தருணம். என புட்சல் & பீச் சொக்கர் குழு தலைவர் திரு. முகமது ரமீஸ் பெருமையுடன் கூறினார், எங்கள் நாடு எப்போதுமே கடற்கரை கால்பந்தாட்டத்திற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இறுதியாக, இதை அடைய நாங்கள் முன்னேற்றமடைகிறோம். நாடு முழுவதும் பீச் சொக்கர் விளையாட்டை ஊக்குவிக்கப்படுவதுடன் இலங்கை பீச் சொக்கர் தேசிய அணியை உருவாக்க பீச் சொக்கரில் சிறந்த திறமைகளை அடையாளம் காண இந்த போட்டிகளைப் பயன்படுத்துவோம். எங்களுடன் இந்த பயணத்தில் கலந்து, இலங்கையில் கால்பந்து வளர்ச்சிக்கு மீண்டும் உதவியதற்காக டயலொக்கிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். ”

கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோயால் பின்தள்ளப்பட்ட இலங்கை விளையாட்டுகளைத் தொடங்க FFSL உடன் கைகோர்த்துக்கொண்டதில் டயலொக் பெருமிதம் கொள்கிறது, ”என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி. நிறுவனத்தின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ச சமரநாயக்க கூறினார். "கால்பந்து இதுவரை உலகிலேயே அதிகம் விளையாடப்படும் விளையாட்டாகும், மேலும் இலங்கையைச் சுற்றியுள்ள மணல் கடற்கரைகளுடன் விளையாட்டை இணைப்பது விளையாட்டை வளர்ப்பதற்கான ஒரு தெளிவான தேர்வாக காணப்படுவதினால் இலங்கை இளைஞர்களுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கான சிறந்த வாய்ப்பும் ஆகும். டயலொக் பீச் சொக்கர் சாம்பியன்ஷிப்பை ஒரு வெற்றிகரமான போட்டியாக அமைய எனது வாழ்த்துக்கள் என சமரநாயக்க மேலும் கூறினார்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கையின் தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளுக்கு அனுசரணை வழங்குவதுடன் ஜனாதிபதி தங்கக் கோப்பை கைப்பந்து, தேசிய சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட நெட்பால் போட்டிகள், கிளப் ரக்பி, பாடசாலை ரக்பி, பிரீமியர் கால்பந்து, பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகள், ஜூனியர் கைப்பந்து மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் நிறுவனம் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது - அதே நேரத்தில் இராணுவ பரா விளையாட்டு, தேசிய பரா விளையாட்டு மற்றும் இலங்கை ஒலிம்பிக் மற்றும் உலக பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அனுசரணை வழங்குகின்றது.