பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'கிராமத்திற்கு தொலைத்தொடர்பு வசதி' (கமட்ட சன்நிவேதனய) திட்டத்துடன் இணைந்து கொண்டுள்ளது.

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டம் இரத்தினபுரியில் ஆரம்பம்.

2021 மார்ச் 2         கொழும்பு

 

news-1

டயலொக் ஆசிஆட்டா மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களின் இணைவில் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு வசதி’ செயற்றிட்டம்.
இடமிருந்து வலமாக: ஸ்ரீரியானி மாவெல்லகே (பிரதி பணிப்பாளர் - போட்டி பிரிவு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு) சுப்புன் வீரசிங்ஹ (குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) ஓ~த சேனாநாயக்க (பணிப்பாளர் நாயகம் - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு) சுதத் வக்கிஸ்ட்ட (பிரதி பணிப்பாளர் - ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவ பிரிவு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு) மற்றும் பிரதீப் டி அல்மேதா (குழும தொழில்நுட்ப தலைமை அதிகாரி - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி)

news-1

‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு சேவை’ செயற்றிட்டத்தின் கட்டுமான ஆரம்பப்பணிகள் இரத்தினபுரி மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோது.

அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைத்து முழுநாட்டையும் டிஜிட்டல் மயப்படுத்தும் நோக்கத்திற்கமைய டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தினால் (டயலொக்), இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு வசதி’ செயற்றிட்டத்தின் முதற்கட்டம் இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் புதிதாக 37 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவும் தலைமைத்திட்டமானது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், டயலொக் நிறுவனத்தினால் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதமளவில் இதன் 18 தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு சேவையின் அடுத்த கட்டமாக குருணாகல், மாத்தறை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்களிலும் 4G தொலைத்தொடர்பு வசதிகளை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுவருவதுடன், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் 100% கவரேஜ் வசதிகளை வழங்குவதுமே இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வின்போது தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒ~த சேனாநாயக்க அவர்கள் தெரிவித்ததாவதுää 'இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவும் டயலொக் நிறுவனமும் ஒன்றிணைந்து இன்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தின் 'நாபாவல” கிராமத்திலிருந்து ஆரம்பித்துள்ள ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு சேவை’ எனும் இந்த வேலைத்திட்டமானது உன்னதமான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இதனையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த வேலைதிட்டத்தின் மூலம் நாம் எதிர்பார்ப்பது என்னவெனில், முழு நாட்டையும் டிஜிட்டல் மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தேவைப்படுகின்ற அடிப்படை தொலைத்தொடர்பு வசதிகளை செய்து கொடுப்பதேயாகும். இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக இந்த வருடத்தில் குருணாகல், மாத்தறை மற்றும் அனுராதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் தொலைத்தொடர்பு வசதிகளை விரிவாக்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் முழு இலங்கைக்கும் 100% கவரேஜ் வசதிகளை பெற்றுக்கொடுப்பதே நமது நோக்கமாகும்".

இது தொடர்பில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவன குழும தலைமை நிர்வாக அதிகாரி, சுபுன் வீரசிங்ஹ அவர்கள் தெரிவித்ததாவது, 'கற்றல் மற்றும் அலுவலக பணிகளை வீட்டிலிருந்தவாறே மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளமையினால் தொலைத்தொடர்பு சேவைகளின் முக்கியத்துவத்தை முழு நாடும் நன்றாக உணர்ந்துள்ள ஒரு நிலையில் நாட்டிலுள்ள கிராமிய பிரதேசங்களில் 4G தொலைத்தொடர்பு வசதிகளை விரிவாக்கம் செய்து, நமது டயலொக் வாடிக்கையாளர்களுக்கு உன்னதமானவோர் சேவையை ஆற்றுவதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுடன் ஒன்றிணைந்து ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு சேவை’ வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடிந்துள்ளமையையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். எதிர்வரும் மாதங்களிலும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு நமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் கிராமத்திற்கு தொலைத்தொடர்பு வசதி செயற்றிட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு நாம் முனைப்புடன் உள்ளோம்”.