Devices  Offers
Devices  Offers

Dialog Mega அதிர்ஷ்டம் மூலம் ரூபாய் 1 மில்லியனை வெற்றி பெறும் வழிமுறை

 

இலங்கையின் மிகப்பெரிய சீட்டிழுப்பான Dialog Mega அதிர்ஷ்டத்தில் பங்குபற்றுவதன் மூலம் எண்ணிலடங்காதப் பெறுமதி மிக்க பரிசில்களை வெல்லும் வாய்ப்பினை Dialog தன் வாடிக்கையாளர்களுக்குக் வழங்குகிறது. Dialog முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பாவனையாளர்கள் தங்களின் Dialog ரீலோட்கள், Home Broadband அல்லது Dialog TV கணக்குகள் மற்றும் தங்களின் நிலுவைகளைச் செலுத்துவதன் மூலமாக இப்பரிசில் பெறும் வாய்ப்புகளுக்கு தகுதிப்பெறுகின்றனர்.

மாதாந்த மற்றும் நாளந்தப் பணப்பரிசளிப்புகள் உடனடியாகச் செயற்படுத்தப்படுவதுடன் இத்திட்டமானது மக்களின் அபிமானத்திற்குரியதாகவும் விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

வெற்றிப்பெறும் முறை

ரீலோட்கள், Planகளைச் செயற்படுத்தல், Dialog நிலுவை கட்டணங்களைச் செலுத்தி முடித்தல், Home Broadband, Dialog Tv சேவைகள் மூலம் வெற்றி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி நாளாந்த மற்றும் மாதாந்தச் சீட்டிழுப்புகளின் ஊடாக வெற்றிப்பெறுவதற்கான சந்தர்ப்பமும் அளிக்கப்படுகிறது.

மேலும், தங்களின் ரீலோட், PLANகளைச் செயற்படுத்தல், கட்டணங்களை இரட்டிப்பாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு போனஸ் பரிசில்களை வெல்லும் வாய்ப்புகளும் அவ்வப்போது வழங்கப்படுகிறது.

தங்களுக்கான வெற்றி வாய்ப்புச் சந்தர்ப்பங்களைத்

தொடர்ந்து அவதானிக்க MyDialog Appஇனைப் பயன்படுத்தவும். ஒருவேளை MyDialog Appஇனை இன்னும் தரவிறக்கவில்லையாயின், இந்த Linkஇனை Click செய்யவும். மாறாக, தங்களின் வெற்றிவாய்ப்புகளைப் பார்க்க #121# இற்கு dial செய்து அல்லது 077712121க்கு அழைப்பினை மேற்கொள்வதினூடாகவும் அறிந்து கொள்ளலாம்.

ரூபாய் 1 மில்லியன் வரையிலான பணப்பரிசு

மாதாந்தம் ஓர் அதிர்ஷ்ட வாடிக்கையாளருக்கு ரூபாய் 1 மில்லியனை வெல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது. மேலதிக வெற்றி விபரங்கள் மற்றும் ஏனைய வாய்ப்புகள் குறித்தத் தகவல்களை அறிய, Dialog Mega அதிர்ஷ்டம் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

வெற்றியாளர்களின் கருத்து

ஒக்டோபர் 11, 2022 இல் Dialog Mega அதிர்ஷ்டம் திட்டத்தின் முதல் வெற்றியாளர்களுக்கு Dialog தலைமைக் காரியாலத்தின் பிரதான கூடத்தில் வைத்து பரிசில்களைப் பெறுவதற்கான வசதிகள் கொழும்பில் செய்துக்கொடுக்கப்பட்டன.

மொத்தப் பரிசளிப்புத் தொகையாக ரூபாய் 300 மில்லியன் Dialog Mega அதிர்ஷ்டம் திட்டத்தில் இருந்ததோடு, நிகழ்வில் ரூபாய் 1 மில்லியன் முதல் ரூபாய் 1,00,000.00 வரைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் தெகிவளையைச் சேர்ந்த திரு.ALM மில்ஹான் மற்றும் வத்தளையைச் சேர்ந்த திருமதி. நிஷாந்தினி லொகுலியனகே ஆகியோர் ரூபாய் 1 மில்லியனை வெற்றிக்கொண்ட அதிர்ஷ்டசாலிகளாவர்.

'நான் எனது 24வது வயதிலிருந்து Dialog உபயோகிக்கிறேன். 1998ல் இருந்து நானும் Dialogகும் இணைந்துள்ளோம். நான் Dialogற்கு கடமைப்பட்டுள்ளேன்." என்று திரு. மில்ஹான் தெரிவித்தார். மேலும் இந்தத்தொகையைத் தனது குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்காக ஒதுக்குவதாகவும் கூறினார்.

How To Win Rs 1 Million With Dialog Mega Wasana How To Win Rs 1 Million With Dialog Mega Wasana

எளிய நிபந்தனைகளும் விதிமுறைகளும்

Dialog தனது வாடிக்கையாளர்களுக்கான வெற்றி வாய்ப்புகளை வெளிப்படைத்தன்மையோடும், நம்பகத்தன்மையோடும், சமமாகப் பகிர்ந்தளிப்படும் நெறிமுறைகளோடும் கூடிய திட்டவரைபை நடைமுறைப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்கதாக, Mega அதிர்ஷ்டம் சீட்டிழுப்பில் பெருநிறுவனங்களோடு இணைந்துப் பதியப்பட்ட நிறுவனங்கள், Dialog ஊழியர்கள், தனியார்த்துறை/ செல்வந்தத் தனிநபர்கள், வெளிநாட்டவர்கள் அல்லது இலங்கையர் அல்லாதவருக்கு பங்கேற்க முடியாது.

இருப்பினும், மேற்குறிப்பட்ட பட்டியலில் அடங்காத அனைத்து Dialog முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு பாவனையாளர்கள், Home Broadband, மற்றும் Dialog TV பாவனையாளர்களும் Dialog Mega அதிர்ஷ்டம் திட்டத்தில் பங்கேற்கவும், பரிசில்களைப் பெறவும் தகுதியுடையவர்களாவர்.

முக்கியமாகக் கருத்திற்கொள்ளவேண்டியது பரிசிலை வென்றவர் ஒரு வாரத்திற்குள் அதற்கான உரிமையைக்கோராதவிடத்து அவ்வாய்ப்பு காலாவதியானதாக அல்லது செல்லுபடியற்றதாக கொள்ளப்படும். மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள Dialog Mega அதிர்ஷ்டம். என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

அடுத்த வெற்றியாளராக நீங்கள் மாற எமது வாழ்த்துகள்.

Updated on 24/05/2023